Back to homepage

Tag "ரிஷாட் பதியுதீன்"

கிழக்கில் மூடப்பட்ட சதொச நிலையங்களைத் திறந்து, அவற்றினூடாக நிவாரணப் பொருட்களை வழங்கவும்: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ரிசாட் கோரிக்கை

கிழக்கில் மூடப்பட்ட சதொச நிலையங்களைத் திறந்து, அவற்றினூடாக நிவாரணப் பொருட்களை வழங்கவும்: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ரிசாட் கோரிக்கை

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, ஊரடங்குச் சட்டம் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்படுவதனால், நாளாந்தத் தொழிலாளர்களும் கூலித் தொழிலாளர்களும் உழைப்புக்கு வழியின்றி முடங்கி இருப்பதனால், அவர்களுக்கு உலர் உணவு நிவாரணங்களை வழங்க, அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன், கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில்

மேலும்...
06 மாவட்டங்களில் கூட்டாகவும், அம்பாறையில் தனித்தும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போட்டி

06 மாவட்டங்களில் கூட்டாகவும், அம்பாறையில் தனித்தும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போட்டி

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறையில் தனித்தும், ஏனைய 06 மாவட்டங்களில் கூட்டணியமைத்தும் களமிறங்குகின்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் கட்சியின் மயில் சின்னத்தில் தனித்துக் களமிறங்குகிறது. வன்னி, மட்டக்களப்பு, திருகோணமலை, குருநாகல், அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்திலும், புத்தளம் மாவட்டத்தில் பொதுக் கூட்டமைப்பின் கீழ், தராசு சின்னத்திலும்

மேலும்...
கூனிக்குறுகி நின்று, அரசியல் செய்பவனாக  இருக்க விரும்பவில்லை: மக்கள் காங்கிரஸில் இணைந்த பின்னர் மாஹிர் தெரிவிப்பு

கூனிக்குறுகி நின்று, அரசியல் செய்பவனாக இருக்க விரும்பவில்லை: மக்கள் காங்கிரஸில் இணைந்த பின்னர் மாஹிர் தெரிவிப்பு

கொள்கை ரீதியாக அரசியலை செய்ய வேண்டுமென்ற ஒரே காரணத்துக்காகவும் தூயநோக்கிலுமே, ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் தான் இணைந்துகொண்டதாகவும் பதவியையும் சொகுசுசையும் விரும்பியிருந்தால், ரிஷாட் பதியுதீன் அமைச்சராக இருந்தபோதே அவருடன் இணைந்திருக்க முடியும் எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தரும் அக்கட்சியின், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான ஐ.எல்.எம். மாஹிர்

மேலும்...
சூழ்ச்சிகளால் எமது பணிகளை மறைத்து விட முடியாது: மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் தெரிவிப்பு

சூழ்ச்சிகளால் எமது பணிகளை மறைத்து விட முடியாது: மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் தெரிவிப்பு

“நாம் கடந்த காலங்களில் மேற்கொண்ட அபிவிருத்தித் திட்டங்களையும் நல்வாழ்வுப் பணிகளையும் மறைத்துவிட முடியுமென சிலர் சூழ்ச்சி செய்தாலும் மக்கள் மனங்களிலிருந்து, அவற்றை ஒருபோதும் அழித்துவிட முடியாது” என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அபிவிருத்திச் செயற்பாடுகளின் அங்குரார்ப்பண வைபவம் மற்றும் திறப்புவிழாக்களை தடுப்பதன் மூலம், மக்களிடமிருந்து எம்மை

மேலும்...
‘இரண்டாந்தரப் பிரஜைகள்’ என்று, எவரும் கூறுமளவுக்கு நாம் பலவீனப்பட்டுவிட முடியாது: முன்னாள் அமைச்சர் றிசாட்

‘இரண்டாந்தரப் பிரஜைகள்’ என்று, எவரும் கூறுமளவுக்கு நாம் பலவீனப்பட்டுவிட முடியாது: முன்னாள் அமைச்சர் றிசாட்

‘இரண்டாந்தரப் பிரஜைகள்’ என்று, எவரும் கைகாட்டிக் கூறுமளவுக்கு நாம் பலவீனப்பட்டுவிட முடியாது. அவ்வாறான நிலையை உருவாக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ள வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வன்னிச் சமூகம் கடந்த நான்கு தேர்தல்களிலும் தொடர்ச்சியாக பெற்றுத்தந்த அதிகாரங்களின் மூலம், நேர்மையாகவும் உண்மையாகவும் உச்சளவில் பணியாற்றியுள்ளோம் என்ற மனநிறைவு தமக்கு இருப்பதாக  மன்னார்,

