Back to homepage

Tag "திகன"

கொத்து ரொட்டிக்குள் மலட்டு மருந்து; அம்பாறை ‘காசிம்’ ஹோட்டலுக்கு எதிரான கதை என்னானது?

கொத்து ரொட்டிக்குள் மலட்டு மருந்து; அம்பாறை ‘காசிம்’ ஹோட்டலுக்கு எதிரான கதை என்னானது? 0

🕔14.Nov 2021

– புலனாய்வுக் கட்டுரை – – யூ.எல். மப்றூக் – கொத்து ரொட்டிக்குள் ஆண்களுக்கு ‘மலட்டுத் தன்மையை’ ஏற்படுத்தும் மருந்தைக் கலந்து கொடுத்ததாகக் கூறி, தாக்குதலுக்குள்ளான – அம்பாறை நகரில் அமைந்திருந்த ‘நியூ காசிம்’ ஹோட்டலை உங்களில் எத்தனை பேருக்கு நினைவிருக்கிறது. அந்தச் சம்பவத்தில் பாதிப்புக்குள்ளான ஹோட்டல் முதலாளியின் நிலை என்ன என்று, எப்போதாவது நினைத்துப்

மேலும்...
நாலக சில்வாவை முறையாக விசாரித்தால், திகன கலவர சூத்திரதாரி வெளியாவார்: நாமல் தெரிவிப்பு

நாலக சில்வாவை முறையாக விசாரித்தால், திகன கலவர சூத்திரதாரி வெளியாவார்: நாமல் தெரிவிப்பு 0

🕔22.Oct 2018

பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவை முறையாக விசாரணை செய்தால், திகன கலவரத்தின் சூத்திரதாரி வெளியே வருவார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறினார். அங்கு மேலும் தெரிவிக்கையில்; “ஒன்றிணைந்த எதிரணி உறுப்பினர்களை சிறையில் அடைத்து வழக்குகளை விசாரணை

மேலும்...
திகன கலவரத்தின் பின்னணியில் பொலிஸார்: நாமல் சந்தேகம்

திகன கலவரத்தின் பின்னணியில் பொலிஸார்: நாமல் சந்தேகம் 0

🕔26.Sep 2018

திகன கலவரத்தின் பின்னனியில் நல்லாட்சியும் நல்லாட்சி பொலிஸாரும் இருந்துள்ளனர் என்கிற சந்தேகம் மேலும் வலுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனவே, அதற்கான தனி விசாரணை ஆணைக்குழு ஒன்றை அமைக்க வேண்டும் எனவும், அவர் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று செவ்வாய்கிழமை குருணாகல் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட நாமல், இதனைக் குறிப்பிட்டார். அங்கு அவர்

மேலும்...
ஆசையும் துயரங்களும்

ஆசையும் துயரங்களும் 0

🕔23.May 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – “எரிபொருள் மூலம் அரசு அறவிடும் 40,000 மில்லியன் ரூபாய்க்கும் மேற்பட்ட வரியை நீக்கி, எரிபொருள் விலை குறைக்கப்படும். பொதுப் போக்குவரத்துச் சேவைக்கும் ஓட்டோக்களுக்கும், மோட்டார் சைக்கிள்களுக்கும் இதன் மூலம் விசேட சலுகை கிடைக்கும்”. மேலே உள்ளது, தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது, வெளியிட்ட கொள்கைப்

மேலும்...
சீருடையில் இருந்த பொலிஸார், தாக்குதல் நடத்துவதற்கு பள்ளிவாசலைத் திறந்து கொடுத்தனர்: திலும் எம்.பி. தெரிவிப்பு

சீருடையில் இருந்த பொலிஸார், தாக்குதல் நடத்துவதற்கு பள்ளிவாசலைத் திறந்து கொடுத்தனர்: திலும் எம்.பி. தெரிவிப்பு 0

🕔18.May 2018

பாதுகாப்பு படையினர் வேடிக்கை பார்க்க இடம்பெற்ற திகன வன்முறை சம்பவம் தொடர்பில் தன்னிடம் விசாரணை மேற்கொள்வது புதுமையான விடயம் என நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போது, அவர் இதனைக் கூறினார். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்; “திகன அசம்பாவிதங்களின் போது,

மேலும்...
இனவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, முதற் கட்ட இழப்பீடு: ஹிஸ்புல்லா வழங்கி வைத்தார்

இனவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, முதற் கட்ட இழப்பீடு: ஹிஸ்புல்லா வழங்கி வைத்தார் 0

