Back to homepage

Tag "விஜேதாஸ ராஜபக்ஷ"

விஜேதாஸ ராஜபக்ஷ, நாளை ராஜிநாமா

விஜேதாஸ ராஜபக்ஷ, நாளை ராஜிநாமா 0

🕔20.Aug 2017

நீதி மற்றும் புத்தசாசன அமைச்சரும், ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜேதாஸ ராஜக்ஷ, நாளை திங்கள்கிழமை தனது பதவியிலிருந்து ராஜிநாமா செய்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. புத்தசாசன அமைச்சில் நடைபெறவுள்ள ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொள்ளும் அமைச்சர், அங்கு தனது ராஜிநாமாவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர் நாளை காலை விசேட அறிக்கையொன்றினை விடுக்கவுள்ளார்

மேலும்...
நீதியமைச்சை ராஜிநாமா செய்யுமாறு, ஐ.தே.க. செயற்குழு அழுத்தம்; மாட்டேன் என்கிறார் விஜேதாஸ

நீதியமைச்சை ராஜிநாமா செய்யுமாறு, ஐ.தே.க. செயற்குழு அழுத்தம்; மாட்டேன் என்கிறார் விஜேதாஸ 0

🕔19.Aug 2017

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்சவை நீதியமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு ஐ.தே.கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆயினும், தற்போது அவர் வசமுள்ள புத்த சாசன அமைச்சினை தொடர்ந்தும் அவரே வகிப்பதற்கு, தமக்கு எதுவித ஆட்சேபனைகளுமில்லை என்றும், செயற்குழு தெரிவித்துள்ளது. ‘ஹம்பாந்தோட்ட துறைமுகத்தை மீளப் பெற்றுக் கொள்ளும் வரை, நான் ஓயப் போவதில்லை’ என்று,

மேலும்...
விஜேதாஸவுக்கு எதிராக, நம்பிக்கையில்லா பிரேரணை; சொந்தக் கட்சியின் செயற் குழுவில், ஏகமனதாக நிறைவேற்றம்

விஜேதாஸவுக்கு எதிராக, நம்பிக்கையில்லா பிரேரணை; சொந்தக் கட்சியின் செயற் குழுவில், ஏகமனதாக நிறைவேற்றம் 0

🕔18.Aug 2017

நீதி மற்றும் புத்த சாசன அமைச்சரும், ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு எதிராக, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற் குழுவில் நம்பிக்கையில்லா பிரேரணையொன்று கொண்டு வரப்பட்டு, ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது. ஐ.தே.கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று வியாழக்கிமை காலை, கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. மேற்படி நம்பிக்கையில்லா பிரேரணையினை நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் அசு மாரசிங்க

மேலும்...
விஜேதாஸவுக்கு எதிராக, ஐ.தே.க. செயற்குழு கூட்டத்தில் கடுமையான குற்றச்சாட்டுக்கள் முன்வைப்பு

விஜேதாஸவுக்கு எதிராக, ஐ.தே.க. செயற்குழு கூட்டத்தில் கடுமையான குற்றச்சாட்டுக்கள் முன்வைப்பு 0

🕔17.Aug 2017

நீதியமைச்சரும், ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு எதிராக, இன்று வியாழக்கிழமை நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் கடுமையான விமர்சனங்களும், குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டதாகத் தெரியவருகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் இன்று இடம்பெற்றது. இதன்போது, தேர்தலில் வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக கடந்த ஆட்சியில்

மேலும்...
ஞானசாரர் விவகாரத்தில், ஹக்கீமை கொழுவுகிறார் விஜேதாஸ ராஜபக்ஷ

ஞானசாரர் விவகாரத்தில், ஹக்கீமை கொழுவுகிறார் விஜேதாஸ ராஜபக்ஷ 0

🕔21.Jun 2017

ஞானசார தேரருக்கு, தான் புகலிடம் வழங்கியிருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை, நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ முற்றாக மறுத்துள்ளார். “ஞானசார தேரருக்கு நான் புகலிடம் வழங்குவதாக, சில முஸ்லிம் கடும்போக்காளர்கள் சுமத்தும் குற்றச்சாட்டுக் குறித்து, நான் மிகவும் கவலையடைந்துள்ளேன். தேரருக்கும் எனக்குமிடையில் எந்தத் தொடர்புமில்லை” என்றும் அவர் கூறியுள்ளார். “பொதுபல சேனா அமைப்பு 2014ஆம் ஆண்டு பல்வேறு நடவடிக்கைகளில்

