Back to homepage

Tag "தேசிய பொலிஸ் ஆணைக்குழு"

சம்பிக்கவின் கைது சட்டரீதியானது: பொலிஸ் ஆணைக்குழுவுக்கு பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு

சம்பிக்கவின் கைது சட்டரீதியானது: பொலிஸ் ஆணைக்குழுவுக்கு பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு 0

🕔30.Dec 2019

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவை கைது செய்தமை சட்ட ரீதியான நடவடிக்கை என்று பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன – தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்குத் தெரிவித்துள்ளார். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு கடந்த 27ஆம் திகதி அழைப்பு விடுத்த போது, இதனை வாய்மொழி மூலமாக பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்ததாக, பொலிஸ்

மேலும்...
பொலிஸ் ஆணைக்குழுவுக்கு முள்ளந்தண்டில்லை: ஆசாத் சாலி

பொலிஸ் ஆணைக்குழுவுக்கு முள்ளந்தண்டில்லை: ஆசாத் சாலி 0

🕔7.Aug 2019

குருநாகல் பிரதி பொலிஸ் மா அதிபர் கித்சிறிஜெயலத்தின் இடமாற்ற விடயத்தில் தேசிய பொலிஸ் ஆணைக்குழு,  காலையில் ஒரு முடிவும் மாலையில் ஒரு முடிவும் மேற்கொண்டதிலிருந்து இந்த ஆணைக்குழுவினர் முள்ளந்தண்டில்லாதவர்களென நிரூபித்துள்ளனர் என்று, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான ஆசாத் சாலி தெரிவித்தார். இன்று புதன்கிழமை ராஜகிரியவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு

மேலும்...
குருணாகல் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் இடமாற்றம் ரத்து

குருணாகல் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் இடமாற்றம் ரத்து 0

🕔2.Aug 2019

குருநாகல்  பிரதேசத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத்தை இடமாற்றம் செய்ய வழங்கப்பட்ட அனுமதி ரத்துச்செய்யப்பட்டுள்ளது. குறித்த இடமாற்றத்துக்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு, நேற்று வியழக்கிழமை அனுமதி வழங்கியிருந்தது. இதற்கமைய, பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத், திருகோணமலை பகுதிக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பிரதிப் பொலிஸ் மாஅதிபர்

மேலும்...
உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக, பெண்கள் மூவருக்குப் பதவி உயர்வு

உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக, பெண்கள் மூவருக்குப் பதவி உயர்வு 0

🕔12.Feb 2019

பிரதம பொலிஸ் பரிசோதகர் தரத்திலுள்ள மூன்று பெண்கள், உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளனர் என்று, பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேற்படி மூவரினதும் சிரேஷ்டத்துவம் மற்றும் திறமை ஆகியவற்றினை அடிப்படையாகக் கொண்டு, இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. 2015 பெப்ரவரி 27ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில், இந்த பதவி உயர்வுகளை வழங்குவதற்கு, தேசிய பொலிஸ்

மேலும்...
நாலக சில்வாவை சேவையிலிருந்து இடைநிறுத்த, தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி

நாலக சில்வாவை சேவையிலிருந்து இடைநிறுத்த, தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி 0

🕔17.Oct 2018

பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவை சேவையிலிருந்து இடைநிறுத்துவதற்கு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்வது தொடர்பில், பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவின் தொலைபேசி உரையாடலொன்று அண்மையில் வெளியாகி இருந்தது. இதனையடுத்து இது தொடர்பான

மேலும்...
ராஜாங்க அமைச்சர் ரங்க பண்டாரவை, உதவி பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்த்துமாறு, பொலிஸ் ஆணைக்குழு சிபாரிசு

ராஜாங்க அமைச்சர் ரங்க பண்டாரவை, உதவி பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்த்துமாறு, பொலிஸ் ஆணைக்குழு சிபாரிசு 0

🕔24.Dec 2017

தற்போதைய ராஜாங்க அமைச்சரும் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தருமான பாலித ரங்க பண்டாரவை, உதவி பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்த்துமாறு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. ஓய்வு பெற்ற உதவி பொலிஸ் பரிசோதகராக பணியாற்றிய போது, பாலித ரங்க பண்டார ஓய்வு பெற்று, அரசியலுக்குள் நுழைந்தார். இந்த நிலையில், தான் பொலிஸ் சேவையில் கடமையாற்றிய போது, அரசியல் பழிவாங்கலுக்கு

