Back to homepage

Tag "அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம்"

பொதுமக்களுடன் சினேகமாகப் பழகும் பிரதம பொலிஸ் பரிசோதகர் மஜீத்: சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

பொதுமக்களுடன் சினேகமாகப் பழகும் பிரதம பொலிஸ் பரிசோதகர் மஜீத்: சேவையிலிருந்து ஓய்வு பெற்றார் 0

🕔14.Jul 2023

– ஏ.எல். ஆஸாத் (சட்டத்தரணி) – அக்கரைப்பற்றுபொலிஸ் நிலையத்தின் பெருங்குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய, பிரதம பொலிஸ் பரிசோதகர் மீராசாஹிப் அப்துல் மஜீத் இன்று (14) தனது 60வது வயதைப் பூர்த்தியடைந்ததன் காரணமாக சேவையில் இருந்து ஓய்வுபெற்றார். சம்மாந்துறைப் பிரதேசத்தைச் சேர்ந்த அப்துல் மஜீத், 1985ஆம் ஆண்டு பொலிஸ் சேவையில் இணைந்தார். இவர் தனது சேவைப்

மேலும்...
அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை ஆசிரியர் மீது சக ஆசிரியர் தாக்குதல் முயற்சி; அதிபரின் சொற்படி காசோலை எழுதாமையே பின்னணி என்கிறார் பாதிக்கப்பட்டவர்

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை ஆசிரியர் மீது சக ஆசிரியர் தாக்குதல் முயற்சி; அதிபரின் சொற்படி காசோலை எழுதாமையே பின்னணி என்கிறார் பாதிக்கப்பட்டவர் 0

🕔7.Mar 2023

– அஹமட் – பாடசாலை முகாமைத்துவ கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, தனது சக ஆசிரியர் ஒருவர் தன்னை தூஷண வார்த்தைகளால் பேசி, தாக்குவதற்கு முயற்சித்தார் என, அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவர் – அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் பொருளாளர் பொறுப்பிலுள்ள ஏ.ஆர். அசாபிர் எனும்

மேலும்...
நீதிமன்ற உத்தரவை செய்தியாக்கியமைக்காக  அச்சுறுத்தல்: வழக்கு ஒன்றின் சந்தேக நபரான அட்டாளைச்சேனையைச் சேர்ந்த பௌசான் என்பவருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு

நீதிமன்ற உத்தரவை செய்தியாக்கியமைக்காக அச்சுறுத்தல்: வழக்கு ஒன்றின் சந்தேக நபரான அட்டாளைச்சேனையைச் சேர்ந்த பௌசான் என்பவருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு 0

🕔25.Feb 2023

நீதிமன்ற உத்தரவை செய்தியாக்கியமைக்காக ‘புதிது’ செய்தித்தளத்தின் ஆசிரியரை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதோடு, ‘பேஸ்புக்’கில் அவதூறாகவும் எழுதியுள்ள அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எம்.எச்.எம். பௌசான் என்பவருக்கு எதிராக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த நபர், பெண் ஒருவரின் படங்களை ‘பேஸ்புக்’கில் வெளியிடப் போவதாக அச்சுறுத்தி – கப்பம் கோரினார் எனும் குற்றச்சாட்டில் கைதாகி

மேலும்...
அட்டாளைச்சேனையில் மீன் சந்தையை தவிர்த்து, பிரதான வீதியோரங்களில் மீன் வியாபாரம் செய்வோர் தொடர்பில் முறைப்பாடு: பொலிஸ் நடவடிக்கை இன்னுமில்லை

அட்டாளைச்சேனையில் மீன் சந்தையை தவிர்த்து, பிரதான வீதியோரங்களில் மீன் வியாபாரம் செய்வோர் தொடர்பில் முறைப்பாடு: பொலிஸ் நடவடிக்கை இன்னுமில்லை 0

