Back to homepage

Tag "ஏ.எச்.எம். பௌசி"

பௌசிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை: ஐ.ம.சக்தி தீர்மானம்

பௌசிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை: ஐ.ம.சக்தி தீர்மானம் 0

🕔29.Apr 2023

நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க, ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை மீதான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிதமை தொடர்பிலேயே இந்த ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. குறித்த தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்பில் ஐக்கிய மக்கள் சக்தி கலந்து கொள்ளாமல் தவிர்ந்திருந்தது. பௌசியின் இந்த நடவடிக்கை கட்சியின் தீர்மானத்துக்கு

மேலும்...
சர்வதேச நாணய நிதியம் தொடர்பான தீர்மானம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்: பல்டியடித்தார் பௌசி

சர்வதேச நாணய நிதியம் தொடர்பான தீர்மானம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்: பல்டியடித்தார் பௌசி 0

🕔28.Apr 2023

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ், ஏற்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கிணங்க குறித்த தீர்மானத்துக்கு ஆதரவான 120 வாக்குகள் கிடைத்தன. எதிரான 25 வாக்குகள் வழங்கப்பட்டன. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி, மேற்படி தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தார். கொழும்பு மாநகர சபைக்கான மேயர் வேட்பாளராகப் போட்டியிடும்

மேலும்...
ஜனாதிபதி ரணில் சிறப்பாகச் செயற்படுகிறார்: பௌசி எம்.பி புகழாரம்

ஜனாதிபதி ரணில் சிறப்பாகச் செயற்படுகிறார்: பௌசி எம்.பி புகழாரம் 0

🕔7.Apr 2023

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறப்பாக செயற்படுகின்றார் என்றும், அவர் பொது மக்களால் அதற்கு சான்றளிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி இன்று தெரிவித்தார். “ஜனாதிபதி சிறப்பாகச் செயற்படுகிறார் என்பது தெளிவாகக் காணப்படுகிறது. இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமல்ல, ரணில் விக்கிரமசிங்கவைப் பற்றி மக்கள் கூறுவதும் இதுவேயாகும்” எனவும் அவர் கூறினார்.

மேலும்...
பௌசி குழுவினர், ஐ.தே.கட்சி கூட்டணியில்  இணைகின்றார்கள்

பௌசி குழுவினர், ஐ.தே.கட்சி கூட்டணியில் இணைகின்றார்கள் 0

🕔3.Aug 2019

நாடாளுமுன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி உள்ளிட்ட குழுவினர், ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணியில் இணையவுள்ளதாக, ஐ.தே.கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை, அரசாங்கத்தில் இணைந்துள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமது அரசியல் எதிர்காலம் கருதி தனிப்பட்ட முடிவுகளை எடுக்கவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் பௌசி கூறியுள்ளார். இது குறித்து அவர்

மேலும்...
அமைச்சுகளை ஏற்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை, முஸ்லிம் எம்.பி.கள் நிராகரிப்பு: காரணத்தை ஜனாதிபதிக்கு றிசாட் விளக்கியதாக, பௌசி தெரிவிப்பு

அமைச்சுகளை ஏற்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை, முஸ்லிம் எம்.பி.கள் நிராகரிப்பு: காரணத்தை ஜனாதிபதிக்கு றிசாட் விளக்கியதாக, பௌசி தெரிவிப்பு 0

🕔26.Jul 2019

பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் தமது அமைச்சு பொறுப்புக்களை ஏற்பதற்கு இன்று வெள்ளிக்கிழமை காலை ஜனாதிபதி செயலகத்திற்கு வருமாறு  அங்கிருந்து அழைப்புக்கள் வந்திருந்த போதும், சமூகத்தின் அபிலாசைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமருடனும், ஜனாதிபதியுடனும் மீண்டும் சந்தித்து பேசிய பின்னரே, அமைச்சு பதவிகளை பொறுப்பேற்பது என்று நாம்  நேற்று மாலை முடிவு செய்திருந்தோம் என்று 

மேலும்...
சுதந்திரக் கட்சியின் 04 நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்தில் இணையவுள்ளதாக தகவல்

சுதந்திரக் கட்சியின் 04 நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்தில் இணையவுள்ளதாக தகவல் 0

🕔28.Mar 2019

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணையவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனடிப்படையில், மேற்படி நால்வருக்கும் அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு ஜனாதிபதியிடம் ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. விஜித் விஜயமுனி சொய்ஸா, பியசேன கமகே, லக்ஷ்மன் செனவிரட்ன மற்றும் ஏ.எச்.எம். பௌசி ஆகியோரே, ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் இணையவுள்ளனர்.

