Back to homepage

Tag "முஸ்லிம்கள்"

ஜனாதிபதித் தேர்தலும் சாத்தியங்களின் கலையும்

ஜனாதிபதித் தேர்தலும் சாத்தியங்களின் கலையும்

– முகம்மது தம்பி மரைக்கார் – உணர்ச்சி அரசியல் ஒன்றுக்கும் உதவாது. அவ்வாறான அரசியல் நிலைப்பாடானது, ஆண்டாண்டு காலமாக, மக்களைப் படுகுழியில் தள்ளியதைத் தவிர, வேறெதையும் செய்யவில்லை.    மஹிந்த ராஜபக்‌ஷவின் காலத்தில், முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது என்பதற்காக, கடந்த தேர்தலில், கண்களை மூடிக்கொண்டு, உணர்ச்சி வேகத்தில் மைத்திரி – ரணில் கூட்டணிக்கு வாக்களித்த முஸ்லிம்கள்,

மேலும்...
யாழ்முஸ்லிம்களை மீள் குடியேற்றுவதற்கான வீட்டுத் திட்டம் அமைக்க அங்கிகாரம்

யாழ்முஸ்லிம்களை மீள் குடியேற்றுவதற்கான வீட்டுத் திட்டம் அமைக்க அங்கிகாரம்

– பாறுக் ஷிஹான் – யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள் குடியேற்றுவதற்கான வீட்டுத்திட்டங்களை நிர்மாணிப்பதற்கு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில்அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை நடந்த கூட்டத்திலேயே இந்த அங்கிகாரம் வழங்கப் பட்டது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் றிஷாட்பதியுதீன் கேட்டுக் கொண்டதையடுத்தே இவ்வனுமதி வழங்கப்பட்டது. இதற்கெனத் தனியார் காணிகள் கொள்வனவு

மேலும்...
முஸ்லிம்களை அடக்கியாளும், த.தே.கூட்டமைப்பின் அரசியல்: சுமந்திரனின் களுவாஞ்சிகுடி உரை குறித்த அலசல்

முஸ்லிம்களை அடக்கியாளும், த.தே.கூட்டமைப்பின் அரசியல்: சுமந்திரனின் களுவாஞ்சிகுடி உரை குறித்த அலசல்

– வை எல் எஸ் ஹமீட் – கல்முனைத் தமிழ் பிரதேச செயலகம் சம்பந்தமாகவும் தோப்பூர் பிரதேச செயலககம் சம்பந்தமாகவும், நேற்று திங்கட்கிழமை களுவாஞ்சிக்குடியில் நடைபெற்ற கூட்டமொன்றில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுமந்திரன் சில விடயங்களைத் தெரிவித்துள்ளார். அவை முஸ்லிம் சமூகத்துக்கு பல செய்திகளைச் சொல்கின்றன. அவர் கூறிய சில முக்கிய

மேலும்...
சேதாரமில்லாத விட்டுக்கொடுப்பு; ஹக்கீமின் சங்கேத மொழி குறித்து அச்சம்: கல்முனை முஸ்லிம்களே உசாரடையுங்கள்

சேதாரமில்லாத விட்டுக்கொடுப்பு; ஹக்கீமின் சங்கேத மொழி குறித்து அச்சம்: கல்முனை முஸ்லிம்களே உசாரடையுங்கள்

– வை எல் எஸ் ஹமீட் – “கல்முனை பிரச்சினைக்கு ‘இருதரப்பிற்கும் சேதாரமில்லாத விட்டுக்கொடுப்புடன்’ உடனடியாகத் தீர்வு காணவேண்டும்” என அமைச்சர் ஹக்கீம் தெரிவித்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் காணக்கிடைத்தது. ‘இரு தரப்பிற்கும் சேதாரமில்லாத விட்டுக்கொடுப்பு’ என்பது அவர் வழமையாக பாவிக்கின்ற சங்கேத மொழியானபோதும் கல்முனையில் ஒரு பகுதியை இழந்துவிடுவதற்கான முன் சமிக்சையா அது? எனும் பலமான

மேலும்...
கல்முனையில் முஸ்லிம்களின் வீட்டுக் கூரைகளுக்கு மேலால், தமிழர்கள் எல்லை கேட்பது யுத்தம் புரிவதற்கா?

கல்முனையில் முஸ்லிம்களின் வீட்டுக் கூரைகளுக்கு மேலால், தமிழர்கள் எல்லை கேட்பது யுத்தம் புரிவதற்கா?

