Back to homepage

Tag "ஜனாதிபதி ஆணைக்குழு"

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையின் போது, ‘கள்ளத்தனமாக’ சாட்சியத்தை தொலைபேசியில் பதிவு செய்த சட்டத்தரணிக்கு உச்ச நீதிமன்றம் தண்டனை

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையின் போது, ‘கள்ளத்தனமாக’ சாட்சியத்தை தொலைபேசியில் பதிவு செய்த சட்டத்தரணிக்கு உச்ச நீதிமன்றம் தண்டனை 0

🕔25.Oct 2023

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கப்பட்ட போது, அதனை தொலைபேசியில் பதிவு செய்தார் எனும் குற்றச்சாட்டில், சட்டத்தரணி ஒருவருக்கு – 08 மாதங்கள் பணிகளில் ஈடுபடக் கூடாது என, உச்ச நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. அக்குரஸ்ஸ பிரதேசத்தில் வசிக்கும் சட்டத்தரணி நிஸாம் மொஹமட் ஷமீன் என்பவருக்கு எதிராக மேற்படி

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல் விசாரணை அறிக்கை: கத்தோலிக்க ஆயர் பேரவையிடம் கையளிப்பு

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை அறிக்கை: கத்தோலிக்க ஆயர் பேரவையிடம் கையளிப்பு 0

🕔25.Apr 2023

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கை கத்தோலிக்க ஆயர் பேரவையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் அருட்தந்தை ஹெரோல்ட் அந்தோனி பெரேராவிடம் இந்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஒப்புதலுடன் அமைச்சர் டிரான் அலஸ் மேற்படி முழுமையன அறிக்கையின் பிரதியொன்றை கையளித்துள்ளார்.

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல்: ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் முழுத் தொகுதிகளும் நாடாளுமன்றுக்கு சமர்ப்பிப்பு

ஈஸ்டர் தாக்குதல்: ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் முழுத் தொகுதிகளும் நாடாளுமன்றுக்கு சமர்ப்பிப்பு 0

🕔22.Feb 2022

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மற்றும் அது தொடர்பான சாட்சி பதிவுகள் உட்பட அனைத்து தொகுதிகளும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் 88 தொகுதிகளைக் கொண்ட முழுமையான அறிக்கை இன்று (22) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தின் சட்ட விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்த ரோஹணதீரவினால் சபாநாயகர்

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல்; முக்கிய தகவல்களை அரசாங்கம் ஒழித்து வைத்துள்ளது: பேராயர் மெல்கம் ரஞ்சித் குற்றச்சாட்டு

ஈஸ்டர் தின தாக்குதல்; முக்கிய தகவல்களை அரசாங்கம் ஒழித்து வைத்துள்ளது: பேராயர் மெல்கம் ரஞ்சித் குற்றச்சாட்டு 0

🕔19.Feb 2022

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நியாயம் கிடைக்காது என கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கம் ஒன்றின் கீழாவது இதற்கு நியாயம் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார். நாட்டின் தற்போதைய அரசாங்கம் சட்டத்தை கேலிக்கு உள்ளாகி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் ஈஸ்டர் தாக்குதல்

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல்;  பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த ஆட்சியாளர்கள் தயாரில்லை: பேராயர் மெல்கம் ரஞ்சித் குற்றச்சாட்டு

ஈஸ்டர் தாக்குதல்; பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த ஆட்சியாளர்கள் தயாரில்லை: பேராயர் மெல்கம் ரஞ்சித் குற்றச்சாட்டு 0

🕔21.Oct 2021

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை தற்போதைய ஆட்சியாளர்கள் நடைமுறைப்படுத்துவதில்லை என தௌிவாகியுள்ளதாக பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தின தாக்குதல் இடம்பெற்று 30 மாதங்கள் கடந்துள்ள நிலையில், இன்று (21) கொச்சிக்கடை தேவாலயத்தில் இடம்பெற்ற விஷேட ஆராதனையில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். தாக்குதல்

மேலும்...
ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்களை தண்டிப்பதைத் தவிர்க்க சூழ்ச்சி நடைபெறுகிறது: பேராயர் மெல்கம் ரஞ்சித் குற்றச்சாட்டு

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்களை தண்டிப்பதைத் தவிர்க்க சூழ்ச்சி நடைபெறுகிறது: பேராயர் மெல்கம் ரஞ்சித் குற்றச்சாட்டு 0

🕔13.Aug 2021

– எம்.எம். சில்வெஸ்டர் – ஈஸ்டர் தின தாக்குதலுக்கு சூழ்ச்சி நடைபெற்றது போலவே, அந்த தாக்குதலுடன் தொடர்பானவர்களை தண்டிப்பதை தவிர்ப்பதற்கும் சூழ்ச்சி நடைபெற்று வருகிறது என கொழும்பு மறை மாவட்ட ‍பேராயர் மெல்கம் ரஞ்சித் குற்றுஞ்சாட்டியுள்ளார். ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான விசாரணை நடத்திய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாது, அதனை ஆராய்வதற்கு ஒரே

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை தொடர்பான பரிந்துரைகள்; இன்று ஜனாதிபதியிடம் கையளிக்க எதிர்பார்ப்பு

ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை தொடர்பான பரிந்துரைகள்; இன்று ஜனாதிபதியிடம் கையளிக்க எதிர்பார்ப்பு 0

