Back to homepage

Tag "மைத்திரிபால சிறிசேன"

மைத்திரியின் மகள் வீட்டில் திருட்டு: 30 லட்சம் ரூபாய் இழப்பு என முறைப்பாடு

மைத்திரியின் மகள் வீட்டில் திருட்டு: 30 லட்சம் ரூபாய் இழப்பு என முறைப்பாடு 0

🕔23.Jan 2024

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளுக்குச் சொந்தமான பத்தரமுல்ல விக்கிரமசிங்கபுரத்திலுள்ள வீட்டில் சுமார் 03 மில்லியன் ரூபா பெறுமதியான பணம் மற்றும் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். 150,000 ரூபாய் பணம், தங்க முலாம் பூசப்பட்ட ஒட்டகச் சிலை, ஸ்மார்ட் கடிகாரம் மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட 08 சிங்கப்பூர் நாணயங்கள் உள்ளிட்டவை திருடப்பட்டுள்ளன.

மேலும்...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் சொத்துக்கள் தொடர்பில் சத்தியக் கடதாசி சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் சொத்துக்கள் தொடர்பில் சத்தியக் கடதாசி சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔2.Nov 2023

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தன ஆகியோர் – தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை சத்தியக்கடதாசிகள் ஊடாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதல் தொடர்பில்

மேலும்...
மொட்டுடன் கை கோர்க்கும் திட்டமில்லை: மைத்திரி

மொட்டுடன் கை கோர்க்கும் திட்டமில்லை: மைத்திரி 0

🕔7.Oct 2023

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கைகோர்க்கும் திட்டம் எதுவும் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சிறிசேன; இருந்தபோதிலும் எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு – தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைத்து, மாவட்ட மட்டத்தில் தனது பணிகளை விரிவுபடுத்துவதே

மேலும்...
இரண்டாவது தடவையாகவும் மைத்திரியின் வாகனம் மீது விழுந்த சாவடிக் கதவு: விசாரணைகள் ஆரம்பம்

இரண்டாவது தடவையாகவும் மைத்திரியின் வாகனம் மீது விழுந்த சாவடிக் கதவு: விசாரணைகள் ஆரம்பம் 0

🕔5.Oct 2023

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த வாகனத்தின் மீது நேற்று (04) காலை மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் குருநாகல் வாயில் சாவடி கதவு விழுந்த சம்பவம் தொடர்பில், அதி பிரமுகர் பாதுகாப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதியின் கார் மீது வாயில் சாவடிக் கதவு விழுந்து விபத்துக்குள்ளானமைஇது இரண்டாவது சந்தர்ப்பம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு

மேலும்...
மைத்திரிக்கு எதிரான இடைக்காலத் தடையை இல்லாமல் செய்ய நீதிமன்றம் தீர்மானம்

மைத்திரிக்கு எதிரான இடைக்காலத் தடையை இல்லாமல் செய்ய நீதிமன்றம் தீர்மானம் 0

🕔26.Sep 2023

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை இல்லாமல் செய்ய – கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (26) தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவுக்கு அனுப்பப்பட்ட விளக்கக் கடிதத்தை செயற்படுத்துவதைத் தடுக்கும் வகையில் நீதிமன்றம்

மேலும்...
மைத்திரியின் தீர்மானத்துக்கான இடைக்காலத் தடை நீடிப்பு

மைத்திரியின் தீர்மானத்துக்கான இடைக்காலத் தடை நீடிப்பு 0

🕔22.Sep 2023

சரத் ஏக்கநாயக்க – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக செயற்படுவதைத் தடுக்கும் இடைக்காலத் தடையை மேலும் நீடிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது. சுதந்திரக் கட்சியின் செயலாளர் பதவியிலிருந்து தயாசிறி ஜயசேகர வெளியேற்றப்பட்டதன் பின்னர், அந்தப் பதவிக்கு சரத் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டார். சுதந்திரக் கட்சியில் தனது உறுப்புரிமையை, அந்தக் கட்சியின் தலைவரும்

மேலும்...
சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தயாசிறி ஜயசேகர நீக்கம்: கட்சி உறுப்புரிமையிலிருந்தும் இடைநிறுத்தம்

சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தயாசிறி ஜயசேகர நீக்கம்: கட்சி உறுப்புரிமையிலிருந்தும் இடைநிறுத்தம் 0

🕔6.Sep 2023

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நீக்கப்பட்டுள்ளார். நாடாளுமுன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன அனுப்பியுள்ள கடிதத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், எனவே

மேலும்...
ஜனாதிபதியாக மீண்டும் ஒரு தடவை பதவி வகிக்கும் நம்பிக்கை உள்ளதாக, மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பு

ஜனாதிபதியாக மீண்டும் ஒரு தடவை பதவி வகிக்கும் நம்பிக்கை உள்ளதாக, மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பு 0

🕔29.Aug 2023

இலங்கை ஜனாதிபதியாக மீண்டுமொரு தடவை பதவி வகிக்கும் நம்பிக்கையுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக்கு பின்னர், வெளிநாடுகளுடன் நல்லுறவைப் பேணி, நாட்டுக்கு நன்மை பயக்கும் பல உடன்படிக்கைகளை மேற்கொண்டு, ‘முழு உலகையும் வெற்றிகொள்ளும்’ ஒரே நிர்வாகமாவும் தமது நல்லாட்சி அரசாங்கமே இருந்ததாக, தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் அவர் கூறினார்.

