Back to homepage

Tag "பிரதமர் ரணில் விக்ரமசிங்க"

பழைய முறையில் மாகாண சபைத் தேர்தல்; கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அவதானம்: அமைச்சர் பைசர் தெரிவிப்பு

பழைய முறையில் மாகாண சபைத் தேர்தல்; கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அவதானம்: அமைச்சர் பைசர் தெரிவிப்பு 0

🕔26.Jul 2018

மாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் நடத்துவது தொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என்று, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தல் சம்பந்தமாக இறுதி தீர்மானம் எடுப்பதற்காக, கட்சித் தலைவர்களின் விஷேட கூட்டம் இன்று வியாழக்கிழமை காலை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது.

மேலும்...
வெறுப்பு

வெறுப்பு 0

🕔4.Jul 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – நல்லாட்சி அலுத்துப் போய், வெகு காலமாகிவிட்டது. இப்போது அதன் மீது வெறுப்பு ஏற்படத் தொடங்கி விட்டது. “நல்லாட்சிக்கு மக்கள் வழங்கிய ஆணையை, ஜனாதிபதியும் பிரதமரும் உரிய முறையில் நிறைவேற்றத் தவறினால், அடுத்த தேர்தலில், மக்கள் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள்” என்று, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கூறியிருக்கின்றார். மேலும், எஞ்சியிருக்கும்

மேலும்...
விஜயகலாவை அமைச்சுப் பதவியிலிருந்து இடைநிறுத்துமாறு, ஜனாதிபதியிடம் பிரதமர் கோரிக்கை

விஜயகலாவை அமைச்சுப் பதவியிலிருந்து இடைநிறுத்துமாறு, ஜனாதிபதியிடம் பிரதமர் கோரிக்கை 0

🕔3.Jul 2018

ராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து விஜயகலா மகேஸ்வரனை இடைநிறுத்துமாறு, ஜனாதிபதியிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் மீளவும் உருவாக வேண்டும் என்றும், அவர்களின் கைகள் – வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஓங்க வேண்டுமென்றும், ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது கூறியிருந்தார்.

மேலும்...
பிரதமர் ரணிலைத் தோற்கடிக்க, ஜனாதிபதி மைத்திரி என்னிடம் உதவி கோரினார்: மஹிந்த பகீர் தகவல்

பிரதமர் ரணிலைத் தோற்கடிக்க, ஜனாதிபதி மைத்திரி என்னிடம் உதவி கோரினார்: மஹிந்த பகீர் தகவல் 0

🕔29.Jun 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னைத் தொடர்புகொண்டு, குறித்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு உதவி கோரினாரென்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதற்கு நாம் ஒப்புகொண்ட போதும், தீர்மானத்துக்கான வாக்களிப்பு நடைபெறுவதற்கான செயற்பாடுகளுக்கு நடுவிலேயே ஜனாதிபதி தனது நிலைப்பாட்டைக் கைவிட்டு விட்டார் என்றும் அவர்

மேலும்...
நாடு வருடத்துக்கு 2,500 மில்லியன் டொலர் கடன் செலுத்த வேண்டியுள்ளது: பிரதமர் தகவல்

நாடு வருடத்துக்கு 2,500 மில்லியன் டொலர் கடன் செலுத்த வேண்டியுள்ளது: பிரதமர் தகவல் 0

🕔17.May 2018

– எம்.எம். மின்ஹாஜ் – நாடு ஒரு வரு­டத்­துக்கு 2500 மில்லியன் டொலர் கடன் செலுத்த வேண்டியுள்ளதாக பிர­தமர் ரணில் விக்ரமசிங்க தெரி­வித்தார். கிரா­ம அபி­வி­ருத்­தியை கட்டியெழுப்பினால் மாத்­தி­ரமே நாட்டை கட்­டி­யெ­ழுப்ப முடியும் என்றும், தற்­போது கிராம பொரு­ளா­தாரம் வீழ்ச்சி அடைந்­துள்ளதாகவும், விவசா­யத்தை நவீ­ன­ம­யப்­ப­டுத்­து­வ­தற்கு திட்­ட­மிட்­டுள்ளதாகவும் அவர் கூறினார். விவ­சா­யத்­து­றையை நவீ­ன­ம­யப்­ப­டுத்­து­வ­தற்கு உலக வங்­கியின் ஒத்­து­ழைப்­புடன் உள்­நாட்டு