🕔29.Mar 2021

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை இணை குழுவின் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் உறுப்பினர் அமைச்சர் உதய கம்மன்பில இதனை தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையை இன்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு பெற்றுக் கொடுக்க எதிர்ப்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல்: மைத்திரி நியமித்த ஆணைக்குழுவின் அறிக்கையை, அவரின் கட்சியே நிராகரித்தது

ஈஸ்டர் தாக்குதல்: மைத்திரி நியமித்த ஆணைக்குழுவின் அறிக்கையை, அவரின் கட்சியே நிராகரித்தது 0

🕔25.Feb 2021

ஈஸ்டர் தின பயங்கரவாத குண்டுத் தாக்குதல்களை விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை நிராகரிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் டி சில்வா இதனை தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற போது, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன,

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல்; அறிக்கையை ஆராய குழு நியமிக்கப்பட்டமை தொடர்பில் சந்தேகம்: கத்தோலிக்க ஆயர்கள் சங்கம் தெரிவிப்பு

ஈஸ்டர் தின தாக்குதல்; அறிக்கையை ஆராய குழு நியமிக்கப்பட்டமை தொடர்பில் சந்தேகம்: கத்தோலிக்க ஆயர்கள் சங்கம் தெரிவிப்பு 0

🕔22.Feb 2021

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆய்வு செய்வதற்காக புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு முன்னெடுக்கப்படுகின்ற செயற்பாடுகள் தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக கத்தோலிக்க ஆயர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன் தலைவர் வணக்கத்துக்குரிய வின்சன்ட் ஜே பெனாண்டோ இதனை குறிப்பிட்டுள்ளார். பதுளை ஆயர் இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய போதே

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல்: மைத்திரி, ரணில் உள்ளிட்டோருக்கு எதிராக, ‘கிரிமினல்’ குற்றச்சாட்டுகளை சுமத்துமாறு ஆணைக்குழு பரிந்துரைப்பு

ஈஸ்டர் தின தாக்குதல்: மைத்திரி, ரணில் உள்ளிட்டோருக்கு எதிராக, ‘கிரிமினல்’ குற்றச்சாட்டுகளை சுமத்துமாறு ஆணைக்குழு பரிந்துரைப்பு 0

🕔7.Feb 2021

ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதல்களை விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நல்லாட்சி அரசாங்கத்தின் உயர் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் குற்றவியல் குற்றச்சாட்டுகளை (Criminal charges) எதிர்கொள்ள உள்ளனர் என, சன்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமர்

மேலும்...
எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் சிலரின், பிரஜாவுரிமையை இல்லாமலாக்க அரசாங்கம் திட்டம்: கரு ஜயசூரிய குற்றச்சாட்டு

எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் சிலரின், பிரஜாவுரிமையை இல்லாமலாக்க அரசாங்கம் திட்டம்: கரு ஜயசூரிய குற்றச்சாட்டு 0

🕔5.Feb 2021

– எம்.ஆர்.எம். வசீம் – அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய அடுத்த தேர்தலுக்கு முன்னர் எதிர்க்கட்சி அரசியில்வாதிகளில் முன்னணியில் இருப்பவர்களின் பிரஜா உரிமையை இல்லாமல் செய்து ஏகாதிபத்தியதுக்கான வழி அமைப்பதே அரசாங்கத்தின் திட்டமாகும் என, முன்னாள் சபாநாயகரும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். அத்துடன் முறைப்பாட்டாளர்களுக்கு தண்டனை

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல்: ஆணைக்குழுவின் அறிக்கை, ஜனாதிபதியிடம் கையளிப்பு

ஈஸ்டர் தின தாக்குதல்: ஆணைக்குழுவின் அறிக்கை, ஜனாதிபதியிடம் கையளிப்பு 0

🕔1.Feb 2021

ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் தலைவர் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஜனக்க டி சில்வா மற்றும் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், மேற்படி அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான, ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் நிறைவு

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான, ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் நிறைவு 0

🕔20.Jan 2021

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் நேற்று செவ்வாய்கிழமை சாட்சி விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குற்றப்புலனாய்வு திணைக்கள பணிப்பாளராக கடமையாற்றிய ஷானி அபேசேகர நேற்று சாட்சி வழங்க வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் அதற்கு சமூகமளித்திருக்கவில்லை. எதிர்வரும் சில தினங்களில்

மேலும்...
விமலுக்கு எதிராக றிசாட் முறைப்பாடு

விமலுக்கு எதிராக றிசாட் முறைப்பாடு 0

🕔8.Jan 2021

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கைகள் வெளிவருவதற்கு முன்னர், அது தொடர்பில் தன்னை சம்பந்தப்படுத்தி குற்றஞ்சுமத்தியுள்ள அமைச்சர் விமல் வீரவன்சவின் நடவடிக்கைகள் குறித்து, அதே ஆணைக்குழுவில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் இன்று வெள்ளிக்கிழமை முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். தனது சட்டத்தரணி ருஷ்தி ஹபீபுடன் இணைந்து,

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல்களை விசாரணை செய்யும், ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக் காலம் நீடிப்பு

ஈஸ்டர் தின தாக்குதல்களை விசாரணை செய்யும், ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக் காலம் நீடிப்பு 0

🕔22.Dec 2020

ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதல்களை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக் கால எல்லை 2021 ஜனவரி 31ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் தின தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவை, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2019 செப்டம்பரில் நியமித்தார். 2019 ல் நடந்த ஈஸ்டர் தின தாக்குதல்களைத் தொடர்ந்து, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்