மேலும்...
10 கோடியை இன்றும் செலுத்தாத முன்னாள் ஜனாதிபதி மைத்திரி: நீதிமன்றம் வழங்கிய அவகாசம் நிறைவுக்கு வருகிறது

10 கோடியை இன்றும் செலுத்தாத முன்னாள் ஜனாதிபதி மைத்திரி: நீதிமன்றம் வழங்கிய அவகாசம் நிறைவுக்கு வருகிறது 0

🕔9.Jul 2023

ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் எதிர்வரும்12ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. போதிய புலனாய்வு தகவல் கிடைத்திருந்தும் தாக்குதலை தடுக்க தவறியதன் மூலம் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சரின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ, முன்னாள் பொலிஸ் மா

மேலும்...
அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட தமது எம்.பிகள் தொடர்பில் சுதந்திரக் கட்சி ஆராய்வு

அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட தமது எம்.பிகள் தொடர்பில் சுதந்திரக் கட்சி ஆராய்வு 0

🕔6.Jun 2023

அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு நேற்று (5) மாலை கூடிய போது, இவ்விடயம் ஆராயப்பட்டது. “அரசாங்கத்தில் இணைந்த 09 நாடாளுமுன்ற உறுப்பினர்கள் பற்றி நாங்கள் விவாதித்தோம். இந்த எம்.பி.க்கள் தொடர்பாகவும், நாங்கள்

மேலும்...
என்னை சிறையிலடைக்க அல்லது தூக்கிலிட மெல்கம் ரஞ்சித் விரும்புகிறார்: முன்னாள் ஜனாதிபதி மைத்திரி குற்றச்சாட்டு

என்னை சிறையிலடைக்க அல்லது தூக்கிலிட மெல்கம் ரஞ்சித் விரும்புகிறார்: முன்னாள் ஜனாதிபதி மைத்திரி குற்றச்சாட்டு 0

🕔26.Apr 2023

ஈஸ்டர் தினத் தாக்குதல் தொடர்பில் தன்னை குற்றவாளியாக்கி சிறையிலடைக்க அல்லது தூக்கிலிடுவதற்கு பேராயர் மெல்கம் ரஞ்சித் விரும்புவதாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றஞ்சாட்டியுள்ளார். ஏற்கனவே பல கைதுகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், தான் குற்றவாளியாக இலக்கு வைக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் கூறினார். சம்பந்தப்பட்ட

மேலும்...
கோட்டா, மைத்திரி ஆகியோரை, கொலை செய்ய திட்டமிட்டார் எனும் குற்றச்சாட்டில் கைதான பிரதி பொலிஸ் மா அதிபர் மீண்டும் கடமையில்

கோட்டா, மைத்திரி ஆகியோரை, கொலை செய்ய திட்டமிட்டார் எனும் குற்றச்சாட்டில் கைதான பிரதி பொலிஸ் மா அதிபர் மீண்டும் கடமையில் 0

🕔30.Mar 2023

முன்னாள் ஜனாதிபதிகளான மைத்ரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சதி செய்தார் எனும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா மீண்டும் சேவையில் அமர்த்தப்பட்டுள்ளார். அதன்படி அவர் புத்தளம் பிரதேசத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதிகள் இருவரையும் படுகொலை

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான நஷ்டஈட்டை வழங்க நண்பர்களிடம் பணம் வசூலித்து வருகிறேன்: மைத்திரிபால சிறிசேன

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான நஷ்டஈட்டை வழங்க நண்பர்களிடம் பணம் வசூலித்து வருகிறேன்: மைத்திரிபால சிறிசேன 0

🕔26.Mar 2023

ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கின் தீர்ப்பு தொடர்பான நட்டஈட்டை வழங்குவதற்காக, தன்னால் முடிந்தவரை தனது நண்பர்களிடம் பணம் வசூலித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பத்தேகமவில் இன்று (மார்ச் 26) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி, உரிய நட்டஈட்டை வழங்க இன்னும் மூன்று மாதங்களே உள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல் விவகாரம்: முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் மனு நிராகரிப்பு

ஈஸ்டர் தின தாக்குதல் விவகாரம்: முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் மனு நிராகரிப்பு 0

🕔1.Mar 2023

ஈஸ்டர் தின தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்குமாறு தமக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் நிராகரித்து, அவற்றிலிருந்து தன்னை விடுவிக்குமாறு உத்தரவிடக் கோரி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ மொராயிஸ் மற்றும் பிராங்க் குணவர்தன

மேலும்...
ஜனாதிபதி தேர்தலில் மைத்திரி போட்டியிடுவதற்கு சுதந்திரக் கட்சி அங்கிகாரம்

ஜனாதிபதி தேர்தலில் மைத்திரி போட்டியிடுவதற்கு சுதந்திரக் கட்சி அங்கிகாரம் 0

🕔11.Feb 2023

முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன – மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற யோசனை சுதந்திரக் கட்சியால் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் இன்று (11) காலை, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது. கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்தக் செயற்குழு கூட்டம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்