Back to homepage

Tag "றிஷாட் பதியுதீன்"

சிறுபான்மை சமூகத்துக்கு ஏற்ற மக்கள் தலைவரை அடையாளப்படுத்த செயற்பட்டு வருகிறோம்: அமைச்சர் றிஷாட்

சிறுபான்மை சமூகத்துக்கு ஏற்ற மக்கள் தலைவரை அடையாளப்படுத்த செயற்பட்டு வருகிறோம்: அமைச்சர் றிஷாட் 0

🕔20.Sep 2019

சிறுபான்மை மக்களையும் அரவணைத்து செல்கின்ற, நல்ல ஒரு தலைவரை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளில் சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் ஒருமித்து உழைத்துவருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா மாங்குளம் ஹாமிய மகா வித்தியாலயத்தில் ஆரம்பப்பிரிவு கற்றல்வள நிலைய திறப்புவிழாவில் இன்று வெள்ளிக்கிழமை பிரதம விருந்தினராக அவர் கலந்துகொண்டு உரையாற்றினார்.

மேலும்...
மன்னார் மாவட்டத்திலே  எருக்கலம்பிட்டி கிராமம் வரலாற்று பெருமை மிக்கது: அமைச்சர் றிஷாட் புகழாரம்

மன்னார் மாவட்டத்திலே எருக்கலம்பிட்டி கிராமம் வரலாற்று பெருமை மிக்கது: அமைச்சர் றிஷாட் புகழாரம் 0

🕔13.Sep 2019

கிராமங்களின் வளர்ச்சியும், பொருளாதார எழுச்சியும், செழுமையும் அந்தந்த கிராமங்களின் கல்வி முன்னேற்றத்தில்தான் தங்கியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயத்தின் 75வது வருட பவளவிழாவும் நூர்தீன் மஷூர் பார்வையாளர் அரங்கு அங்குரார்ப்பணமும் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. இதன்போது அமைச்சர் றிஷாட் விசேட அதிதியாக

மேலும்...
வாகன சக்கரம் மாற்றுதல் மற்றும் சக்கர சீரமைப்பு நிலையம்: அமைச்சர் றிஷாட் திறந்து வைத்தார்

வாகன சக்கரம் மாற்றுதல் மற்றும் சக்கர சீரமைப்பு நிலையம்: அமைச்சர் றிஷாட் திறந்து வைத்தார் 0

🕔11.Sep 2019

இலங்கை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தில் ‘வாகன சக்கரம் மாற்றுதல் மற்றும் சக்கர சீரமைப்பு நிலையம்’ அமைச்சர் றிஷாட் பதியுதீனால் இன்று புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது. கைத்தொழில் வாணிப அலுவல்கள், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழ், இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனம் செயற்பட்டு வருகிறது. புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள

மேலும்...
நாடு பின்னோக்கி செல்லக்கூடிய ஆபத்தும் துர்ப்பாக்கியமும் ஏற்பட்டுள்ளது: அமைச்சர் றிஷாட் எச்சரிக்கை

நாடு பின்னோக்கி செல்லக்கூடிய ஆபத்தும் துர்ப்பாக்கியமும் ஏற்பட்டுள்ளது: அமைச்சர் றிஷாட் எச்சரிக்கை 0

🕔9.Sep 2019

நாட்டில் ஏற்பட்டுள்ள இன முரண்பாடுகளையும் மத முரண்பாடுகளையும் சீர் செய்து, அதனை முடிவுக்கு கொண்டுவரும் துறையாக ஆசிரியத்  தொழில்  கருதப்படுவதாக  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். மன்னார் – முருங்கனில் கல்வி அமைச்சினால்  அமைக்கப்படுள்ள ஆசிரிய தொழில் சார் வாண்மை  நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று திங்கட்கிழமை

மேலும்...
73 பட்டதாரி தொழில் முயற்சியாளர்களுக்கு நிதியுதவி: அமைச்சர் றிஷாட் வழங்கினார்

73 பட்டதாரி தொழில் முயற்சியாளர்களுக்கு நிதியுதவி: அமைச்சர் றிஷாட் வழங்கினார் 0

🕔4.Sep 2019

‘தொழில் முனைவோர் விழிப்புணர்வு’ தேசிய வேலைத்திட்டத்தின் ஊடாக 73 பட்டதாரி இளைஞர் தொழில் முயற்சியாளர்களுக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை இடம்பெற்றது. கைத்தொழில் வாணிப அலுவல்கள், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் கூட்டுறவு அபிவிருத்தி, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழான தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை இந்த வேலைத் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இந்த

மேலும்...
அஹங்கம நிகழ்வு; முஸ்லிம் சமூகத்தின் குரலை அடக்கி விடுவதற்கான மற்றொரு முயற்சி: பிரதியமைச்சர் மஹ்ரூப் கண்டனம்

