Back to homepage

Tag "ராஜித சேனாரத்ன"

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக,  அரசாங்கம் பாரிய நிதியை ஒதுக்கியுள்ளது: அமைச்சர் றிசாட்

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக, அரசாங்கம் பாரிய நிதியை ஒதுக்கியுள்ளது: அமைச்சர் றிசாட் 0

🕔15.Aug 2019

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக இந்த அரசாங்கம் பாரிய நிதியை ஒதுக்கி உள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன்  தெரிவித்தார்.வவுனியா பொது வைத்தியசாலையில்  இடம்பெற்ற கட்டிட திறப்பு விழா நிகழ்வில் நேற்று புதன்கிழமை அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போது, இதனைக் கூறினார். இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கௌரவ  அதிதியாக ராஜித சேனாரத்தினவும் கலந்துகொண்டனர்.

மேலும்...
மதுஷுடன் தொடர்பிலிருந்த 07 அரசியல்வாதிகளின் பெயர் வெளியிடப்படும்: அமைச்சர் ராஜித

மதுஷுடன் தொடர்பிலிருந்த 07 அரசியல்வாதிகளின் பெயர் வெளியிடப்படும்: அமைச்சர் ராஜித 0

🕔30.Jun 2019

போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர் எனும் குற்றச்சாட்டில் துபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட மாகந்துர மதூஷுடன் தொடர்பிலிருந்த அரசியல்வாதிகள் 07 பேரின் பெயர்களை வெளியிடவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். மேற்படி அரசியல்வாதிகள் குறித்து மதுஷ் தகவல் வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். உலகக் கிண்ண கிறிக்கட் போட்டிகளின் பின்னர், இந்த விவரங்கள் வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்...
காவிந்தவுக்கு பதிலாக ராஜித: தெரிவுக் குழுவுக்கு நியமனம்

காவிந்தவுக்கு பதிலாக ராஜித: தெரிவுக் குழுவுக்கு நியமனம் 0

🕔24.May 2019

நாட்டில் இடம்பெற்ற தற்கொலைகத் தாக்குதல்கள் தொடர்பான விடயங்களை விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிலிருந்து, நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன விலகியதையடுத்து, அந்த வெற்றிடத்துக்கு, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். தனிப்பட்ட காரணத்துக்காகவே, தான் அந்தத் தெரிவுக்குழுவிலிருந்து விலகுவதாக, காவிந்த எம்.பி தெரிவித்திருந்தார். இந்நிலையில், அமைச்சர் ராஜித்த நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை, தெரிவுக் குழுவின் மேலதிக உறுப்பினராக,

மேலும்...
அரச நிறுவனங்களுக்குள் வெற்றிலை, பாக்குக்கு வருகிறது தடை

அரச நிறுவனங்களுக்குள் வெற்றிலை, பாக்குக்கு வருகிறது தடை 0

🕔13.Mar 2019

வெற்றிலை, பாக்கு மற்றும் புகையிலை உள்ளிட்டவற்றை அரச நிறுவனங்களுக்குள், பயன்படுத்தவும், விற்பனைச் செய்வதற்கும் அரசாங்கம் தடைவிதிக்கத்  தீர்மானித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அமைச்சரவையில் நேற்று செவ்வாய்கிழமை சமர்பித்த அமைச்சரவை பத்திரத்துக்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் காரணமாக, புற்றுநோயை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த

மேலும்...
அமைச்சர் பதவிகளை சிலருக்கு மைத்திரி ஏன் நிராகரித்தார்: காரணங்களும், பின்னணியும்

அமைச்சர் பதவிகளை சிலருக்கு மைத்திரி ஏன் நிராகரித்தார்: காரணங்களும், பின்னணியும் 0

🕔21.Dec 2018

இலங்கையில் புதிய அமைச்சரவையை நிறுவும் பொருட்டு, நேற்று, வியாழக்கிழமை 29 அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட போதிலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை தாங்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்க பக்கமாக கட்சி மாறிய எவருக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவில்லை. தான் தலைமை தாங்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து, ரணில் விக்ரமசிங்கவின் அணிக்கு மாறிய நாடாளுமன்ற