மேலும்...
மஹர சிறைச்சாலை பள்ளிவாசலுக்குள் புத்தர் சிலை: ரிஷாட் பதியுதீன் கண்டனம்

மஹர சிறைச்சாலை பள்ளிவாசலுக்குள் புத்தர் சிலை: ரிஷாட் பதியுதீன் கண்டனம்

மஹர சிறைச்சாலையில் 100 வருடம் பழைமைவாய்ந்த பள்ளிவாசலுக்குள் புத்தர் சிலையை நிறுவி, அதனை ஓய்வு அறையாக மாற்றி, முஸ்லிம் சமூகத்தின் மத உணர்வுகளை காயப்படுத்திய இழிசெயலை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். இந்த தீய செயலுக்குப் பின்னால் உள்ள சக்திகளுக்கு எதிராக, கடுமையான

மேலும்...
சஹ்ரான் தாக்குதல், வில்பத்து விவகாரத்தின் உண்மையை வெளிப்படுத்தாமல் இழுத்தடிப்பது ஏன்: சபையில் ரிஷாட் கேள்வி

சஹ்ரான் தாக்குதல், வில்பத்து விவகாரத்தின் உண்மையை வெளிப்படுத்தாமல் இழுத்தடிப்பது ஏன்: சபையில் ரிஷாட் கேள்வி

சஹ்ரானின் தாக்குதல் மற்றும் வில்பத்து விவகாரம் என்பவற்றை பிரசாரங்களாகப் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த கோட்டாபயவின் அரசாங்கம், இனியும் காலத்தைக் கடத்திக்கொண்டிருக்காது  நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் அவற்றின் உண்மைத்தன்மையை வெளிப்படுத்த வேண்டுமென்று நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அதேவேளை, “சாய்ந்தமருதுக்கு வழங்கப்பட்ட உள்ளூராட்சி சபையை ரத்துச் செய்துள்ளதாக அறிகின்றோம். அதன் உண்மைத்தன்மை தெரியாது.  அந்தப் பிரதேச மக்களுக்கு

மேலும்...
தீர்ப்பு வரும்போது, உண்மை வெளிப்படும்: நீதிமன்ற வளாகத்தில் வைத்து, ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு

தீர்ப்பு வரும்போது, உண்மை வெளிப்படும்: நீதிமன்ற வளாகத்தில் வைத்து, ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு

‘வில்பத்து சரணாலய’ வழக்கின் தீர்ப்பு வெளிவரும்போது, அதன் உண்மை நிலை வெளிப்படுவதோடு, இதனுடன் தன்னை தொடர்புபடுத்தி கூறப்பட்ட அபாண்டங்கள் அனைத்தும் பொய்யானவை என்பதும் வெளிச்சத்துக்கு வரும் என முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ‘வில்பத்து’ வனவள பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணி துப்புரவு செய்யப்பட்டு, மீள்குடியேற்றம் மற்றும் சட்டவிரோத நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தும், முன்னாள்

மேலும்...
அமைச்சர் விமலிடமிருந்து 100 கோடி ரூபா நஷ்டஈடு கோரி ரிஷாட் பதியுதீன் கடிதம்: மன்னிப்பு கோரா விடின் வழக்கு

அமைச்சர் விமலிடமிருந்து 100 கோடி ரூபா நஷ்டஈடு கோரி ரிஷாட் பதியுதீன் கடிதம்: மன்னிப்பு கோரா விடின் வழக்கு

அமைச்சர் விமல் வீரவன்ச தன்மீது சுமத்திய பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், தனது சட்டத்தரணி ஊடாக 100 கோடி ரூபா நஷ்டஈடு கோரி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாகவும், இரண்டு வாரங்களுக்குள் விமல் வீரவன்ச அதனைக் கவனத்திலெடுத்து மன்னிப்புக் கோராவிடின், வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன்

மேலும்...
வன்னி மாவட்டத்தில் எனது பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்ய, முகவர்கள் இறக்கப்பட்டுள்ளனர்: றிசாட்

வன்னி மாவட்டத்தில் எனது பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்ய, முகவர்கள் இறக்கப்பட்டுள்ளனர்: றிசாட்

மாவட்டங்கள் தோறும் அரசியல் வியாபார முகவர்களை களமிறக்கி, சமூக வாக்குகளை சிதைத்து சின்னாபின்னமாக்குவதன் மூலம், தமது குறிக்கோளை அடையும் முயற்சிகள் அரங்கேற்றப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். முசலியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற மக்கள் கலந்துரையாடலின் போது உரையாற்றிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மேலும் கூறுகையில்; “இவ்வாறு

மேலும்...