Back to homepage

Tag "ரஞ்சன் ராமநாயக்க"

பார்வையாளர்களைச் சந்திக்க ரஞ்சனுக்கு தடை: செல்ஃபியால் வந்த வினை

பார்வையாளர்களைச் சந்திக்க ரஞ்சனுக்கு தடை: செல்ஃபியால் வந்த வினை 0

🕔11.Mar 2021

சிறைத்தண்டனை அனுபவத்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, பார்வையாளர்களைச் சந்திப்பதற்கு இரு வாரங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடக பேச்சாளர் இதனை தெரிவித்தார். அண்மையில் ரஞ்சன் ராமநாயக்கவை சந்திப்பதற்காக சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண, அவருடன் படம் (செல்ஃபி) எடுத்திருந்தார். இந்நிலையில், அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் ஒழுக்காற்று நிலையத்திற்கு  இன்றைய தினம் ரஞ்சன் ராமநாயக்க

மேலும்...
ரஞ்சனுடன் படம் எடுப்பதற்கு அனுமதித்த சிறைக்காவலர் பணியிலிருந்து இடைநிறுத்தம்

ரஞ்சனுடன் படம் எடுப்பதற்கு அனுமதித்த சிறைக்காவலர் பணியிலிருந்து இடைநிறுத்தம் 0

🕔9.Mar 2021

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்கவுடன் படம் எடுத்துக் கொள்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணவை அனுமதித்த சிறைக்காவலர் ஒருவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் பணிபுரிந்த சிறைக்காவலர் ஒருவரே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளார். நீதித்துறையை அவமதித்த குற்றச்சாட்டில் 04 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க, அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தண்டனை

மேலும்...
ரஞ்சனின் நாடாளுமன்ற உறுப்பினருக்கான சம்பளம் நிறுத்தம்

ரஞ்சனின் நாடாளுமன்ற உறுப்பினருக்கான சம்பளம் நிறுத்தம் 0

🕔8.Mar 2021

ரஞ்சன் ராமநாயக்க – நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதற்கான தகுதி குறித்த கேள்விகள் எழுந்துள்ளமையினை அடுத்து, அவரின் சம்பளம் நாடாளுமன்றத்தினால் நிறுத்தப்பட்டுள்ளது. நீதித்துறை அவமதிப்பு வழங்கில் தண்டனை விதிக்கப்பட் ரஞ்சன் ராமநாயக்க, தற்போது அந்தத் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்த நிலையில் அவர் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிப்பதற்கான தகுதி குறித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த

மேலும்...
ரஞ்சன் ராமநாயக்க தொடர்பில், எதிரணி உறுப்பினர்கள் நாடாளுமன்றில் ஆர்ப்பாட்டம்

ரஞ்சன் ராமநாயக்க தொடர்பில், எதிரணி உறுப்பினர்கள் நாடாளுமன்றில் ஆர்ப்பாட்டம் 0

🕔23.Feb 2021

சிறை வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தொடர்பில் இன்று செவ்வாய்கிழமை எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். ரஞ்சன் ராமநாயக்கவை சபை அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு சபாநாயகர் அறிவுறத்தல் வழங்க வேண்டுமெனக் கோரி, எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு, இன்று நாடாளுமன்ற சபை அமர்வின் இடையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேவேளை எதிர்க்கட்சித்

மேலும்...
தண்ணீர் போத்தல்களைக் கொண்டு தற்காலிக உடற்பயிற்சி சாதனத்தை உருவாக்கியுள்ள ரஞ்சன்: கைதி N 12516

தண்ணீர் போத்தல்களைக் கொண்டு தற்காலிக உடற்பயிற்சி சாதனத்தை உருவாக்கியுள்ள ரஞ்சன்: கைதி N 12516 0

🕔22.Feb 2021

நீதித்துறை அவமதிப்பு குற்றத்துக்காக 04 வருட கடுங்காவல் தண்டனை அனுபவித்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு, கைதி எண் வழங்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கிணங்க, அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் உள்ள அவர், இனி கைதி – என் (N) 12516 என அழைக்கப்படுவார். எவ்வாறாயினும் சிறைசிலுள்ள சக கைதிகளால் ரஞ்சன் ராமநாயக்க மிகவும்