🕔19.Mar 2018

கண்டி மாவட்டத்தில் திகன உள்ளிட்ட பல பிரதேசங்களில் இனவாத வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதற்கட்ட இழப்பீடுகள் இன்று திங்கட்கிழமை  வழங்கப்பட்டன.புனர்வாழ்வு அதிகாரசபை மற்றும் கண்டி மாவட்ட செயலகம் என்பவற்றின் ஏற்பாட்டில் கண்டி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற் மேற்படி இழப்பீடு வழங்கும் நிகழ்வில், ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா கலந்து கொண்டு, பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீட்டுத் தொகைகளை

மேலும்...
மெனிக்ஹின்ன பகுதியில் மட்டும், முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு 885 கோடி ரூபாய்; பிரதேச செயலாளர் தெரிவிப்பு

மெனிக்ஹின்ன பகுதியில் மட்டும், முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு 885 கோடி ரூபாய்; பிரதேச செயலாளர் தெரிவிப்பு 0

🕔14.Mar 2018

– அஷ்ரப் ஏ சமத் –மெனிக்ஹின்ன பிரதேச செயலாளா் பிரிவில் மட்டும், கடந்த வாரம் நடைபெற்ற வன்முறையில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட நஷ்டம்  885 கோடி ரூபாய்  என பிரதேச செயலாளா் சமந்தி நாகதென்ன தெரிவித்தார். முஸ்லிம்களின் வீடுகள், வாகனங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பில் பிரதேச செயலக அதிகாரிகள் மதிப்பிட்டு, அறிக்கை சமர்ப்பித்துள்ளனர் எனவும்

மேலும்...
கண்டி கலவரத்தில் முஸ்லிம்களுக்கான இழப்பு; அறிக்கை தயாரிப்பில் குரல்கள் இயக்கம்

கண்டி கலவரத்தில் முஸ்லிம்களுக்கான இழப்பு; அறிக்கை தயாரிப்பில் குரல்கள் இயக்கம் 0

🕔12.Mar 2018

கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற கலவரத்தின் இழப்புகளை மதிப்பீடு செய்வதற்கான கள ஆய்வுகளை மேற்கொண்டுள்ள குரல்கள் இயக்கம், அது தொடர்பான இறுதி அறிக்கையினை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. குறித்த கள ஆய்வினை மேற்கொள்ளும் பொருட்டு, குரல்கள் இயக்கத்தின் ஆய்வுக்குழுவினர் நேற்று முன்தினம் சனிக்கிழமை கண்டிக்கு இரண்டு நாள் பயணமொன்றை மேற்கொண்டனர்.குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணிகள், இழப்பீடு அளவிடும்

மேலும்...
கண்டிக் கலவரம்; நெருப்புக்கிடையே நின்ற ஒருவரின் அனுவமும், புரிதல்களும்

கண்டிக் கலவரம்; நெருப்புக்கிடையே நின்ற ஒருவரின் அனுவமும், புரிதல்களும் 0

🕔12.Mar 2018

  – சுஐப் எம். காசிம் – முஸ்லிம்களுக்கு எதிரான அண்மைய அடாவடித்தனங்களின் போது, அரசியல் அதிகாரங்களின் ஆழ, அகல பரிமாணங்களை அறிந்துகொள்ள சந்தர்ப்பம் கிடைத்தது. இறைவன் நாடியோரின் கைகளில்தான் ஆட்சி அதிகாரம் கிடைக்கும் என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை. இறைவனின் இந்த நாட்டத்தில் நன்மையும் இருக்கும், கெடுதியும் இருக்கும் என்பதும் அவர்களின் நம்பிக்கை. சிலரின் கையிலுள்ள

மேலும்...
முஸ்லிம்கள் ஆயுதம் தூக்கும் நிலைவரத்தை உருவாக்கி விடக்கூடாது: நாடாளுமன்றில் அமைச்சர் றிசாட் ஆவேசம்

முஸ்லிம்கள் ஆயுதம் தூக்கும் நிலைவரத்தை உருவாக்கி விடக்கூடாது: நாடாளுமன்றில் அமைச்சர் றிசாட் ஆவேசம் 0

🕔6.Mar 2018

  முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதத்தைத் தூக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை அரசாங்கம் உருவாக்கி விடக்கூடாது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். தற்பொழுது நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாராண சூழ்நிலை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற விஷேட ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும் போதே, அமைச்சர் இவ்வாறு கூறினார். அரசாங்கத்தினதும், பொலிஸாரினதும்