அஹங்கம நிகழ்வு; முஸ்லிம் சமூகத்தின் குரலை அடக்கி விடுவதற்கான மற்றொரு முயற்சி: பிரதியமைச்சர் மஹ்ரூப் கண்டனம் 0

🕔1.Sep 2019

மாத்தறை – அஹங்கம பகுதியில்  அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஆர்ப்பாட்டத்தின் மூலம் இனவாதிகள் தமது   மற்றுமொரு குரூர முகத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும், இதனை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வெகுவாக  கண்டிப்பதாகவும், கட்சியின் தேசிய அமைப்பாளரும் பிரதி  அமைச்சருமான்    அப்துல்லாஹ்  மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.  அவர் வெளியிட்டுள்ள கண்டனஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; முஸ்லீம் சமூகத்தின்

மேலும்...
“காத்தான்குடியில் நடந்து கொள்வதைப் போல், இங்கு வேண்டாம்”: அமைச்சர் றிசாத்துக்கு எதிராக கடும் போக்காளர்கள் ஆர்ப்பாட்டம்

“காத்தான்குடியில் நடந்து கொள்வதைப் போல், இங்கு வேண்டாம்”: அமைச்சர் றிசாத்துக்கு எதிராக கடும் போக்காளர்கள் ஆர்ப்பாட்டம் 0

🕔1.Sep 2019

– அஸீம் கிலாப்தீன் – மாத்தறை – அஹங்கம பகுதியில், திறன் அபிவிருத்தி அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட ஹோட்டல் பாடசாலையைத் திறந்து வைப்பதற்கு அமைச்சர் றிஷாட்பதியுதீன் விஜயம் செய்வதற்கு எதிராக நேற்று சனிக்கிழமை பௌத்த கடும்போக்காளர்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முஸ்லிம் விரோதக் கோஷங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தி நின்ற இவர்கள்; காத்தான்குடி, கல்முனையில் நடந்து கொள்வதைப்

மேலும்...
2290 கோடி ரூபாவில் உருவாக்கப்பட்ட மல்வத்து ஓயா திட்டம்; பிரதமரின் உதவி குறித்து அமைச்சர் றிஷாட் மகிழ்ச்சி தெரிவிப்பு

2290 கோடி ரூபாவில் உருவாக்கப்பட்ட மல்வத்து ஓயா திட்டம்; பிரதமரின் உதவி குறித்து அமைச்சர் றிஷாட் மகிழ்ச்சி தெரிவிப்பு 0

🕔25.Aug 2019

அனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மூன்று மாவட்டங்களில் வாழும் மூவினங்களும் ஒரே நேரத்தில்  ஒரே திட்டத்தினால் பயன்பெறும் மல்வத்து ஓயா நீர்ப் பாசனத்திட்டம் இனங்களுக்கிடையே சமாதான பாலமாக அமைவதோடு, மக்களின் வாழ்விலே வசந்தம் வீச பெரிதும் உதவுமென அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.  மல்வத்துஓயா தந்திரிமலை நீர்த்தேக்கத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்தல் மற்றும்

மேலும்...
இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் பட்டமளிப்பு விழா: அமைச்சர் றிசாட் பங்கேற்பு

இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் பட்டமளிப்பு விழா: அமைச்சர் றிசாட் பங்கேற்பு 0

🕔23.Aug 2019

இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் நடப்பு ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா, கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில்  நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் சபாநாயகர் கரு ஜயசூரிய, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன், பிரதியமைச்சர் கருணாரட்ன பரணவிதான, ராஜாங்க அமைச்சர் புத்திக்க பத்திரண, அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக, தொழிற்பயிற்சி

மேலும்...
தமைமை தாங்கியமைக்காக, அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு பிரதமர் ரணில் பாராட்டு

தமைமை தாங்கியமைக்காக, அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு பிரதமர் ரணில் பாராட்டு 0

🕔22.Aug 2019

“கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்ட கால இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியமர்த்தல், கூட்டுறவு மேம்பாடு, திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சர் றிஷாட் பதியுதீன்இ தொழிற்பயிற்சித் துறையில் வெற்றிகரமாக தலைமை தாங்கியமைக்காகஇ நாங்கள் அவரைப் பாராட்டுகிறோம்’ என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கொழும்பின் புறநகர்ப் பகுதியான ஊறுகொடவத்தையில் கொரிய – இலங்கை தேசிய தொழில் பயிற்சி

மேலும்...
யாழ்முஸ்லிம்களை மீள் குடியேற்றுவதற்கான வீட்டுத் திட்டம் அமைக்க அங்கிகாரம்

