Back to homepage

Tag "உள்ளூராட்சி மன்றத் தேர்தல்"

வேட்புமனுக்களை ரத்துச் செய்யும் பிரேரணையைக் கொண்டு வர யோசனை

வேட்புமனுக்களை ரத்துச் செய்யும் பிரேரணையைக் கொண்டு வர யோசனை 0

🕔12.Jun 2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக கோரப்பட்டுள்ள வேட்புமனுக்களை ரத்துச் செய்வதற்கான பிரேரணையொன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை (06) பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டத்திலும் இவ்விடயம் விரிவாக ஆராயப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறுவதற்கான அறிகுறியே இல்லாததால், வேட்புமனுக்களை ரத்துச் செய்துவிட்டு,

மேலும்...
தேர்தலில் போட்டியிடும் அரச பணியாளர்கள், இன்று தொடக்கம் வேலைக்குத் திரும்பலாம்

தேர்தலில் போட்டியிடும் அரச பணியாளர்கள், இன்று தொடக்கம் வேலைக்குத் திரும்பலாம் 0

🕔9.May 2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ள அரச பணியாளர்கள் இன்று (09) தொடக்கம் கடமைக்குத் திரும்ப முடியும். குறித்த பணியாளர்களை மீண்டும் பணியில் இணைப்பது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, உள்ளூராட்சி மன்ற வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்த அரச பணியாளர், தாங்கள் வேட்பாளராக போட்டியிடும் உள்ளூராட்சி எல்லைக்குள் பணிபுரிந்தால், அதற்கு வெளியே உள்ள

மேலும்...
உள்ளூராட்சித் தேர்தல் இரண்டாவது முறையாகவும் ஒத்தி வைப்பு

உள்ளூராட்சித் தேர்தல் இரண்டாவது முறையாகவும் ஒத்தி வைப்பு 0

🕔19.Apr 2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டபடி ஏப்ரல் 25ஆம் திகதி நடத்த முடியாது என மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவித்துள்ளனர். இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு ஏப்ரல் 11ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலை நடத்துவதற்கு திறைசேரியில் இருந்து பணம் விடுவிக்கப்படாமைக்கு தீர்வு காணப்படாததால், மேற்கண்ட திகதியில் வாக்குப்பதிவை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும்...
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கு இரண்டு மாதங்கள் சம்பளமில்லை: வழங்க வழியேற்படுத்துமாறு  சஜித் உரை

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கு இரண்டு மாதங்கள் சம்பளமில்லை: வழங்க வழியேற்படுத்துமாறு சஜித் உரை 0

🕔24.Mar 2023

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ள சுமார் 3ஆயிரம் அரச பணியாளர்களுக்கு – இரண்டு மாதம் சம்பளம் கிடைக்கவில்லை என்றும், அது கிடைப்பதற்கு வழியேற்படுத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றில் கோரிக்கை விடுத்தார் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவது தொடர்பில் அரசாங்கத் தரப்புக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் இன்று (24) நாடாளுமன்றில்

மேலும்...
உள்ளூராட்சித் தேர்தல் ஏப்ரல் 25இல் நடைபெறாது: ராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி

உள்ளூராட்சித் தேர்தல் ஏப்ரல் 25இல் நடைபெறாது: ராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி 0

🕔19.Mar 2023

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறாது என்று சுதேச மருத்துவ ராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார். அதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் நொவம்பரில் நடத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். பேலியகொட ஜயதிலகரராம விகாரையில் நேற்று (18) இடம்பெற்ற சுவதாரணி தீபா மருத்துவ சிகிச்சை தொடர்பிலான அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே

மேலும்...
புதன்கிழமைக்குள் 500 மில்லியன் ரூபா கிடைக்காது விட்டால், தபால் மூல வாக்களிப்புக்கு புதிய திகதி அறிவிக்க நேரிடும்

புதன்கிழமைக்குள் 500 மில்லியன் ரூபா கிடைக்காது விட்டால், தபால் மூல வாக்களிப்புக்கு புதிய திகதி அறிவிக்க நேரிடும் 0

🕔12.Mar 2023

திறைசேரி 500 மில்லியன் ரூபாயை எதிர்வரும் புதன்கிழமைக்குள் வழங்காவிட்டா,ல் தபால்மூல வாக்களிப்புக்கான புதிய திகதிகளை அறிவிக்க நேரிடும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தபால் மூல வாக்களிப்புக்களுக்கு எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதிவரை

மேலும்...
தேர்தலை மார்ச் 19க்கு முன்னர் நடத்துங்கள்: எதிர் கட்சிகள் கூட்டாக எழுத்து மூலம் கோரிக்கை

தேர்தலை மார்ச் 19க்கு முன்னர் நடத்துங்கள்: எதிர் கட்சிகள் கூட்டாக எழுத்து மூலம் கோரிக்கை 0

🕔5.Mar 2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 19ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் நடத்துமாறு கோரி அனைத்து பிரதான எதிர்க்கட்சிகளும் கூட்டாக தேர்தல் ஆணைக்குழுவிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளன. ‘சட்டப்படி தேர்தலை நடத்துவதற்கான ஒரே தடையை உச்ச நீதிமன்றம் இப்போது நீக்கியுள்ளது, 19 மார்ச் 2023 அன்று அல்லது அதற்கு முன் தேர்தலை நடத்துவது உங்கள்

மேலும்...
உள்ளூராட்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட அறிவிப்பு சட்டப்படி செல்லுபடியாகுமா?