மேலும்...
முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபை அமர்வின் போது, தரையில் அமர்ந்து எதிர்ப்புப் போராட்டம்

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபை அமர்வின் போது, தரையில் அமர்ந்து எதிர்ப்புப் போராட்டம் 0

🕔6.Mar 2018

– அகமட் எஸ். முகைடீன் –திகன சம்பவம் உள்ளிட்ட இனவாத தாக்குதல்களை எதிர்த்து இன்று செவ்வாய்கிழமை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சபை அமர்வு நடைபெறும்போது அதனைப் புறக்கணிக்கும் வகையில் நிலத்தில் அமர்ந்து கோசமிட்டவர்களாக எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.இனவாத தாக்குதலால் பாதிக்கப்பட்ட திகன பிரதேசத்துக்குச் சென்று, அம்மக்களுக்கு ஏற்பட்டுள்ள பேரவல நிலையினை கண்ணுற்ற பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், இந்த

மேலும்...
வன்செயலில் ஈடுபட்ட காடையர்களுக்கு, விளக்க மறியல்; தெல்தெனிய நீதிமன்றம் உத்தரவு

வன்செயலில் ஈடுபட்ட காடையர்களுக்கு, விளக்க மறியல்; தெல்தெனிய நீதிமன்றம் உத்தரவு 0

🕔6.Mar 2018

தெல்தெனிய, திகன உள்ளிட்ட பகுதிகளில் வன்முறையில் ஈடுபட்டார்கள் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 24 பேரையுமே், இம் மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, தெல்தெனிய நீதிவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டுள்ளது. மேற்படி சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்த நிலையில், அவர்களை விடுவிக்குமாறு கோரி நேற்றைய தினம் பௌத்த பிக்குகள் உள்ளிட்ட

மேலும்...
அடித்தால், திருப்பியடிப்போம்: முஸ்லிம்களுக்கு ஞானசார தேரர் எச்சரிக்கை

அடித்தால், திருப்பியடிப்போம்: முஸ்லிம்களுக்கு ஞானசார தேரர் எச்சரிக்கை 0

🕔6.Mar 2018

இது பௌத்த நாடு. அடித்தால் திருப்பி அடிப்போம். கொலை செய்தால் நாமும் திருப்பி அடிப்போம். ஆகவே வன்முறைகள் வேண்டாம். அமைதியாக இருங்கள் என, பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர், முஸ்லிம்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். கண்டி – திகன, தெல்தெனிய பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள சம்பவம் தொடர்பில், கொழும்பில் இன்று செவ்வாய்கிழமை பொதுபலசேன அமைப்பு நடத்திய

மேலும்...
சிங்களக் காடையர்களின் இனவெறித் தாக்குதலில், அப்துல் பாஸித் பலி: திகன பிரதேசத்தில் சோகம்

சிங்களக் காடையர்களின் இனவெறித் தாக்குதலில், அப்துல் பாஸித் பலி: திகன பிரதேசத்தில் சோகம் 0

🕔6.Mar 2018

– முன்ஸிப் அஹமட் – திகன உள்ளிட்ட பிரதேசங்களில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற இனவாதத் தாக்குதலில், திகன பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய முஸ்லிம் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். திகன பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள வீட்டில் வசிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த, அப்துல் பாஸித் எனும் இளைஞரே இவ்வாறு பலியாகியுள்ளார். மேற்படி இளைஞரின் பல்லேகல கடை மீது –

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் ஹர்த்தால், பாதிக்கப்பட்ட மக்களுக்காக விசேட பிரார்த்தனை; திகன, தெல்தெனிய சம்பவங்களுக்கு கண்டனம்

அம்பாறை மாவட்டத்தில் ஹர்த்தால், பாதிக்கப்பட்ட மக்களுக்காக விசேட பிரார்த்தனை; திகன, தெல்தெனிய சம்பவங்களுக்கு கண்டனம் 0

🕔6.Mar 2018

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம்களுக்கு எதிராக நேற்று திங்கட்கிழமை மத்திய மாகாணத்தின் திகன, தெல்தெனிய உள்ளிட்ட பகுதிகளில் சிங்களக் காடையர்கள் மேற்கொண்ட இனவாதத் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், அம்பாறை மாவட்டம் முழுவதும் இன்று செவ்வாய்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. பொத்துவில் தொடக்கம் மருதமுனை வரையிலான முஸ்லிம்கள் பெரும்பான்மைகயாக வாழும் பொத்துவில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்