Back to homepage

Tag "அரச ஊழியர்கள்"

அரச ஊழியர்களுக்கு சம்பளத்துடன் 10 ஆயிரம் ரூபாய் இம்மாதம் வழங்கப்படும்

அரச ஊழியர்களுக்கு சம்பளத்துடன் 10 ஆயிரம் ரூபாய் இம்மாதம் வழங்கப்படும் 0

🕔7.Apr 2024

அரச ஊழியர்களின் ஏப்ரல் மாதத்துக்கான சம்பளம் எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த கொடுப்பனவில் 2024ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அரச ஊழியர்களுக்கான அதிகரிக்கப்பட்டுள்ள கொடுப்பனவும் உள்ளடங்கியிருக்கும் என நிதியமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி ஒவ்வொரு அரச ஊழியருக்கும் மேலதிகமாக 10,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும். அத்துடன், ஏப்ரல்

மேலும்...
அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு: வழங்கப்படவுள்ள காலத்தில் மாற்றம்

அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு: வழங்கப்படவுள்ள காலத்தில் மாற்றம் 0

🕔25.Nov 2023

அரச ஊழியர்களுக்கு வரவு – செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட அதிகரிக்கப்பட்ட 10,000 ரூபாய் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவில் 5,000 ரூபாவை ஜனவரி மாதம் முதல் வழங்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. ஓய்வூதியம் பெறுவோருக்கு அதிகரிக்கப்பட்ட 2500 ரூபாய் கொடுப்பனவை ஜனவரி மாதம் தொடக்கம் முழுமையாக வழங்குவதற்கும் இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது. வரவு – செலவுத் திட்டத்தில் அரச

மேலும்...
அரச ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படும்: நிதி ராஜாங்க அமைச்சர் உறுதி

அரச ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படும்: நிதி ராஜாங்க அமைச்சர் உறுதி 0

🕔7.Nov 2023

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி, மக்களுக்கு அழுத்தம் கொடுக்காத வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அரச ஊழியர்களின் சம்பளத்தை தவணை முறையில் உயர்த்துவது குறித்தும் ஆலோசிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் அவர் கூறியுள்ளார். வரவு – செலவுத் திட்ட பிரேரணைக்கு முன்னர் அரச ஊழியர்களின் சம்பளத்தை

மேலும்...
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க ஜனாதிபதி தீர்மானம்

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க ஜனாதிபதி தீர்மானம் 0

🕔30.Oct 2023

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். அமைச்சரவைக் கூட்டம் இன்று (30) நடைபெற்ற போது – ஜனாதிபதி இந்த விடயத்தை அங்கு தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தின் ஊடாக – இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என, அவர் குறிப்பிட்டதாக, அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும்...
அரச ஊழியர்களுக்கு கடந்த வருடம் கிடைத்த வாய்ப்பு, பறிபோகும் சாத்தியம்

அரச ஊழியர்களுக்கு கடந்த வருடம் கிடைத்த வாய்ப்பு, பறிபோகும் சாத்தியம் 0

🕔5.Jun 2023

அரச ஊழியர்கள் – ஐந்தாண்டு விடுமுறையில் வெளிநாட்டில் பணியாற்ற வாய்ப்பளிக்கும் தீர்மானத்தை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வாய்ப்புள்ளதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர் டொக்டர்அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். அந்நியச் செலாவணி நெருக்கடியின் உச்சக்கட்டத்தில் நாடு இருந்தபோது, அரச ஊழியர்களுக்கு ஊதியம் இல்லாத விடுமுறையுடன் ஐந்து ஆண்டுகள் வெளிநாட்டில் வேலை செய்ய அரசாங்கம் அனுமதித்தது. குறித்த அரச ஊழியர்கள்

மேலும்...
கொவிட் காரணமாக இடைநிறுத்தப்பட்ட நடைமுறை, மீண்டும் அமுல்

கொவிட் காரணமாக இடைநிறுத்தப்பட்ட நடைமுறை, மீண்டும் அமுல் 0

🕔15.May 2023

அரச ஊழியர் வேலைக்குச் செல்லும்போதும் கடமையை முடித்து வெளியேறும்போதும் தங்கள் கைவிரல் அடையாளத்தை பதிவிடும் நடைமுறை இன்று தொடக்கம் மீண்டும் அமுலுக்கு வந்துள்ளது. கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக, கைரேகை பதிவு முறை ஜனவரி 2022 அன்று இடைநிறுத்தப்பட்டது. இந்த நிலையில், இந்த நடைமுறையை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, அடுத்த வாரம் தொடக்கம் அனைத்து அரச

மேலும்...
அரச ஊழியர்களில் 02 ஆயிரம் பேர், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் சென்றுள்ளதாக தகவல்

அரச ஊழியர்களில் 02 ஆயிரம் பேர், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் சென்றுள்ளதாக தகவல் 0

🕔30.Apr 2023

அரச ஊழியர்களில் சுமார் 2,000 பேர் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் பொருட்டு, ஐந்தாண்டு காலத்திற்கு நீட்டிக்கப்பட்ட விடுமுறையைப் பெற்றுள்ளனர். பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கவும், அரசின் செலவினங்களைக் குறைக்கவும் முன்னெப்போதும் இல்லாத நடவடிக்கையைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஊதியமில்லாத விடுமுறையின் மூலம் – வெளிநாட்டில் பணிபுரியவோ, தொழில் பயிற்சி பெறவோ

