Back to homepage

Tag "மப்றூக்"

தவிர்க்க முடியாத பிளவு

தவிர்க்க முடியாத பிளவு

எதிர்பார்க்கப்பட்ட அந்தப் போர் தொடங்கி விட்டது. முஸ்லிம் காங்கிரசுக்குள் கொஞ்சக் காலமாக இருந்து வந்த புகைச்சல், இப்போது காட்டுத் தீயாக எரியத் துவங்கி விட்டது. மு.காங்கிரசின் ‘தலை’களிடையே போர் ஒன்று நடைபெறுவதற்கான சாத்தியங்கள் குறித்தும், அவை தொடர்பான தகவல்கள் பற்றியும் ‘போருக்கு முன்னரான குறிப்புகள்’ என்கிற தலைப்பில் கடந்த வாரம் எழுதியிருந்தோம். அவற்றில் ஏராளமானவை பலிக்கத்

மேலும்...
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

– எஸ். அஷ்ரப்கான் – மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் மக்களுக்கான உடனடி பொதுத் தேவைகள் குறித்து ஆராய்ந்து ஊடகங்களில் அறிக்கையிடும் பொருட்டு, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் உறுப்பினர்கள், ஒவ்வொரு பிரதேசங்களுக்கும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கூட்டாக கள விஜயம் மேற்கொள்வதென, பேரவையின் மாதாந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் மாதாந்தக்

மேலும்...
ஆச்சரியத்தின் நுழைவாயில்

ஆச்சரியத்தின் நுழைவாயில்

மனிதனின் மிகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்ற கேள்விக்கு, புத்தகம் என்று பதிலளித்தார் இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரும் விஞ்ஞானி அல்பட் ஐன்ஸ்டீன். கற்பதற்கும், கற்றுக் கொடுப்பதற்கும் ஆதாரங்களாக புத்தகங்களே உள்ளன. ஒவ்வொரு புத்தகமும் அறிவுத் தேடலுக்கான ஒரு வழியைத் திறந்து விட்டுக்கொண்டேயிருக்கிறது. புத்தகங்களின் பெறுமதி பற்றித் தெரிந்தவர்களிடம் – அவர்களுடைய வாழ்வின் பெரும் செல்வம் எது

மேலும்...
சிதறக் காத்திருக்கும் நம்பிக்கைகள்

சிதறக் காத்திருக்கும் நம்பிக்கைகள்

நாட்டில் விரைவாக தேர்தலொன்று இடம்பெறுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. ஆனால், அது எப்போது என்பதைத்தான் அனுமானிக்க முடியவில்லை. அப்படி தேர்தலொன்று நடைபெற்றால் அது உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலாகத்தான் இருக்கும். ஏற்கனவே, பல உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக்காலங்கள் முடிந்து விட்டதால், அவை விசேட ஆணையாளரின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. மிகுதியாக உள்ள சபைகளின் பதவிக்காலங்களும் இந்த மாதம் 31ஆம்

மேலும்...
முஸ்லிம் மாகாணம்: கோரிக்கையும், கோசங்களும்

முஸ்லிம் மாகாணம்: கோரிக்கையும், கோசங்களும்

முஸ்லிம் தனி மாகாணம் என்கிற கோசம் மீண்டும் உசாரடைந்திருக்கிறது. முஸ்லிம்களுக்கான தனி மாகாணம் என்பது, தமிழர்களுக்கான தனி ஆட்சி அலகு என்கிற கோரிக்கையின் எதிர் விளைவாகும். இலங்கையில் தமிழர்களுக்கு ஓர் ஆட்சி அலகு வழங்கப்படுமாயின் முஸ்லிம்களுக்கென்றும் ஓர் ஆட்சியலகு வழங்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்பட்டதோடு, அவ்வாறானதொரு அலகுக்கு வைக்கப்பட்ட பொதுப் பெயர்தான் முஸ்லிம் தனி