மேலும்...
பொதுத் தேர்தலை எதிர்கொள்ள, ஐ.தே.கட்சி தயார்: ராஜித தெரிவிப்பு

பொதுத் தேர்தலை எதிர்கொள்ள, ஐ.தே.கட்சி தயார்: ராஜித தெரிவிப்பு 0

🕔10.Nov 2018

நாடாளுமன்றத்தை கலைத்தமை சட்டத்திற்கு முரணானது என கூறியுள்ள, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ண, பொதுத் தேர்தலை எதிர்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி தயார் எனவும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர், நேற்று நள்ளிரவு ஐக்கிய தேசியக் கட்சி நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், அவர் இதனைக் கூறினார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டமை குறித்து, உச்ச நீதிமன்றத்தின்

மேலும்...
விமல் வீரவங்சவின் கல்வித் தகைமை; நாடாளுமன்றில் போட்டுடைத்தார் ராஜித சேனாரத்ன

விமல் வீரவங்சவின் கல்வித் தகைமை; நாடாளுமன்றில் போட்டுடைத்தார் ராஜித சேனாரத்ன 0

🕔19.Feb 2018

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச, 10ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்ததாக, அமைச்சர் ராஜித சேனாரத்ன நாடாளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார். அதேவேளை, விமல் வீரவங்ச அமைச்சராக இருந்த காலத்தில், அவருடைய சகோதரியின் மகளின் திருமணத்தை அரச பணத்தில் நடத்தியாகவும், அமைச்சர் ராஜித சேனாரத்ன குற்றம் சாட்டினார். “பிச்சைக்காரர்களான இந்த முன்னாள் அமைச்சர்கள்

மேலும்...
பாடசாலைகளுக்கு அருகில் சிகரட் விற்பனையை தடைசெய்யும் சட்டம் வருகிறது:  சுகாதார அமைச்சர்

பாடசாலைகளுக்கு அருகில் சிகரட் விற்பனையை தடைசெய்யும் சட்டம் வருகிறது: சுகாதார அமைச்சர் 0

🕔19.Apr 2017

பாடசாலைகளுக்கு அருகாமையில் சிகரட் விற்பனை செய்வதைத் தடுக்கும் சட்டமொன்று கொண்டு வரப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பாடசாலைகளிலிருந்து 500 மீற்றர் தூரத்துக்குள் சிகரட் விற்பனையினை, இந்தச் சட்டத்தின் மூலம் தடுக்கவுள்ளதாக அமைச்சர் விபரித்துள்ளார். ஏற்கனவே, உதிரிகளாக சிகரட்டுகளை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தமையினை அடுத்து,

மேலும்...
மென் பானங்களில் அடங்கியுள்ள சீனியின் அளவைத் தெரியப்படுத்தும் திட்டம் ஆரம்பம்

மென் பானங்களில் அடங்கியுள்ள சீனியின் அளவைத் தெரியப்படுத்தும் திட்டம் ஆரம்பம் 0

🕔2.Aug 2016

மென் பானங்களில் அடங்கியுள்ள சீனியின் அளவினை தெரியப்படுத்தும் வகையில், அவை அடைக்கப்பட்டுள்ள போத்தல்களின் மூடிகளுக்கு நிறமூட்டும் நடவடிக்கை இன்று செவ்வாய்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் அறிவுறுத்தலுக்கு அமைய 1980 ஆண்டின் 26 ஆம் இலக்க உணவு சட்டத்தின் பிரகாரம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் சுகாதார

மேலும்...
பொலிஸ் உத்தியோகத்தரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில், சதுர சேனாரத்ன MP க்கு எதிராக வழக்கு

பொலிஸ் உத்தியோகத்தரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில், சதுர சேனாரத்ன MP க்கு எதிராக வழக்கு 0

🕔25.Mar 2016

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்னவுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன கடந்த வருடம் ராகமையில் இடம்பெற்ற மோதல் ஒன்றில் கைது செய்யப்பட்டிருந்த தனது ஆதரவாளர்களை பார்வையிடுவதற்காக ராகம பொலிஸ்