🕔24.Feb 2023

– அஹமட் – அட்டாளைச்சேனையில் மீன் சந்தைக் கட்டடமொன்று அண்மையில் திறந்து வைக்கப்பட்ட நிலையில், சில மீன் வியாபாரிகள் குறித்த இடத்தில் மீன்களை விற்பனை செய்யாமல், தமது வாகனங்களில் மீன் சந்தைக் கட்டடத்துக்கு முன்பாகவும், பிரதான வீதியோரங்களிலும் வியாபாரத்தில் ஈடுபடுவதால், பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகத் தெரிவித்து, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அட்டாளைச்சேனை

மேலும்...
பாலமுனை பொலிஸ் காவலரண் பகுதியில் நடந்த வன்முறைகள் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகள் ஆரம்பம்

பாலமுனை பொலிஸ் காவலரண் பகுதியில் நடந்த வன்முறைகள் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகள் ஆரம்பம் 0

🕔6.May 2022

– பாறுக் ஷிஹான் – அம்பாறை மாவட்டம்  பாலமுனை பொலிஸ்   காவலரண்  பகுதியில் ஏற்பட்ட சம்பவத்தில்  காயமடைந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை மற்றும் அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் விசாரணைகளை மனித உரிமை ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது.  இதற்கமைய  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை  பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தலைமையிலான குழு இன்று வெள்ளிக்கிழமை

மேலும்...
அட்டாளைச்சேனையில் சிறுமியைக் கடத்தியவர், புத்தளத்தில் கைது

அட்டாளைச்சேனையில் சிறுமியைக் கடத்தியவர், புத்தளத்தில் கைது 0

🕔17.Jan 2022

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 14 வயது சிறுமியொருவரைக் கடத்திச் சென்ற நபர், புத்தளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட சிறுமியும் அங்கிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர், அட்டாளைச்சேனையைச் சேர்ந்த 09ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியொருவர் கடத்தப்பட்டுள்ளதாக, அவரின் பெற்றோர் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். கடத்தியவரையும் சிறுமியையும் பெற்றோர் தேடி

மேலும்...
அட்டாளைச்சேனையில் 14 வயது சிறுமி கடத்தல்; பின்னணியில் உள்ளுர் அரசியல்வாதி: பொலிஸ் நிலையத்தில் முறையிட்டும் நடவடிக்கை இல்லை என பெற்றோர் விசனம்

அட்டாளைச்சேனையில் 14 வயது சிறுமி கடத்தல்; பின்னணியில் உள்ளுர் அரசியல்வாதி: பொலிஸ் நிலையத்தில் முறையிட்டும் நடவடிக்கை இல்லை என பெற்றோர் விசனம் 0

🕔12.Jan 2022

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 14வயதுடைய சிறுமியொருவர் கடத்தப்பட்டுள்ளதாக, சிறுமியின் பெற்றோர் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம் மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் அம்பாறைக் காரியாலயம் ஆகியவற்றில் சிறுமியின் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர். கடந்த 12 நாட்களுக்கு முன்னர் இளைஞர் ஒருவர், குறித்த சிறுமியை கடத்திச் சென்றுள்ளதாகவும் குறித்த முறைப்பாட்டில் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில்,

மேலும்...
அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல திருட்டுப் பேர்வழி; அஸீம் குழுவினரிடம் அகப்பட்டார்: ஹெரோயினும் சிக்கியது

அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல திருட்டுப் பேர்வழி; அஸீம் குழுவினரிடம் அகப்பட்டார்: ஹெரோயினும் சிக்கியது 0

🕔4.Oct 2020

– அஹமட் – அக்ரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்ற பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் தேடப்பட்டு வந்த அஹீல் என அழைக்கப்படும் எம்.ரி. இம்தியாஸ் என்பவரை நேற்று சனிக்கிழமை அக்கரைப்பற்று பொலிஸார் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். இதன்போது சந்தேக நபரிடமிருந்து 04 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார்

மேலும்...
அபகீர்த்தி ஏற்படுத்தும் பேஸ்புக் பதிவு; அட்டாளைச்சேனையைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

அபகீர்த்தி ஏற்படுத்தும் பேஸ்புக் பதிவு; அட்டாளைச்சேனையைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு 0

