Back to homepage

Tag "கெஹலிய ரம்புக்வெல்ல"

கெஹலியவுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

கெஹலியவுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல் 0

🕔28.Mar 2024

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை தொடர்ந்தும் ஏப்ரல் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் இன்று வியாழக்கிழமை (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த, மேலதிக செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க, மருத்து வழங்கல்

மேலும்...
யுனிசெப் வாகனத்தை கெஹலிய பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு: சிஐடி விசாரணை

யுனிசெப் வாகனத்தை கெஹலிய பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு: சிஐடி விசாரணை 0

🕔19.Mar 2024

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட வாகனம் தொடர்பில், குற்றப் புலனாய்வு திணைக்களம் (சிஐடி) அண்மையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் – தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்தமை தொடர்பான வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கெஹலியவை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்ட

மேலும்...
தன்னைக் கைது செய்தமைக்கு எதிராக, முன்னாள் அமைச்சர் கெஹலிய அடிப்படை உரிமை மனு தாக்கல்

தன்னைக் கைது செய்தமைக்கு எதிராக, முன்னாள் அமைச்சர் கெஹலிய அடிப்படை உரிமை மனு தாக்கல் 0

🕔29.Feb 2024

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, தன்னைக் கைது செய்தமைக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் இன்று (29) அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தான் கைது செய்யப்பட்டு, நியாயமான காரணமின்றி விளக்கமறியலில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து தனது உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். தரக்குறைவான ‘இம்யூன் குளோபுலின்’

மேலும்...
கெஹலிய ரம்புக்வெல்ல; அவர் கூறும் நோய்களால் உண்மையில் பாதிக்கப்பட்டுள்ளாரா: மருத்துவர் குழு பரிசோதிக்க நீதிமன்றம் உத்தரவு

கெஹலிய ரம்புக்வெல்ல; அவர் கூறும் நோய்களால் உண்மையில் பாதிக்கப்பட்டுள்ளாரா: மருத்துவர் குழு பரிசோதிக்க நீதிமன்றம் உத்தரவு 0

🕔18.Feb 2024

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவர் கூறும் நோய்களால் உண்மையில் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை அறிய – ஆலோசகர்கள் அடங்கிய 07 பேர் கொண்ட மருத்துவ குழுவினால் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்று மாளிகாகந்த நீதவான் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, மருத்துவ குழுவின் அறிக்கையை பெப்ரவரி 29 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் சுகாதார சேவைகள்

மேலும்...
முன்னாள் அமைச்சர் கெஹலியவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு

முன்னாள் அமைச்சர் கெஹலியவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு 0

🕔15.Feb 2024

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் 06 பேரை, எதிர்வரும் 29ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (15) நீதிமன்றம் உத்தரவிட்டது. கெஹலிய தவிர்ந்த 06 சந்தேகநபர்களை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுகயீனம் காரணமாக கெஹலிய ரம்புக்வெல்ல நீதிமன்றில் இன்று ஆஜர் செய்யப்படவில்லை. தரமற்ற இம்யூனோகுளோபுலின்

மேலும்...
பாடசாலைக்கு சூட்டப்பட்டுள்ள கெஹலியவின் பெயரை நீக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை

பாடசாலைக்கு சூட்டப்பட்டுள்ள கெஹலியவின் பெயரை நீக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை 0

🕔8.Feb 2024

கல்வி அமைச்சின் சுற்றறிக்கையை மீறி குண்டசாலையில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. கல்வி அமைச்சின் 1996ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி உயிருள்ள ஒருவரின் பெயரை பாடசாலைகளுக்கு சூட்ட முடியாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், உயிருடன்

மேலும்...
விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள கெஹலிய, நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள மாட்டார்

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள கெஹலிய, நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள மாட்டார் 0

🕔7.Feb 2024

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இன்றைய (07) நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளப் போவதில்லை என சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார். 09ஆவது நாடாளுமன்றத்தின் 05ஆவது கூட்டத்தொடர் – இன்று புதன்கிழமை (07) 10.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்த நிலையில் சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோபுலின் மருந்துக் கொள்முதல் ஊழல் தொடர்பில் இம்மாதம் 15 ஆம்

மேலும்...
கெஹலியவின் ராஜிநாமாவை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவிப்பு வெளியானது

கெஹலியவின் ராஜிநாமாவை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவிப்பு வெளியானது 0

🕔6.Feb 2024

சுற்றாடல் அமைச்சர் பதவியிலிருந்து கெஹலிய ரம்புக்வெல்ல ராஜினாமா செய்ததை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தரமற்ற இம்யூனோகுளோபுலின் (immunoglobulin) மருந்து கொள்வனவு ஊழலுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி – கடந்த வாரம் அவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் ராஜினாமா கடிதம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டதாகவும், அவர் அதனை ஏற்றுக்கொண்டதாகவும் இன்று