மேலும்...
கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்

கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்

அரசியலை உணர்வுபூர்வமாக அணுகும் வாக்காளர்களைத்தான் அரசியல்வாதிகளில் அதிகமானோர் விரும்புகின்றனர். அறிவார்ந்த ரீதியில் அரசியலை விளங்கி வைத்துள்ள வாக்காளர்கள் ஆபத்தானவர்கள் என்பது கணிசமான அரசியல்வாதிகளின் எண்ணமாகும். ஆயுதப் போராட்ட இயங்கங்களின் பெரும்பாலான தலைமைகளும் இவ்வாறான மனநிலையில்தான் இருந்தன. இயக்க உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் இவ்வாறுதான் கட்டமைத்து வைக்கப்பட்டிருந்தனர். இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழர் சமூகம் அரசியல் மயப்படுத்தப்பட்டதைப் போல், முஸ்லிம்கள்

மேலும்...
கண் விடுத்தல்

கண் விடுத்தல்

முஸ்லிம் கட்சிகளின் ஒன்றிணைவு குறித்து சமீப காலமாக திடீர் கோசமொன்று மேலெழத் துவங்கியுள்ளது. முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக ஒற்றுமைப்பட வேண்டும் என்பதும், அந்த ஒற்றுமையின் மூலம் சமூகத்துக்கு நல்லவை ஏதாவது நடக்க வேண்டும் என்கிற அவாவும் கொண்டவர்கள், நீண்ட காலமாகவே முஸ்லிம் அரசியல் கட்சிகளினதும், தலைவர்களுடையதும் ஒற்றுமை பற்றி வலியுறுத்தி வந்துள்ளனர். ஆனால், மேற்சொன்ன திடீர்

மேலும்...
அப்பன் குதிருக்குள் இல்லை

அப்பன் குதிருக்குள் இல்லை

இலங்கையில் கணிசமானோரின் அரசியல் இருப்பு ஆட்டம் கண்டிருக்கிறது. முன்னைய ஆட்சிக் காலத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் நிழலில் குட்டி ராசாக்கள் போல் வலம் வந்தவர்கள், இப்போது நடுத் தெருவில் நின்று கொண்டிருக்கின்றார்கள். இதனால், எதையாவது செய்து தமது இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய தேவை, இந்த முன்னாள் குட்டி ராசாக்களுக்கு எழுந்துள்ளது. இவர்கள் தமது இருப்பைத்

மேலும்...
அறுவடைக் காலம்

அறுவடைக் காலம்

‘ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்’ என்பார்கள். இலங்கை அரசியல் அரங்கில், கடந்த சனிக்கிழமை அது நிகழ்ந்திருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வர் யோசித ராஜபக்ஷ, விலங்கிட்டு அழைத்துச் செல்லப்பட்ட காட்சியினை ஊடகங்களில் பார்த்தபோது, ‘ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்’ என்பதை யதார்த்தபூர்வமாக உணர முடிந்தது. யோசித ராஜபக்ஷ – சிறைச்சாலை வாகனத்தில்

மேலும்...
பேய்களுக்கான கொட்டு முழக்கம்

பேய்களுக்கான கொட்டு முழக்கம்

பேரினவாதத்தின் வாய்களுக்கு இந்த நாட்களில் கொஞ்சம் அதிகமாகவே ‘அவல்’ கிடைத்திருக்கிறது. புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் பற்றிய பேச்சுத்தான் அந்த அவலாகும். ஒருபுறம், இலங்கையில் நிலவும் இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும், நாட்டிலுள்ள அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து வாழ்வதற்கும் புதிய அரசியல் அமைப்பு ஒன்றின் தேவை அவசியமாகிறது என்று ஆட்சியாளர்கள் கூறிக்கொண்டிருக்கின்றனர். மறுபுறம், புதிய அரசியல் அமைப்பு

மேலும்...