Back to homepage

Tag "ஓல் செயின்ட்ஸ் தேவாலயம்"

பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம்: நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு

பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம்: நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு 0

🕔25.Jan 2022

பொரளை ‘ஓல் செய்ன்ட்ஸ்’ தேவாலயத்தில் அண்மையில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை விரைவில் நிறைவு செய்யுமாறு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் இன்றைய தினம் (25) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதேநேரம், சம்பவம் தொடர்பில், தடுத்து வைத்து

மேலும்...
கைக்குண்டு விவகாரம்: அச்சுறுத்திப் பெறும் வாக்குமூலங்கள் அடிப்படையிலான முடிவை ஏற்கப் போவதில்லை: கர்தினால் மல்கம் ரஞ்சித்

கைக்குண்டு விவகாரம்: அச்சுறுத்திப் பெறும் வாக்குமூலங்கள் அடிப்படையிலான முடிவை ஏற்கப் போவதில்லை: கர்தினால் மல்கம் ரஞ்சித் 0

🕔24.Jan 2022

பொரளை கிறிஸ்தவ தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்டமை தொடர்பில் பொதுமக்களை அச்சுறுத்தி பொலிஸார் பெறும் வாக்குமூலங்களை அடிப்படையாக கொண்ட முடிவினை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார் “ஓல் செயின்ட்ஸ் தேவாலய கைக்குண்டு வழக்கில் எடுக்கப்பட்ட முடிவுகளை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இது மக்களை அச்சுறுத்தி சேகரிக்கப்பட்ட ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டவை” என்று கர்தினால் ரஞ்சித்

மேலும்...
பொரளை கிறிஸ்தவ தேவாலய விவகாரம்: வைத்தியருக்கு கைக்குண்டு வழங்கியவர் கைது

பொரளை கிறிஸ்தவ தேவாலய விவகாரம்: வைத்தியருக்கு கைக்குண்டு வழங்கியவர் கைது 0

🕔20.Jan 2022

பொரளை கிறிஸ்தவ தேவாலயத்தில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற வைத்தியருக்கு குறித்த குண்டை வழங்கியதாக கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹம்பாந்தோட்ட – ரன்ன பகுதியில் வைத்து, குறித்த சந்தேக நபர் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகில், பொரளை ஆனந்த ராஜகருணா மாவத்தையில் அமைந்துள்ள ‘ஓல் செயின்ட்ஸ்’ 

மேலும்...
பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம்: ஓய்வுபெற்ற வைத்தியரின் வீட்டில் ஆயுதங்கள் மீட்பு

பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம்: ஓய்வுபெற்ற வைத்தியரின் வீட்டில் ஆயுதங்கள் மீட்பு 0

🕔19.Jan 2022

பொரளை ‘ஓல் செயின்ட்ஸ்’ தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், பிலியந்தல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட – ஓய்வுபெற்ற வைத்தியர் ஒருவரின் வீட்டில் இருந்து ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நான்கு கைத்துப்பாக்கிகள், ஒரு ரிவால்வர், இரண்டு வாள்கள், ஒரு ரம்போ கத்தி மற்றும் துப்பாக்கியொன்றும் இவற்றுள் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எம்பிலிப்பிட்டிய, பனாமுர பகுதியில்

மேலும்...
பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம்: பாதுகாப்பு செயலாளர் ஊடகங்கள் முன்பாக உறுதி வழங்கினார்

பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம்: பாதுகாப்பு செயலாளர் ஊடகங்கள் முன்பாக உறுதி வழங்கினார் 0

🕔15.Jan 2022

பொரளையில் உள்ள ஓல் செயின்ட்ஸ் தேவாலயத்திலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை நிறைவு செய்வதற்கு மேலும் கால அவகாசம் தேவை என பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். கண்டியில் வைத்து ஊடகங்களிடம் பேசிய அவர்; “சம்பவம் இடம்பெற்ற 24 மணித்தியாலங்களுக்குள், அது தொடர்பான விமர்சனங்களை முன்வைப்பது பொருத்தமற்றது”

மேலும்...
பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம்: 13 வயது சிறுவன் ரகசிய வாக்குமூலம்: பிரதான சந்தேக நபர் தொடர்பில் தகவல்கள் வெளியாகின

பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம்: 13 வயது சிறுவன் ரகசிய வாக்குமூலம்: பிரதான சந்தேக நபர் தொடர்பில் தகவல்கள் வெளியாகின 0

🕔13.Jan 2022

– எம்.எப்.எம்.பஸீர் – பொரளை – ஆனந்த ராஜகருணா மாவத்தையில் அமைந்துள்ள ஓல் செயின்ட்ஸ் தேவாலய ( All Saints’ Church) வளாகத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவத்தில், 13 வயது பாடசாலை மாணவன் ஒருவன் நேற்று (12) கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய முன்னிலையில் ரகசிய சாட்சியம் வழங்கினார். குறித்த சிறுவன், இந்த கைக்குண்டு

மேலும்...
பொரளை தேவாலயத்தில் மீட்கப்பட்ட கைக்குண்டு; சிறுவர் ஒருவரின் ஊடாக வைக்கப்பட்டது: பொலிஸ் பேச்சாளர் தகவல்

பொரளை தேவாலயத்தில் மீட்கப்பட்ட கைக்குண்டு; சிறுவர் ஒருவரின் ஊடாக வைக்கப்பட்டது: பொலிஸ் பேச்சாளர் தகவல் 0

🕔12.Jan 2022

பொரளையில் உள்ள ஓல் செயின்ட்ஸ் தேவாலயத்தில் ( All Saints’ Church) இருந்து நேற்று (11) மீட்கப்பட்ட கைக்குண்டு, 13 வயது சிறுவர் ஒருவரின் ஊடாக, அங்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். மன்னாரில் தயாரிக்கப்பட்டதெனத் தெரியவந்துள்ள இந்தக் கைக்குண்டு, வெப்பம் அடையும் பட்சத்தில் வெடிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்