மேலும்...
டின் மீனுக்கு 100 ரூபாய் வரி அதிகரிப்பு

டின் மீனுக்கு 100 ரூபாய் வரி அதிகரிப்பு 0

🕔28.Jan 2016

இறக்குமதி செய்யப்படும் டின் மீன்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வியாழக்கிழமை, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார். அந்தவகையில், ஒரு கிலோகிராம் எடையுடைய டின் மீனுக்கு 100 ரூபாய் வரி விதிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

மேலும்...
மஹிந்த குடும்பத்தவர் நால்வர், 42650 கோடி ரூபாவை கொள்ளையடித்துள்ளனர்; சதுர சேனாரத்ன குற்றச்சாட்டு

மஹிந்த குடும்பத்தவர் நால்வர், 42650 கோடி ரூபாவை கொள்ளையடித்துள்ளனர்; சதுர சேனாரத்ன குற்றச்சாட்டு 0

🕔12.Jan 2016

மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் நான்கு பேர் 42,650 கோடி ரூபாவை மோசடியாகச் சம்பாதித்துள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன பரபரப்புக் குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார்.காலி பலப்பிட்டிய பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, மேற்படி விடயத்தினை அவர் கூறினார்.நாடாளுமன்ற உறுப்பினர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;“கடந்த ஆட்சியில் முக்கிய பிரமுகர்கள்

மேலும்...
விசேட வைத்தியர்களுக்கான ‘சனலிங்’ கட்டணத்தில் கட்டுப்பாடு

விசேட வைத்தியர்களுக்கான ‘சனலிங்’ கட்டணத்தில் கட்டுப்பாடு 0

🕔7.Jan 2016

தனியார் வைத்தியசாலைகளில் விசேட வைத்தியர்களைச் சந்திப்பதற்கான (சனலிங்) கட்டணம், 250 ரூபாவுக்கும், 2000 ரூபாவுக்கும் இடைப்பட்ட அளவிலேயே அறவிடப்பட வேண்டும என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இதேவேளை, விசேட வைத்தியர்கள் நோயாளர்களை குறைந்த பட்சம் 10 நிமிடங்களேனும் பரிசோதிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். தற்போது தனியார் வைத்தியசாலையில் நோயாளர்களை விசேட வைத்தியர்கள் சில நிமிடங்கள் மாத்திரமே பரிசோதித்து

மேலும்...
உயர்தரம் கற்பதற்கு சுகாதாரப் பாடத்தில் சித்தியடைவதைக் கட்டாயமாக்க நடவடிக்கை; அமைச்சர் ராஜித

உயர்தரம் கற்பதற்கு சுகாதாரப் பாடத்தில் சித்தியடைவதைக் கட்டாயமாக்க நடவடிக்கை; அமைச்சர் ராஜித 0

🕔7.Dec 2015

உயர்தரம் கற்பதற்கு சுகாதார பாடத்தில் சித்தியடைவதைக் கட்டாயமாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.வரவு – செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் இன்று திங்கட்கிழமை கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.இதேவேளை, எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளான 2265 பேர்  நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது கூறினார்.மேலும், எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளான 20 மாணவர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும்

மேலும்...
மஹிந்தவுக்கான பாதுகாப்பு அகற்றப்படவில்லை; செய்தி பொய் என்கிறார் ரொஹான் வெலிவிட்ட

மஹிந்தவுக்கான பாதுகாப்பு அகற்றப்படவில்லை; செய்தி பொய் என்கிறார் ரொஹான் வெலிவிட்ட 0

🕔6.Dec 2015

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த 500 ராணுவ வீரர்ககள், மற்றும் பொலிார் அகற்றப்பட்டதாக இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியான தகவலில் உண்மையில்லை என்று, மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையொன்றிலேயே இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக மேலதிக ராணுவத்தினரும், அதிகாரிகளும் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும் ரொஹான்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்