மேலும்...
ஹம்பாந்தோட்ட வைத்தியசாலையில் ரஞ்சன்: சிறைக் காவலர்களால் அழைத்து வரப்பட்டார்

ஹம்பாந்தோட்ட வைத்தியசாலையில் ரஞ்சன்: சிறைக் காவலர்களால் அழைத்து வரப்பட்டார் 0

🕔20.Feb 2021

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நேற்ற வெள்ளிக்கிழமை மருத்துவ பரிசோதனைக்காக ஹம்பாந்தோட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிறை அதிகாரிகளால் புடைசூழ., கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் சிறைச்சாலைகள் திணைக்கள பேருந்தில் அவர் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டார். நீதித்துறையை அவமதித்த குற்றத்துக்காக 04 வருட சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்க, அகுனகோலபெலாஸ்ஸ சிறைச்சாலையில்

மேலும்...
ரஞ்சனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில், மார்ச் 16 வரை நடவடிக்கை எதுவும் வேண்டாம்: நீதிமன்றம் உத்தரவு

ரஞ்சனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில், மார்ச் 16 வரை நடவடிக்கை எதுவும் வேண்டாம்: நீதிமன்றம் உத்தரவு 0

🕔11.Feb 2021

நீதித்துறையை அவமதித்த குற்றச்சாட்டுக்காக 04 வருடகாலம் கடூழிய சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில் மார்ச் மாதம் 16 ஆம் திகதி வரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாது தற்பொழுது உள்ள நிலைமையை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு மேல் முறையீட்டு நீதிமன்றம் இன்றைய தினம் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கமைவாக

மேலும்...
ரஞ்சனுக்கு ஆதரவாக ராஜாங்க அமைச்சர் விமலவீர குரல்: அவர் கூறியவை உண்மை எனவும் தெரிவிப்பு

ரஞ்சனுக்கு ஆதரவாக ராஜாங்க அமைச்சர் விமலவீர குரல்: அவர் கூறியவை உண்மை எனவும் தெரிவிப்பு 0

🕔6.Feb 2021

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நல்ல மனிதர் என்றும், அவர் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்ததில்லை எனவும் ராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ரஞ்சன் ராமநாயக்க கூறிய விடயங்களில் சில – அரைவாசி உண்மை எனவும், சில விடயங்கள் முற்றுமுழுதான உண்மை எனவும் ராஜாங்க அமைச்சர் மேலும் கூறியுள்ளார். பதியத்தலாவையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து

மேலும்...
ரஞ்சனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்துச் செய்வது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

ரஞ்சனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்துச் செய்வது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு 0

🕔5.Feb 2021

ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்வது தொடர்பில் எதிர்வரும் 12ஆம் திகதி வரை எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டாமென மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. தனது நாடாளுமன்ற பதவியை ரத்து செய்வதை நிறுத்துமாறு கோரி ரஞ்சன் ராமநாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு, இன்று வெள்ளிக்கிழமை மேன்முறையீட்டு

மேலும்...
தனிமைப்படுத்தலை முடித்த ரஞ்சன், சிறைச்சாலைக்கு மாற்றம்

தனிமைப்படுத்தலை முடித்த ரஞ்சன், சிறைச்சாலைக்கு மாற்றம் 0

🕔26.Jan 2021

கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அங்குனுகொலபெலச சிறைக்கு மாற்றப்பட்டதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நீர்கொழும்பிலுள்ள பல்லன்சேன தனிமைப்படுத்தல் நிலையத்தில் அவரது தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்ததால் இவர் அங்கிருந்து மாற்றப்பட்டுள்ளார். நீதித்துறை வழக்கில் நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை ரஞ்சன் ராமநாயக்கவுக்கு விதிக்கப்பட்டுள்ளது. தொடர்பான செய்தி: ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 04 வருட கடூழிய

மேலும்...
நீதிபதி கிஹான் பிலபிட்டியவை, மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை

நீதிபதி கிஹான் பிலபிட்டியவை, மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை 0

🕔21.Jan 2021

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டியவை மீண்டும் பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளுக்கு அமையவே, மீண்டும் சேவையில் அமர்த்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அவரை மீண்டும் பணியில் அமர்த்துவது தொடர்பாக நீதி சேவை ஆணைக்குழு விரையில் கடிதம் மூலம் அறிவிக்கவுள்ளது. தற்போது கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன்

மேலும்...
ரஞ்சனுக்கு நியாயம் கிடைக்கும் வரை, கறுப்பு சால்வை அணியும் போராட்டம்; நாடாளுமன்றில் ஹரீன் ஆரம்பித்தார்

ரஞ்சனுக்கு நியாயம் கிடைக்கும் வரை, கறுப்பு சால்வை அணியும் போராட்டம்; நாடாளுமன்றில் ஹரீன் ஆரம்பித்தார் 0

🕔20.Jan 2021

சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயகவுக்கு ஆதரவாக, இன்று ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெனாண்டோ கறுப்புச் சால்வை அணியும் போராட்டமொன்றை நாடாளுமன்றில் ஆரம்பித்தார். நாடாளுமன்ற அமர்வில் இன்று புதன்கிழமை ஹரீன் உரையாற்றுகையில்; ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நியாயம் வழங்கப்பட்டு, அவர் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்படும் வரை, கறுப்புச்

மேலும்...
ரஞ்சனின் நாடாளுமன்ற பதவி தொடர்பில் பதிலளிக்க 03 வாரங்கள்; அவகாசம் கோரினார் சபாநாயகர்

ரஞ்சனின் நாடாளுமன்ற பதவி தொடர்பில் பதிலளிக்க 03 வாரங்கள்; அவகாசம் கோரினார் சபாநாயகர் 0

🕔19.Jan 2021

சிறை தண்டனை விதிக்கப்பட்ட ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில் பதில் வழங்குவதற்கு 03 வார கால அவகாசத்தை, சபநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கோரியுள்ளார். இன்று (19) கூடிய நாடாளுமன்ற அமர்வின் போது, ரஞ்சன் ராமநாயக்கவின் உறுப்புரிமை விவகாரம் தொடர்பில் சபையில் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இதற்கு பதிலளித்து உரையாற்றும் போதே,

மேலும்...
ரஞ்சனின் பதவி பறிபோனது: நாடாளுமன்ற செயலாளருக்கு சட்ட மா அதிபர் அறிவிப்பு

ரஞ்சனின் பதவி பறிபோனது: நாடாளுமன்ற செயலாளருக்கு சட்ட மா அதிபர் அறிவிப்பு 0

🕔18.Jan 2021

நீதிமன்ற அவமதிப்புக்கான தண்டனை காரணமாக ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற ஆசனம் இழக்கப்பட்டதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு சட்ட மா அதிபர் இன்று அறிவித்துள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 04 வருட கடூழிய சிறைத் தண்டனையை உயர்நீதிமன்றம் கடந்த 12ம் திகதி வழங்கியிருந்தது. இந்த சிறைத் தண்டணை, சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம், இரண்டு

மேலும்...
ரஞ்சனின் குடியுரிமை 07 வருடங்கள் ரத்தாகும் நிலை: 11 வருடங்களின் பின்னரே தேர்தலில் போட்டியிடலாம்

ரஞ்சனின் குடியுரிமை 07 வருடங்கள் ரத்தாகும் நிலை: 11 வருடங்களின் பின்னரே தேர்தலில் போட்டியிடலாம் 0

🕔15.Jan 2021

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிர் வரும் 06 மாதங்களுக்கு நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க முடியாது என பேராசிரியர் சட்டத்தரணி பிரத்தீபா மஹாநாமஹேவா தெரிவித்தார். ஹிரு தொலைக்காட்சியில் இன்றைய தினம் இடம்பெற்ற நாளிதழ் தொகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டுள்ளதோடு, நான்கு வருட கடூழிய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்