உள்ளூராட்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட அறிவிப்பு சட்டப்படி செல்லுபடியாகுமா? 0

🕔2.Mar 2023

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – அறிவிக்கப்பட்ட ஒரு தேர்தலை நடத்துவதில் – இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கலைப் போன்று, வரலாற்றில் இதற்கு முன்னர் எப்போதும் ஏற்பட்டதில்லை. மார்ச் 09இல் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலை, அந்தத் திகதியில் நடத்த முடியாது என்று தேர்தல் ஆணைக்குழு கடந்த 24ஆம் திகதி கூறிவிட்டது. தேர்தலுக்கான

மேலும்...
தேர்தலை நடத்த தடையேற்படுத்தும் அதிகாரிகளை விசாரிக்குமாறு கோரி, அடிப்படை உரிமை மனுத் தாக்கல்

தேர்தலை நடத்த தடையேற்படுத்தும் அதிகாரிகளை விசாரிக்குமாறு கோரி, அடிப்படை உரிமை மனுத் தாக்கல் 0

🕔2.Mar 2023

உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்த ஒத்துழைப்பு வழங்காமல் அதற்கு தடையை ஏற்படுத்தி வருகின்ற – அரச நிறுவனங்களின் அதிகாரிகளின் செயற்பாடுகள் தொடர்பில் உடன் விசாரணை நடத்துமாறு கோரி உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாற்று கொள்கைகளுக்கான நிலையத்தினால் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழு எதிர்வரும் 09 ஆம் திகதி நடத்த திட்டமிட்டிருந்த

மேலும்...
“உள்ளூராட்சி தேர்தல் எனும் சடலம், ரணிலின் மலர்ச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது”

“உள்ளூராட்சி தேர்தல் எனும் சடலம், ரணிலின் மலர்ச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது” 0

🕔23.Feb 2023

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியது போன்று உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டரீதியாக அறிவிக்கப்படாவிட்டால், ஐக்கிய தேசியக் கட்சி ஏன் வேட்புமனுக்களை கையளித்தது என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெரும இன்று (23) கேள்வி எழுப்பியுள்ளார். ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் கூறியது முற்றிலும் பொய்யானது என அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பொய் சொல்வதில் மூன்று வகைகள் இருக்கிறது. முதலாவது

மேலும்...
உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒத்திவைக்குமாறு உத்தரவிடக் கோரும் மனு விசாரணை ஒத்திவைப்பு

உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒத்திவைக்குமாறு உத்தரவிடக் கோரும் மனு விசாரணை ஒத்திவைப்பு 0

🕔23.Feb 2023

உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒத்திவைக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு முன்னாள் ராணுவ கேணல் ஒருவர் தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த மனு விசாரணை எதிர்வரும் மே மாதம் 11 ஆம் திகதி வரை ஒத்திவைக்க உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படுவதை தடுக்கும் வகையிலான உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி,

மேலும்...
கட்டுப்பணத்தை திரும்ப பெற முடியாது: தேர்தல் ஆணையாாளர் தெரிவிப்பு

கட்டுப்பணத்தை திரும்ப பெற முடியாது: தேர்தல் ஆணையாாளர் தெரிவிப்பு 0

🕔21.Feb 2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குச் செலுத்தப்பட்ட கட்டுப்பணங்களை திரும்பப் பெற முடியாது என இலங்கை தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ரத்து செய்யப்படும் பட்சத்தில் மாத்திரமே, கட்டுப்பணத்தை மீளப் பெற முடியும் என ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். வேட்புமனுக்கள் ரத்து செய்யப்படுவதற்கு அரசாங்கம் இது தொடர்பான பிரேரணையொன்றை நாடாளுமன்றத்தில் முன்வைக்க

மேலும்...
தேர்தலை நடத்துவதற்கான நிதியை ஒதுக்காமைக்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்கு

தேர்தலை நடத்துவதற்கான நிதியை ஒதுக்காமைக்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்கு 0

🕔21.Feb 2023

உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்காக 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்காமைக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த தீர்மானத்தின் மூலம் பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரி, இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின்ன் பொதுச்

மேலும்...
தேர்தலை பிற்போடக் கூடாது: மஹிந்த ராஜபக்ஷ

தேர்தலை பிற்போடக் கூடாது: மஹிந்த ராஜபக்ஷ 0

🕔21.Feb 2023

உள்ளூராட்சி சபைத் தேர்தலை பிற்போடக் கூடாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (21) தெரிவித்துள்ளார். “உள்ளூராட்சி தேர்தலை யார் ஒத்திவைக்கப் போகிறார்கள்? தேர்தல் என்பதன் அர்ததம் ஒத்தி வைத்தல் அல்ல. தேர்தல் திட்டமிட்டபடி நடக்க வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம்” என்று அவர் நாடாளுமன்றத்தில் ஊடகவியலாளர்களிடம் கூறியுள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதற்கு

மேலும்...
உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பதற்கான உத்தரவை கோரும் மனு தொடர்பில் அறிவித்தல்

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பதற்கான உத்தரவை கோரும் மனு தொடர்பில் அறிவித்தல் 0

🕔20.Feb 2023

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு முன்னரே பரிசீலனைக்கு அழைக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரத்தை பரிசீலிக்க வேண்டிய அவசியமில்லை என மனுதாரரின் சட்டத்தரணிகள் இன்று (20) உச்ச நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர். ஓய்வுபெற்ற ராணுவ கேணல் டபிள்யூ. எம். ஆர். விஜேசுந்தர

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்