மேலும்...
துஷ்பிரயோகம் செய்யப் போவதாக மிரட்டினார்; பொலிஸ் மா அதிபருக்கு எதிராக, பெண் பொலிஸ் உத்தியோகத்தர் முறைப்பாடு

துஷ்பிரயோகம் செய்யப் போவதாக மிரட்டினார்; பொலிஸ் மா அதிபருக்கு எதிராக, பெண் பொலிஸ் உத்தியோகத்தர் முறைப்பாடு 0

🕔14.Aug 2017

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். தன்னை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப் போவதாக, பொலிஸ் மா அதிபர் மிரட்டியதாக, மேற்படி பெண் பொலிஸ் உத்தியோகத்தர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். பூஜித ஜயசுந்தர பொலிஸ்மா அதிபராக பதவியேற்ற பின்னர், பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவரும் காலையில் 8.30

மேலும்...
பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் ராஜிநாமா

பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் ராஜிநாமா 0

🕔6.Jan 2017

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து பேராசிரியர் ஸ்ரீ ஹெட்டிகே ராஜிநாமா செய்துள்ளார். இவர் தனது ராஜினாமா கடிதத்தை அரசியலமைப்பு சபையின் தலைவர் சபாநாயகர் கரு  ஜயசூரியவுக்கு 10 நாட்களுக்கு முன்னர் அனுப்பி வைத்துள்ளார். ஆயினும், இவருடைய ராஜினாமா கடிதத்தை அரசியலமைப்புச் சபை பொறுப்பேற்றுக் ஏற்றுக் கொண்டமை பற்றி, இதுவரை அறிவிக்கவில்லை என்று, பேராசிரியர் ஹெட்டிகே தெரிவித்துள்ளார். ஜேர்மனியிலுள்ள

மேலும்...
விசேட அதிரடிப்படை தளபதியாக, லத்தீப் நியமனம்

விசேட அதிரடிப்படை தளபதியாக, லத்தீப் நியமனம் 0

🕔18.Aug 2016

பொலிஸ் விசேட அதிரடிப்படை தளபதியாக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர். லத்தீப் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று வியாழக்கிழமை இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழு, இந்த நியமனத்துக்கான பரிந்துரையை, வழங்கியிருந்தது. ஆயினும், குறித்த பரிந்துரையை இதுவரை காலமும் செயற்படுத்தாமல், இருந்தமை தொடர்பில் விளக்கம் கோருவதற்காக, இன்றைய தினம் பொலிஸ்மா அதிபரை தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தமை

மேலும்...
பொலிஸாருக்கு எதிராக, 08 மாதங்களில் ஆயிரம் முறைப்பாடுகள்

பொலிஸாருக்கு எதிராக, 08 மாதங்களில் ஆயிரம் முறைப்பாடுகள் 0

🕔17.May 2016

பொலிஸாருக்கு எதிராக கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான 08 மாத காலப் பகுதியில் மாத்திரம் 1000 முறைப்பாடுகள் வரை கிடைக்கப்பெற்றுள்ளதாக, தேசிய பொலிஸ் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இவற்றில் சுமார் 200 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாஸ கூரே தெரிவித்துள்ளார். ‘தமதுமுறைப்பாடுகள் குறித்து பொலிஸார் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை’ எனத்

மேலும்...
பிரதம பொலிஸ் பரிசோதகர்கள் 15 பேருக்கு பதவி உயர்வு; ஒருவர் மட்டுமே சிறுபான்மை இனத்தவர்

பிரதம பொலிஸ் பரிசோதகர்கள் 15 பேருக்கு பதவி உயர்வு; ஒருவர் மட்டுமே சிறுபான்மை இனத்தவர் 0

🕔4.Mar 2016

பிரதம பொலிஸ் பரிசோதகர்கள் 15 பேர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக தரம் உயர்த்தப் பட்டுள்ளனர். குறித்த 15 பேரில் ஒருவர் மட்டுமே சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவராவர். மேற்படி பதவி உயர்வுகளுக்கான அனுமதியினை தேசிய பொலிஸ் ஆணைக்குழு வழங்கியுள்ளது. பதவிக்காலம் மற்றும் செயற் திறன் ஆகியவற்றினைக் கருத்திற் கொண்டே, இந்தப் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பதவி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்