மேலும்...
புத்தளத்தில் குப்பை கொட்டும் திட்டத்தின் பாதிப்பு தொடர்பில், பிரதமருடன் பேசுவதற்கு முடிவு

புத்தளத்தில் குப்பை கொட்டும் திட்டத்தின் பாதிப்பு தொடர்பில், பிரதமருடன் பேசுவதற்கு முடிவு 0

🕔12.Mar 2019

புத்தளம் அறுவைக்காட்டு குப்பை பிரச்சினை தொடர்பில் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி தலைமையில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான  ரிஷாட் பதியுதீன், முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் , முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் புத்தளம்  மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று செவ்வாய்கிழமை மாலை நாடாளுமன்ற கட்டட தொகுதியில்

மேலும்...
அமைச்சர் பதவிகளை சிலருக்கு மைத்திரி ஏன் நிராகரித்தார்: காரணங்களும், பின்னணியும்

அமைச்சர் பதவிகளை சிலருக்கு மைத்திரி ஏன் நிராகரித்தார்: காரணங்களும், பின்னணியும் 0

🕔21.Dec 2018

இலங்கையில் புதிய அமைச்சரவையை நிறுவும் பொருட்டு, நேற்று, வியாழக்கிழமை 29 அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட போதிலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை தாங்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்க பக்கமாக கட்சி மாறிய எவருக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவில்லை. தான் தலைமை தாங்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து, ரணில் விக்ரமசிங்கவின் அணிக்கு மாறிய நாடாளுமன்ற

மேலும்...
அமர்சர்கள்பௌசி, பியசேன கமகே எதிர் தரப்புக்கு மாறினர்: வடிவேல் சுரேஸ் மீண்டும் தாவினார்

அமர்சர்கள்பௌசி, பியசேன கமகே எதிர் தரப்புக்கு மாறினர்: வடிவேல் சுரேஸ் மீண்டும் தாவினார் 0

🕔14.Nov 2018

அமைச்சர்களான ஏ.எச்.எம். பௌசி மற்றும பியசேன கமகே ஆகியோர் நாடாளுமன்றத்தில், எதிர் தரப்பு ஆசனங்களில் அமர்ந்தனர். இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயகாரவும் எதிர் தரப்பில் அமர்ந்தார். இந்த நிலையில், சுற்றுலா மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு துறை அமைச்சர் வசந்த சேனநாயக்கவும் தனது பதவியை ராஜிநாமா செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இவர் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்

மேலும்...
தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க ராஜாங்க அமைச்சராக பௌசி நியமனம்

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க ராஜாங்க அமைச்சராக பௌசி நியமனம் 0

🕔11.May 2018

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க ராஜாங்க அமைச்சராக சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற இந்த பதவிப்பிரமாண நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்ணான்டோவும் பிரசன்னமாகியிருந்தார். தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சராக மனோ கணேசனும்,

மேலும்...
பௌசி சொன்னது தவறு; பிரேரணையை சுதந்திரக் கட்சி ஆதரித்து வாக்களிக்கும்: டிலான், யாப்பா தெரிவிப்பு

பௌசி சொன்னது தவறு; பிரேரணையை சுதந்திரக் கட்சி ஆதரித்து வாக்களிக்கும்: டிலான், யாப்பா தெரிவிப்பு 0

🕔4.Apr 2018

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில், சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று, ராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி தெரிவித்த கருத்தை, சுதந்திரக் கட்சியின் இரண்டு அமைச்சர்கள் மறுத்துள்ளனர். ராஜாங்க அமைச்சர்களான லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன மற்றும் டிலான் பெரேரா ஆகியோரே, பௌசி வெளியிட்டுள்ள தகவலை மறுத்துள்ளனர். பிரதமருக்கு எதிரான

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்