மேலும்...
காவியை மறைக்கிறதா நீதி; விசாரிக்கப்பட வேண்டிவர், விஜேதாஸ ராஜபக்ஷ

காவியை மறைக்கிறதா நீதி; விசாரிக்கப்பட வேண்டிவர், விஜேதாஸ ராஜபக்ஷ 0

🕔21.Jun 2017

– அ. அஹமட் – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்விஷன் மிக நெருங்கிய சகாவாக, சில நாட்களுக்கு முன்னர், மலித் விஜயநாயக்க என்ற நபர் தன்னை  வீடியோ மூலம் அறிமுகப்படுத்திக் கொண்டார். பொதுபல சேனா அமைப்பை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ வழி நடாத்திச் செல்கிறார் என்னும், அதற்கு தானே ஆதாரம் எனவும் கூறி அவர்

மேலும்...
ஞானசார தேரரை பொலிஸார் பாதுகாக்கின்றனர்; சந்தேகம் எழுவதாக குற்றச்சாட்டு

ஞானசார தேரரை பொலிஸார் பாதுகாக்கின்றனர்; சந்தேகம் எழுவதாக குற்றச்சாட்டு 0

🕔20.Jun 2017

ஞானசார தேரரை பொலிசார் பாதுகாக்கின்றார்களா என்ற அச்சம் எழுவதாக பாணந்துறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் தெரிவித்துள்ளார். பொலிஸாரின் அண்மைக்கால செயற்பாடுகளை அவதானிக்கின்ற போது, இந்த சந்தேகம் எழுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தியிலேயே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார். அந்த செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது; இலங்கையில் முஸ்லிம்கள் மீது அண்மைக் காலமாக மேற்கொள்ளப்படுகின்ற

மேலும்...
முஸ்லிம்களின் கடையெரிப்புகளுடன், தனக்கு தொடர்புள்ளதாக வரும் செய்திகளுக்கு கோட்டா மறுப்பு

முஸ்லிம்களின் கடையெரிப்புகளுடன், தனக்கு தொடர்புள்ளதாக வரும் செய்திகளுக்கு கோட்டா மறுப்பு 0

🕔9.Jun 2017

முஸ்லிம்களின் கடைகளுக்கு அண்மைக் காலமாக தீ வைக்கப்படும் சம்பவங்களுடனும், பலசேனா அமைப்புடனும் தனக்கு தொடர்புகள் உள்ளதாக பரப்பப்படும் செய்திகளை, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மறுத்துள்ளார். தனது பேஸ்புக் பக்கத்திலேயே அவர் இந்த மறுப்பினைத் தெரிவித்துள்ளார். முஸ்லிம்களின் கடைகள் எரிக்கப்பட்ட சம்பவங்களுடன் நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவும் பொதுபலசேனா அமைப்பும் தொடர்புபட்டுள்ளதாக செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

மேலும்...
கரும் புள்ளிகள்

கரும் புள்ளிகள் 0

🕔6.Jun 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – முஸ்லிம்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான நல்லுறவில் கரும் புள்ளிகள் விழத் தொடங்கியுள்ளன. ஞானசார தேரர் விவகாரம்தான் இதற்குப் பிரதான காரணமாகும். இது எங்கு போய் முடியும் எனத் தெரியவில்லை. ஆனால், இந்தச் சந்தர்ப்பத்தை மஹிந்த ராஜபக்ஷ அணி மிக நன்றாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. முஸ்லிம்களுக்காகப் பரிந்தும், அனுதாபத்துடனும் மஹிந்த தரப்புப்

மேலும்...
பொன்சேகாவுக்கு ஐ.தே.கட்சியில் உப தலைவர் பதவி; குழம்புகிறார் விஜேதாஸ ராஜபக்ஷ

பொன்சேகாவுக்கு ஐ.தே.கட்சியில் உப தலைவர் பதவி; குழம்புகிறார் விஜேதாஸ ராஜபக்ஷ 0

🕔5.May 2017

அரசியல் ரீதியிலானதொரு முடிவினை சர்வதேச வெசாக் தினத்தின் பின்னர், தான் மேற்கொள்ளவுள்ளதாக, ஐ.தே.கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான விஜேதாஸ ராஜபக்ஷ  தெரிவித்துள்ளார். அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு ஐ.தே.கட்சியில் உப தலைவர் பதவி வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையிலேயே, அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ, அரசியல் முடிவொன்றினை எடுக்கவுள்ளதாகக் கூறியுள்ளார். அமைச்சர்களான சரத் பொன்சேகா மற்றும்