யாழ்முஸ்லிம்களை மீள் குடியேற்றுவதற்கான வீட்டுத் திட்டம் அமைக்க அங்கிகாரம் 0

🕔16.Aug 2019

– பாறுக் ஷிஹான் – யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள் குடியேற்றுவதற்கான வீட்டுத்திட்டங்களை நிர்மாணிப்பதற்கு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில்அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை நடந்த கூட்டத்திலேயே இந்த அங்கிகாரம் வழங்கப் பட்டது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் றிஷாட்பதியுதீன் கேட்டுக் கொண்டதையடுத்தே இவ்வனுமதி வழங்கப்பட்டது. இதற்கெனத் தனியார் காணிகள் கொள்வனவு

மேலும்...
வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக,  அரசாங்கம் பாரிய நிதியை ஒதுக்கியுள்ளது: அமைச்சர் றிசாட்

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக, அரசாங்கம் பாரிய நிதியை ஒதுக்கியுள்ளது: அமைச்சர் றிசாட் 0

🕔15.Aug 2019

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக இந்த அரசாங்கம் பாரிய நிதியை ஒதுக்கி உள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன்  தெரிவித்தார்.வவுனியா பொது வைத்தியசாலையில்  இடம்பெற்ற கட்டிட திறப்பு விழா நிகழ்வில் நேற்று புதன்கிழமை அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போது, இதனைக் கூறினார். இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கௌரவ  அதிதியாக ராஜித சேனாரத்தினவும் கலந்துகொண்டனர்.

மேலும்...
அம்பாறை வன்செயல்களால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு; 06 மில்லியன் ரூபாவை றிசாட் பதியுதீனும் ஒதிக்கியுள்ளார்

அம்பாறை வன்செயல்களால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு; 06 மில்லியன் ரூபாவை றிசாட் பதியுதீனும் ஒதிக்கியுள்ளார் 0

🕔13.Aug 2019

அம்­பா­றையில் 2018ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்­செ­யல்­களில் பாதிக்­கப்­பட்ட அம்­பாறை ஜும்ஆ பள்­ளி­வாசல் மற்றும் சொத்­துளுக்கு நஷ்­ட­ஈடு வழங்குவதற்காக வேண்டி முதற்­கட்­ட­மாக 10 மில்­லியன் ரூபா திறை­சேரி மூலம் அம்­பாறை மாவட்ட செய­ல­கத்­திற்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளதாக புனர்­வாழ்வு அமைச்சின் இழப்­பீட்டு பணியகத்தின் உதவிப் பணிப்­பாளர் எஸ்.எம். பதுர்தீன் தெரி­வித்தார். இந்த நஷ்­ட­ஈடு முதற்­ கட்­ட­மாக

மேலும்...
கல்முனை பிரதேச செயலக விவகாரம்: அமைச்சர் றிசாட் பதியுதீனை, ஹரீஸ் எம்.பி உள்ளிட்ட கல்முனை பிரமுகர்கள் சந்தித்து பேச்சு

கல்முனை பிரதேச செயலக விவகாரம்: அமைச்சர் றிசாட் பதியுதீனை, ஹரீஸ் எம்.பி உள்ளிட்ட கல்முனை பிரமுகர்கள் சந்தித்து பேச்சு 0

🕔6.Aug 2019

கல்முனை பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீனை, நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ், கல்முனை ஜூம்ஆ பள்ளிவாசல்,வர்த்தக சங்கம் மற்றும் சிவில் அமைப்புக்களின்  பிரதிநிதிகள்   சந்தித்து பேசினர். நேற்று திங்கட்கிழமை இரவு கொழும்பில் நடந்த இந்த சந்திப்பில், கல்முனை ஜூம்ஆ பள்ளி தலைவர் டொக்டர் அஸீஸ்,

மேலும்...
மன்னார் மாவட்ட காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க அமைச்சர் றிசாட் தீர்மானம்: கொழும்பில் உயர் மட்ட கூட்டத்துக்கும் ஏற்பாடு

மன்னார் மாவட்ட காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க அமைச்சர் றிசாட் தீர்மானம்: கொழும்பில் உயர் மட்ட கூட்டத்துக்கும் ஏற்பாடு 0

🕔1.Aug 2019

மன்னார் மாவட்டத்தில் நீண்டகாலமாக தீர்க்கப்படாதிருக்கும் காணிப்பிரச்சினை, குறிப்பாக வன பரிபாலனத் திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றின் நடவடிக்கையால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்கு தீர்வு காணும் வகையில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரினதும் பங்குபற்றலுடன்  கொழும்பில் உயர் மட்ட கூட்டமொன்றை  ஏற்பாடு செய்வதாக தெரிவித்த அமைச்சர் ரிஷாத் பதியுதீன், இந்த கூட்டத்தில் அமைச்சர் ஜோன் அமரதுங்க

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்