🕔21.Aug 2020

– அஹமட் – தனது நற்பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் ‘பேஸ்புக்’ பக்கம் ஒன்றில் எழுதப்பட்டமைக்கு எதிராக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் கே.எம். முனவ்வர் என்பவர், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். ‘தவமணி’ எனும் பெயரில் உருவாக்கப்பட்ட பேஸ்புக் கணக்கில், மேற்படி முனவ்வர் என்பவர் குறித்து –

மேலும்...
ராணுவ சீருடையில் வந்தோர் பொதுமக்கள் மீது தாக்குதல்; சட்டத்தரணி அன்சில், அக்கரைப்பற்று பொலிஸில் முறைப்பாடு

ராணுவ சீருடையில் வந்தோர் பொதுமக்கள் மீது தாக்குதல்; சட்டத்தரணி அன்சில், அக்கரைப்பற்று பொலிஸில் முறைப்பாடு 0

🕔25.Jun 2019

– அஹமட் – அம்பாறை மாவட்டம் – பாலமுனை கடற்கரை வீதியில் பயணித்த பொதுமக்களை, நேற்று திங்கட்கிழமை ராணுவ உடை தரித்த சிலர் கடுமையாகி தாக்கி காயப்படுத்தியதாக தெரிவித்து, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் சட்டத்தரணியுமான எம்.ஏ. அன்சில், இன்று செவ்வாய்கிழமை அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். பொதுமக்கள் தாக்கப்படும் காட்சிகள், அங்கு

மேலும்...
வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு எதிராக, அட்டாளைச்சேனை பொதுமக்கள் பொலிஸில் முறைப்பாடு; நஷ்டஈடு வழங்குமாறும் கோரிக்கை

வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு எதிராக, அட்டாளைச்சேனை பொதுமக்கள் பொலிஸில் முறைப்பாடு; நஷ்டஈடு வழங்குமாறும் கோரிக்கை 0

🕔25.Feb 2018

– அஹமட் – அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தைச் சேர்ந்த பொதுமக்கள், வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு எதிராக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை முறைப்பாடு செய்துள்ளனர். வீதி அபிவிருத்தி திணைக்களத்தினர் தமது வீதியினை சேதப்படுத்தியுள்ளதாகவும், அதன் மூலம் சூழலை மாசடையச் செய்து, பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்தியுள்ளதாகவும், குறித்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர். வீதி அபிவிருத்தி திணைக்களத்தின்

மேலும்...
மறியல் போராட்டம் நடத்தும் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு; நிருவாகத்துக்கு இடையூறு செய்வதாகவும் புகார்

மறியல் போராட்டம் நடத்தும் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு; நிருவாகத்துக்கு இடையூறு செய்வதாகவும் புகார் 0

🕔29.Dec 2017

– மப்றூக் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிருவாகக் கட்டடத்தின் முன்பாக, அந்தப் பல்லைகக்கழகத்தின் பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் பீட மாணவர்கள், மறியல் போராட்டம் நடத்தி வருகின்றமையினால், பல்கலைக்கழக நிருவாகக் கடமைகளை மேற்கொள்வதில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாக, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம். நாஜிம் தெரிவித்தார்.பொறியியல் பீட மாணவர்கள் மூவருக்கும், தொழில்நுட்பவியல் பீட மாணவர்கள் இருவருக்கும் பல்கலைக்கழக

மேலும்...
பொய்யான துண்டுப் பிரசுரம் விநியோகித்த, அட்டாளைச்சேனை நபர்களுக்கு எதிராக முறைப்பாடு

பொய்யான துண்டுப் பிரசுரம் விநியோகித்த, அட்டாளைச்சேனை நபர்களுக்கு எதிராக முறைப்பாடு 0

🕔12.Jan 2016

– முஹம்மட் – மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர் (MLT) ஒருவர் தொடர்பில், பொய்யான தகவல்களைக் கொண்ட துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டார்கள் எனும் குற்றச்சாட்டில், அட்டாளைச்சேனையைச் சேர்ந்த மூவருக்கு எதிராக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த துண்டுப் பிரசுரத்தினால் பாதிக்கப்பட்ட மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளரான அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எஸ்.எல். முகம்மட் பாயிஸ் என்பவர் மேற்படி முறைப்பாட்டினை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்