மேலும்...
ஞானசார மற்றும் சுமனரத்ன தேரர்களை கைது செய்யுமாறு ஹிஸ்புல்லாஹ் வலியுறுத்தல்

ஞானசார மற்றும் சுமனரத்ன தேரர்களை கைது செய்யுமாறு ஹிஸ்புல்லாஹ் வலியுறுத்தல் 0

🕔8.Dec 2016

நாட்டின் சமாதானம் – அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டு வரும் பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் மற்றும் மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிடிய சுமனரத்ன தேரர் ஆகியோரை உடனடியாக கைது செய்ய வேண்டும் அல்லது அவர்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.

மேலும்...
நீதியமைச்சருக்கும், முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு

நீதியமைச்சருக்கும், முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு 0

🕔23.Nov 2016

– அஷ்ரப் ஏ சமத் – மதங்களுக்கிடையில்  வெறுப்பூட்டும் பேச்சுக்கள், செயற்பாடுகள் மற்றும் சமூக வலைத் தளங்களில்  வெயியிடப்படும் கருத்துக்களுக்கும், அந்தக் கருத்துக்களைப் பரப்புகின்றவர்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சா் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார். நீதியமைச்சருக்கும், முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு, இன்று புதன்கிழமை நீதியமைச்சில் இடம்பெற்றது. இதன்

மேலும்...
நீதியமைச்சரின் கருத்துக்கள் வாபஸ் பெறப்பட வேண்டும்; கிழக்கு முதலமைச்சர் வலியுத்தல்

நீதியமைச்சரின் கருத்துக்கள் வாபஸ் பெறப்பட வேண்டும்; கிழக்கு முதலமைச்சர் வலியுத்தல் 0

🕔19.Nov 2016

இலங்கை முஸ்லிம்கள் குறித்து அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ – நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை, இனவாதிகளுக்கு தீனி போட்டதைப் போல் அமைந்துள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார் சாய்ந்தமருதில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே, முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதனைக் கூறினார். தற்போது நாட்டில் முஸ்லிங்களுக்கெதிரான கருத்துக்கள்

மேலும்...
ராஜபக்ஷவினரின் புதிய கட்சியின் நிறம் நீலமாக இருக்காது; உறுதிப்படுத்தினார் நாமல்

ராஜபக்ஷவினரின் புதிய கட்சியின் நிறம் நீலமாக இருக்காது; உறுதிப்படுத்தினார் நாமல் 0

🕔10.May 2016

ராஜபக்ஷவினர் புதிய அரசியல் கட்சியொன்றினை ஆரம்பிக்கப் போகின்றமையை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ நேற்று திங்கட்கிழமை உறுதிப்படுத்தியதோடு, அந்தக் கட்சியின் நிறம் நீலமாக இருக்காது என்றும் கூறினார். நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்சவின் இரண்டாவது மகனும் பாதுகாப்பு அமைச்சின் ஊடக செயலாளருமான ரக்கித ராஜபக்சவின் திருமண வைபவம் நேற்று திங்கட்கிழமை கொழும்பில்

மேலும்...
சரத் பொன்சேகா, விஜேதாஸ ராஜபக்ஷ அமைச்சரவையில் கடும் வாக்குவாதம்; ஜனாதிபதி தலையீடு

சரத் பொன்சேகா, விஜேதாஸ ராஜபக்ஷ அமைச்சரவையில் கடும் வாக்குவாதம்; ஜனாதிபதி தலையீடு 0

🕔7.Apr 2016

அமைச்சர்களான சரத் பொன்சேகா மற்றும் விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோர் நேற்று  புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக்கூட்டத்தின் போது கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது தலையிட்டு அமைதியை ஏற்படுத்தினார் என்று தெரியவருகிறது. பௌத்த பிக்குகள் தொடர்பில் தான் நாடாளுமன்றத்தில் அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில், அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ மன்னிப்பு கோரியமையினை அமைச்சர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்