Back to homepage

Tag "நாடாளுமன்றத் தேர்தல்"

நாடாளுமன்றத் தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும்: பசில் வலியுறுத்தல்

நாடாளுமன்றத் தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும்: பசில் வலியுறுத்தல் 0

🕔14.Mar 2024

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படுவதையே விரும்புவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ‘நியுஸ் பெஸ்ட்’ செய்திச் சேவையிடம் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது மக்களின் யதார்த்தத்தை துல்லியமாக பிரதிபலிக்காது என்றார். ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வேட்பாளர் ஒரு வாக்கு வித்தியாசத்தில்

மேலும்...
அடுத்த வருடம் இரண்டு தேர்தல்கள் நடத்தப்படும்: நாடாளுமன்றில் ஜனாதிபதி உறுதி

அடுத்த வருடம் இரண்டு தேர்தல்கள் நடத்தப்படும்: நாடாளுமன்றில் ஜனாதிபதி உறுதி 0

🕔22.Nov 2023

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் அடுத்த வருடம் கண்டிப்பாக நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (22) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட உரை நிகழ்த்திய போது, இதனைக் கூறினார். “வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி. எதிராக வாக்களித்தவர்களுக்கும் நன்றி” என

மேலும்...
“ஜனநாயகத்தை இவர்கள் கேலி செய்கிறார்கள்”: மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் குற்றச்சாட்டு

“ஜனநாயகத்தை இவர்கள் கேலி செய்கிறார்கள்”: மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் குற்றச்சாட்டு 0

🕔19.Mar 2023

– நூருல் ஹுதா உமர் – உள்ளூராட்சி மன்ற தேர்தலின் மூலம் இப்போதைய நிலையில் நாட்டுக்கு நன்மை கிடைக்காது என்று கூறி – தேர்தலை இழுத்தடிக்க முனைவோர் உடனடியாக நாடாளுமன்ற தேர்தலை நடத்த முன்வரவேண்டும் என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார். அவ்வாறு நடத்தப்படும் தேர்தலின்

மேலும்...
கனடா நாடாளுமன்றத் தேர்தல்; ஜஸ்டின் ட்ரூடோ பிரமராகிறார்: ஆனாலும் பெரும்பான்மை இல்லை

கனடா நாடாளுமன்றத் தேர்தல்; ஜஸ்டின் ட்ரூடோ பிரமராகிறார்: ஆனாலும் பெரும்பான்மை இல்லை 0

🕔21.Sep 2021

கனடா நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத நிலையிலும், தனது பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். மூன்றாவது முறையாகப் பிரதமராகும் ஜஸ்டின் ட்ரூடோ, தனது மனைவியுடன் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். கனடாவில் கடந்த இரண்டாண்டுகளில் நடந்திருக்கும் இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தல் இதுவாகும். கடந்த தேர்தலில் பெரும்பான்மை இல்லாததால், ஜஸ்டின் ட்ரூடோவால் முக்கிய சட்டங்களை நிறைவேற்ற

மேலும்...
வாக்குச் சீட்டை படம் எடுத்தவர் கைது

வாக்குச் சீட்டை படம் எடுத்தவர் கைது 0

🕔5.Aug 2020

வாக்குச் சீட்டில் அடையாளம் இட்டதன் பின்னர் அதனை கைப்பேசியில் படம் எடுத்த ஒருவரை, நாவலபிட்டி பொலிஸார் இன்று கைது செய்தனர். நாவலப்பிட்டி – ஒம்புல்பிட்டிய எனும் இடத்தில் வசிக்கும் 32 வயதான நபர், இன்று காலை நாவலபிட்டிய மத்திய கல்லூரியில் வாக்களிக்கும் போது, தனது வாக்குச் சீட்டில் அடையாளம் இட்டதன் பின்னர் அதனை படம் எடுத்தார்.