மேலும்...
அரச ஊழியர்களைக் குறைக்க நடவடிக்கை: ‘சுய ஓய்வு’ பொறிமுறை அமுல்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல தெரிவிப்பு

அரச ஊழியர்களைக் குறைக்க நடவடிக்கை: ‘சுய ஓய்வு’ பொறிமுறை அமுல்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல தெரிவிப்பு 0

🕔31.Jan 2023

அனைத்து அரச நிறுவனங்களிலும் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்காக ‘சுய ஓய்வு’ பொறிமுறையொன்று அறிமுகப்படுத்தப்படும் எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவரதன தெரிவித்துள்ளார். இந்த ‘சுய ஓய்வு’ பொறிமுறையின் மூலம், திறமையற்ற பொதுத்துறை ஊழியர்கள் நீக்கப்படுவார்கள் என்று அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அவர் கூறினார். அனைத்து திணைக்களங்களிலும்

மேலும்...
அரச ஊழியர்களுக்கு 05 ஆயிரம் ரூபா மேலதிக வேதனம் வழங்குவதற்கான சுற்றறிக்கை வெளியானது: யாருக்கெல்லாம் இது கிடைக்கும்?

அரச ஊழியர்களுக்கு 05 ஆயிரம் ரூபா மேலதிக வேதனம் வழங்குவதற்கான சுற்றறிக்கை வெளியானது: யாருக்கெல்லாம் இது கிடைக்கும்? 0

🕔13.Jan 2022

அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்குவதற்கான சுற்றறிக்கை வெளியாகியுள்ளது. மாதாந்தம் வேதனம் பெறும் நிலையான அல்லது தற்காலிக மற்றும் ஒப்பந்த கால ஊழியர்கள் மற்றும் நாளாந்த வேதனம் பெறும் ஊழியர்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது. வேதனமின்றி விடுமுறையில் இருக்கும் ஊழியர்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படமாட்டாது. அத்துடன்,

மேலும்...
அரச ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு, வரி நீக்கம், சமுர்த்தி பயனாளர்களுக்கு அதிகரித்த தொகை: நிதியமைச்சர் பசில் அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு, வரி நீக்கம், சமுர்த்தி பயனாளர்களுக்கு அதிகரித்த தொகை: நிதியமைச்சர் பசில் அறிவிப்பு 0

🕔3.Jan 2022

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களுக்கான சகல வரிகளும் நீக்கப்படுவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். அத்துடன் அரச சேவையாளர்கள் மற்றும் விசேட தேவையுடைய பாதுகாப்புப் படையினர் ஆகியோருக்கு இந்த மாதம் முதல் 5,000 ரூபா மேலதிக

மேலும்...
அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல் 0

🕔24.Aug 2021

கொவிட் தொற்று காரணமாக நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில், அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படும் சாத்தியம் காணப்படுவதாக பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரச துறையில் பணியாற்றும் ஊழியர்களிகளின் சம்பளத்தை குறைக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது.

மேலும்...
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க கலந்துரையாடல் ஆரம்பம்: அமைச்சரவைக்கு பசில் அறிவிப்பு

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க கலந்துரையாடல் ஆரம்பம்: அமைச்சரவைக்கு பசில் அறிவிப்பு 0

🕔30.Jul 2021

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு வழங்க வரவு செலவு திட்டத்தில் அவதானம் செலுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி கேட்டாபய ராஜபக்ஷ தலைவமை சூம் தொழில்நுட்பத்தில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர், அதிபர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை இணக்கம் வெளியிட்ட போதிலும் இது தொடர்பில் ஆசிரியர் சங்கத்துடன் விசேட கலந்துரையாடல்

மேலும்...
அரச ஊழியர்கள் தேர்தல் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம்: ஜனாதிபதி கடுமையான உத்தரவு

அரச ஊழியர்கள் தேர்தல் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம்: ஜனாதிபதி கடுமையான உத்தரவு 0

🕔2.Jul 2020

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரச்சார நடவடிக்கைகளுக்காக தனது புகைப்படங்களைப் பயன்படுத்தக்கூடாதென தான் உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதேபோன்று பாதுகாப்பு சேவைகள், அரச சேவைகள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்களில் சேவையில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்கள் எவரும் தேர்தல் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாதென்றும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து

மேலும்...
திங்கட்கிழமை விடுமுறை இல்லை; அரசாங்கம் அறிவிப்பு

திங்கட்கிழமை விடுமுறை இல்லை; அரசாங்கம் அறிவிப்பு 0

🕔20.May 2016

திங்கட்கிழமை அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கும் தீர்மானத்தை அரசாங்கம் ரத்துச் செய்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள இயற்கை  அனர்த்தத்தினைக் கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாளை சனிக்கிழமையும், நாளை மறுதினமும் வெசாக் போயா தினம் வருகின்றமையினால்,  எதிர்வரும் திங்கட்கிழமையன்று அரச ஊழியர்களுக்கு விடுமுறையொன்றை வழங்குவது குறித்து அரசாங்கம் பரீசீலனை செய்திருந்தது. எனினும் தற்போது எதிர்பாராத

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்