– பாறுக் ஷிஹான் – கல்முனையில் தமிழர்களுக்குத் தேவையானது பிரதேச சபைதான். ஆனால் அவர்கள் அதனைக் கேட்காமல் பிரதேச செயலகத்தை வழங்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ஷ ஒரு காலத்தில் ஜனாதிபதியாக வருவார் என்று  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர் எம்.எச்.எம். அஷ்ரஃப்

மேலும்...
300 கிராமங்களை, முஸ்லிம்கள் தின்ற கதை

300 கிராமங்களை, முஸ்லிம்கள் தின்ற கதை

– ஹாரிஸ் அலி உதுமா – 300 கிராமங்களை முஸ்லிம்கள் தின்று விட்டார்கள் என்று குற்றம் சாட்டும் முன்னாள் நீதிபதி விக்னேஸ்வரனுக்கு லொஜிக்காக விடையளித்து, 30ற்கு மேற்பட்ட முஸ்லிம் கிராமங்களை புலிகளின் உதவியுடன் தமிழ் இன முதலாளிகள் தின்று கொழுத்தார்கள் என்று முஸ்லிம் பெயர் தாங்கி தலைவர்களால் நிறுவ முடியவில்லை. ஏனெனில் பறிபோன கிராமங்கள் பற்றிய

மேலும்...
நீங்கள் விரும்பும் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என, ஆர்ப்பாட்டம் செய்யாதீர்கள்: நாடாளுமன்றில் றிசாட் ஆவேசம்

நீங்கள் விரும்பும் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என, ஆர்ப்பாட்டம் செய்யாதீர்கள்: நாடாளுமன்றில் றிசாட் ஆவேசம்

“வில்பத்து பிரதேசத்தில் 08 ஆயிரம் ஏக்கர் காணி எனக்கு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க கூறுகின்றார். எனக்கு அவ்வாறு காணிகள் இருப்பதாக அவர் நிரூபித்தால், நான் அரசியலை விட்டு ஒதுங்குவதற்கு தயார். அவ்வாறு நிரூபிக்காத பட்சத்தில் அவர் அரசியலிருந்து ஒதுங்க தயாரா?” என முன்னாள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான

மேலும்...
மனச்சாட்சியின் விளிம்பில் விழும் நீதியின் நிழல்கள்

மனச்சாட்சியின் விளிம்பில் விழும் நீதியின் நிழல்கள்

– சுஐப் எம் காசிம் – மனச்சாட்சிகளின் கண்களைத் திறந்த நாடாளுமன்றத் தெரிவுக்குழு விசாரணைகள், முடிந்த பின்னும் சிலரின் மனநிலைகள், பழைய பிடிவாதத்திலிருந்து தளர மறுக்கின்றன. இல்லாத குற்றங்களுக்காக எவரையும் தண்டிக்க முடியாது. நாட்டின் எதிர்காலம் சிங்களவர்களுக்கு மட்டுமே என்ற நிலைப் பாட்டில் உள்ளோரே, அப்பாவிகளைக் காப்பாற்றும் இந்த தர்மத்தைத் தகர்த்தெறியப் புறப்பட்டுள்ளனர், உளவுத்துறை, பாதுகாப்புத்

மேலும்...
ரத்ன தேரரின் ‘முயல்’

ரத்ன தேரரின் ‘முயல்’

– முகம்மது தம்பி மரைக்கார் – முஸ்லிம்கள் மீது, இனவாதிகள் சுமத்திய பாரிய குற்றச் சாட்டுகள் ஒவ்வொன்றாகப் பொய்த்து வருகின்றன.    குறிப்பாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், டொக்டர் ஷாபி போன்றோர் மீது சுமத்தப்பட்ட பாரதூரமான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களே இல்லை என்று, உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளமையானது, ஆறுதலான செய்திகளாகும்.   முன்னாள் அமைச்சர் ரிஷாட்

மேலும்...
கல்முனை: உண்ணா விரதமும், சத்தியாக்கிரமும் முடிவுக்கு வந்தன

கல்முனை: உண்ணா விரதமும், சத்தியாக்கிரமும் முடிவுக்கு வந்தன

கல்முனை உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துவதை முன்னிறுத்தி நடத்தப்பட்டு வந்த உண்ணா விரதம் மற்றும் சத்தியாகிரக நடவடிக்கைகள் இரண்டும் முடிவுக்கு வந்துள்ளன. உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி, கல்முனையில் சாகும் வரையிலான உண்ணா விரதத்தினை தமிழர் தரப்பு நடத்தி வந்தது. இந்த உண்ணா விரத நடவடிக்கையில் கல்முனை விகாராதிபதியும் கலந்து கொண்டார். இதேவேளை இன

மேலும்...