மேலும்...
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு; சுமூகமாக நடைபெறுகிறது

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு; சுமூகமாக நடைபெறுகிறது 0

🕔5.Aug 2020

– முன்ஸிப் அஹமட் – நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று புதன்கிழமை காலை 7.00 மணி முதல் நடைபெற்று வருகிறது. இம்முறை கொரோனா அச்ச சூழ்நிலைகளுக்கு மத்தியில் வாக்களிப்பு நடைபெறுவதால், சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. வாக்களிக்கச் செல்வோர் மாஸ்க் அணிந்து செல்லுதல், வாக்களிப்பு நிலைய வளாகத்தினுள் கைகளைக் கழுவுதல் போன்றவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன. அதேவேளை வாக்களிப்பு

மேலும்...
தலைவிதி: எழுதுவதற்கான கையேடு

தலைவிதி: எழுதுவதற்கான கையேடு 0

🕔4.Aug 2020

– முகம்மது தம்பி மரைக்கார் – கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல், இரண்டு தடவை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் நாளைய தினம் நடைபெறவுள்ளது. 196 பேரைத் தெரிவு செய்வதற்கான இந்தத் தேர்தலில் 7452 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில் 3652 பேர் அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிடுகின்றனர். 3800 வேட்பாளர்கள்

மேலும்...
வலது குறைந்தோர் வாக்களிக்க, சிறப்பான நடைமுறை ஏற்பாடாகியுள்ளது

வலது குறைந்தோர் வாக்களிக்க, சிறப்பான நடைமுறை ஏற்பாடாகியுள்ளது 0

🕔3.Aug 2020

வலது குறைந்தோருக்கு வாக்களிக்க சிறப்பான நடைமுறையொன்று பின்பற்றப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ரகசியத் தன்மையை பேணி வலதுகுறைந்தோர் வாக்களிக்க சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும் என, வலது குறைந்தோரின் சங்கம் முன்வைத்த வேண்டுகோளுக்கமையவே இந்த நடைமுறை ஏற்பாடாகியுள்ளது. இதேவேளை, உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை இதுவரை பெற்றுக்கொள்ள தவறியவர்கள் நாளையும் (04) நாளை மறுதினமும் (05) தபால்

மேலும்...
வாக்கெண்ணும் நிலையங்கள், இம்முறை இரு மடங்காக அதிகரிப்பு

வாக்கெண்ணும் நிலையங்கள், இம்முறை இரு மடங்காக அதிகரிப்பு 0

🕔26.Jul 2020

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கெண்ணும் நிலையங்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கடந்த பொதுத் தேர்தலில் வாக்கெண்ணும் நிலையங்களின் எண்ணிக்கை 1420 ஆக இருந்தது. ஆனால் இம்முறை சுகாதார வழிகாட்டுதலுக்கு இணங்கவும், முடிவுகளை விரைவாக அறிவிப்பதற்காகவும் வாக்கெண்ணும் நிலையங்களின்

மேலும்...
வாக்குச் சாவடி ஊடாக கொரோனா தொற்று பரவாது: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உறுதி

வாக்குச் சாவடி ஊடாக கொரோனா தொற்று பரவாது: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உறுதி 0

🕔24.Jul 2020

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குச் சாவடிகள் ஊடாக, கொரோனா தொற்று பரவாது என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய உறுதியளித்தார். வர்த்தமானி மூலம் சுகாதார அமைச்சு அறிவித்துள்ள சுகாதார வழிகாட்டுதல்களை முறையாக கடைபிடிக்கும் போது, கொரோனா பரவல் ஏற்படாது என்று மக்களுக்கு உறுதியளிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். ஊடகங்களுக்கு நேற்று வியாழக்கிழமை அவர் இதனைத்

மேலும்...
75 கள்ள வாக்குகள் போட்டதாக வேட்பாளர் ஒருவர் பேசியமை தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: மஹிந்த தேசப்பிரிய