மேலும்...
கெஹலியவின் அமைச்சுப் பதவியை பறிக்க தீர்மானம்

கெஹலியவின் அமைச்சுப் பதவியை பறிக்க தீர்மானம் 0

🕔5.Feb 2024

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் அமைச்சுப் பதவியை பறிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் சுகாதார அமைச்சரான அவர் தற்போது சுற்றாடல்துறை அமைச்சராக இருக்கிறார். அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுப் பதவியில் இருக்கும் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையால், நடைமுறை ரீதியான பல சிக்கல்கள் ஏற்பட்டிருப்பதால் அவரை அந்தப் பதவியில் இருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும்

மேலும்...
விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த அமைச்சர் கெஹலிய வைத்தியசாலையில் அனுமதி

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த அமைச்சர் கெஹலிய வைத்தியசாலையில் அனுமதி 0

🕔3.Feb 2024

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, வைத்தியப் பரிந்துரையின் பேரில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சரை 15ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு இன்று (03) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆயினும் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த அவர் – வைத்தியப் பரிந்துரையின் பேரில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும்...
“அமைச்சரவை மாற்றம் தவறான தீர்மானம்”: ரணிலுடன் மோதுவதற்கு தயாகிறது மொட்டு

“அமைச்சரவை மாற்றம் தவறான தீர்மானம்”: ரணிலுடன் மோதுவதற்கு தயாகிறது மொட்டு 0

🕔23.Oct 2023

அமைச்சரவையில் இன்று மேற்கொள்ளப்பட்ட மாற்றம் தொடர்பில், குறிப்பாக கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியமை குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (மொட்டுக் கட்சி) அதிருப்தி வெளியிட்டுள்ளது. கெஹலிய ரம்புக்வெல்ல சுற்றாடல் அமைச்சராக நியமிக்கப்பட்டதுடன், அவருக்குப் பதிலாக டொக்டர் ரமேஷ் பத்திரன சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சரவை மாற்றம் தொடர்பில் கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன

மேலும்...
கெஹலியவிடமிருந்து சுகாதார அமைச்சர் பதவி பிடுங்கப்பட்டது: அமைச்சரவையில் மாற்றம்

கெஹலியவிடமிருந்து சுகாதார அமைச்சர் பதவி பிடுங்கப்பட்டது: அமைச்சரவையில் மாற்றம் 0

🕔23.Oct 2023

அமைச்சரவையில் இன்று (23) மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இதற்கமைய , விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக மகிந்த அமரவீர நியமிக்கப்பட்டுள்ளார். கெஹலிய ரம்புக்வெல்ல – சுகாதார அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, சுற்றாடல் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். சற்று நேரத்துக்கு முன்னர், ஜனாதிபதி செயலகத்தில் அந்தப் பதவியை அவர் பெற்றுக்கொண்டார். ஹாபிஸ் நசீர்

மேலும்...
அவசரகால  மருந்துக் கொள்வனவு இடைநிறுத்தம்

அவசரகால மருந்துக் கொள்வனவு இடைநிறுத்தம் 0

🕔2.Oct 2023

அவசரகால மருந்துக் கொள்வனவுகளை சுகாதார அமைச்சு இடைநிறுத்தியுள்ளது. கொழும்பில் இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்தார். “அவசரகால கொள்முதலுடன் தொடர்புடைய சில பிரச்சினைகள் உள்ளன. இதன் காரணமாக இந்தச் செயல்முறை பற்றிய தவறான எண்ணங்கள் ஏற்பட்டன” என்று அவர் சுட்டிக்காட்டினார். அவசரகால மருந்துக் கொள்வனவு இடைநிறுத்தப்பட்டுள்ள

மேலும்...
இறக்குமதி செய்த பிஃபைசர் (Pfizer) கொரோனா தடுப்பூசிகளில் 87 வீதமானவை அழிப்பு: அமைச்சர் கெஹலிய தகவல்

இறக்குமதி செய்த பிஃபைசர் (Pfizer) கொரோனா தடுப்பூசிகளில் 87 வீதமானவை அழிப்பு: அமைச்சர் கெஹலிய தகவல் 0

🕔25.Sep 2023

கொரோனா நோய்த்தடுப்புக்காக நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட பிஃபைசர் (Pfizer) தடுப்பூசிகளில் 13 வீதமானவை மாத்திரமே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவை காலாவதியான திகதிக்குப் பின்னர் அழிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தொற்றுநோய் கட்டுப்பாட்டில் இருக்கும் போது – கொவிட் நோய்த்தடுப்பு ஊசி போடுவது பக்கவிளைவுகளால் பிற நோய்களை ஏற்படுத்தும் என்ற தவறான கருத்து, நோய்த்தடுப்பு திட்டத்தில்

மேலும்...
ஓய்வுபெற்ற வைத்தியர்களை மீளவும் சேவைக்கு அழைக்க தீர்மானம்: சுகாதார அமைச்சர் தெரிவிப்பு

ஓய்வுபெற்ற வைத்தியர்களை மீளவும் சேவைக்கு அழைக்க தீர்மானம்: சுகாதார அமைச்சர் தெரிவிப்பு 0

🕔14.Sep 2023

ஓய்வுபெற்ற வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்தியர்களை ஒப்பந்த அடிப்படையில் சேவைக்கு திரும்ப அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியினால் வைத்தியர்கள் நாட்டை விட்டும் வெளியேறியமை காரணமாக, வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள வைததியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும். இந்த தீர்மானம் தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்