75 கள்ள வாக்குகள் போட்டதாக வேட்பாளர் ஒருவர் பேசியமை தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: மஹிந்த தேசப்பிரிய 0

🕔14.Jul 2020

நாடாளுமன்றத் தேர்தல் நடவடிக்கைகளில் ஒருபோதும் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்படமாட்டார்கள் என்றும், பொலிஸார் மாத்திரமே தேர்தல் கடமையில் ஈடுபடுவார்கள் எனவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு விஜயத்தினை மேற்கொண்டு அரச அதிகாரிகளைச் சந்தித்துப் பேசிய போதே, அவர் இதனைக் கூறினார். அப்போது அவர் மேலும் தெரிவிக்கையில்; “ஏனைய மாவட்டங்களோடு ஒப்பிடும் போது

மேலும்...
தேர்தலை உடனடியாக ஒத்தி வைக்க வேண்டும்: சஜித் பிரேமதாஸ கோரிக்கை

தேர்தலை உடனடியாக ஒத்தி வைக்க வேண்டும்: சஜித் பிரேமதாஸ கோரிக்கை 0

🕔13.Jul 2020

தேர்தலை உடனடியாக அரசாங்கம் ஒத்திவைக்க வேண்டும் என, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். அத்துருகிரிய பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இந்தக் கோரிக்கையினை முன்வைத்துள்ளார். கொரோனா இரண்டாவது அலை பற்றிய அனைத்து தகவல்களையும் அரசாங்கம் மட்டுமே வௌயிடுகிறது எனக் கூறிய அவர்; இந்த தகவல்களின் உண்மை தன்மை

மேலும்...
20ஆம் திகதி வரை தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பம்: அனுராதபுரத்தில் ஒத்தி வைப்பு

20ஆம் திகதி வரை தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பம்: அனுராதபுரத்தில் ஒத்தி வைப்பு 0

🕔13.Jul 2020

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இம்மாதம் 20 ஆம் திகதி வரை நடைபெறும். இன்றைய தினம் ஆரம்பித்த தபால் மூல வாக்களிப்பில் பிரதேச சுகாதார பணியாளர்கள் காலை 09 மணி முதல் மாலை 04 மணி வரை வாக்களித்தனர். சமூக இடைவெளியை பேணல், முகக் கவசங்களை அணிதல், கைகளை கிருமி தொற்று நீக்கம் செய்துக்கொள்ளல்

மேலும்...
திசைகாட்டிகளின் முட்கள்

திசைகாட்டிகளின் முட்கள் 0

🕔7.Jul 2020

– முகம்மது தம்பி மரைக்கார் – முகம்மது நபியவர்களின் மறைவுக்குப் பின்னர் இஸ்லாமிய ராஜ்யத்தின் இரண்டாவது ‘கலீபா’வாக (ஆட்சியாளர்) பதவி வகித்தவர் உமர் (ரலி). அவரின் பேரரசு – வடக்கு ஆபிரிக்கா வரை பரந்திருந்தது. உமரின் ஆட்சி நிருவாகம் பற்றி உலகளவில் இன்றுவரை சிலாகித்துப் பேசப்படுவதுண்டு. “உமருடைய ஆட்சியைப் போன்று இந்தியாவில் ஆட்சி அமைய வேண்டும்”

மேலும்...
பொதுத் தேர்தல்: வாக்களிப்பு நேரத்தில் மாற்றம்

பொதுத் தேர்தல்: வாக்களிப்பு நேரத்தில் மாற்றம் 0

🕔6.Jul 2020

நாடாளுமன்றத் தேர்தல் தினத்தன்று வாக்களிப்பு நேரத்தை ஒரு மணித்தியாலத்தினால் நீடிப்பதற்கு தீரமானம் எடுக்கப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அதற்கிணங்க காலை 7.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை வாக்களிப்பு இடம்பெறும். வாக்கெண்ணும் நடவடிக்கையும் – வாக்களிப்பு தினத்துக்கு மறுநாளே இடம்பெறும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்