மேலும்...
ஜனாதிபதியை விமர்சித்த விவகாரம்: மன்னிப்புக் கோருமாறு, சரத் பொன்சேகாவுக்கு அழுத்தம்

ஜனாதிபதியை விமர்சித்த விவகாரம்: மன்னிப்புக் கோருமாறு, சரத் பொன்சேகாவுக்கு அழுத்தம் 0

🕔8.May 2018

ஜனாதிபதியை அமைச்சர் சரத் பொன்சேகா பகிரங்கமாக விமர்சித்தமை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும் வெளியிலும் கடுமையாக எதிர்ப்புகள் வெளிக்கிளம்பியுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் நேற்று முன்திம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றபோது, அங்கு உரையாற்றிய சரத் பொன்சேகா; ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கடுமையாக விமர்சித்தார். “நாங்கள் தவறான ஒருவரை ஜனாபதிபதியாகத் தெரிவு செய்து விட்டோம்.

மேலும்...
பிரதமர் பொகவந்தலாவை விஜயம்: கோல்ஃப் மைதானம் அமைக்கும் இடத்தையும் பார்வையிட்டார்

பிரதமர் பொகவந்தலாவை விஜயம்: கோல்ஃப் மைதானம் அமைக்கும் இடத்தையும் பார்வையிட்டார் 0

🕔17.Apr 2018

– க. கிஷாந்தன் – பொகவந்தலாவையை பொகவந்தலாவ டின்சின் தோட்டத்தில்  கோல்ஃப் விளையாட்டு மைதானம் ஒன்றையும், உல்லாச விடுதிகளையும் அமைப்பதற்கான இடங்களை பார்வையிடுவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை பொகவந்தலாவை பிரதேசத்துக்கு விஜயம் செய்தார். பொகவந்தலாவையை உல்லாசப் பிதேசமாக மாற்றும் பொருட்டு, அங்கு மேற்படி நிர்மாண வேலைகள் இடம்பெறவுள்ளன. பிரதமரின் விஜயத்தின்போது நுவரெலியா மாவட்ட

மேலும்...
‘அவர்களுடன்’ இணைந்து செயற்பட முடியாது: ஜனாதிபதிக்கு ஐ.தே.க. அறிவிப்பு

‘அவர்களுடன்’ இணைந்து செயற்பட முடியாது: ஜனாதிபதிக்கு ஐ.தே.க. அறிவிப்பு 0

🕔8.Apr 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேணைக்கு ஆதரவாக வாக்களித்த சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், ஐக்கிய தேசியக் கட்சியினால் இணைந்து செயற்பட முடியாது என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அந்தக் கட்சி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தத் தகவலை அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். பிரமருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு

மேலும்...
ஒவ்வொரு உறுப்பினருக்கும் 05 கோடி ரூபாய்: பிரதமர் லஞ்சம் வழங்கியதாக, அமைச்சர் தயாசிறி குற்றச்சாட்டு

ஒவ்வொரு உறுப்பினருக்கும் 05 கோடி ரூபாய்: பிரதமர் லஞ்சம் வழங்கியதாக, அமைச்சர் தயாசிறி குற்றச்சாட்டு 0

🕔8.Apr 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தனக்கெதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையைத் தோற்கடிப்பதற்காக பெருந்தொகை பணத்தை லஞ்சமாக வழங்கினார் என்று அமைச்சர் தயாசிறி ஜயசேகர குற்றம் சாட்டியுள்ளார். ஊடகமொன்று வழங்கியுள்ள நேர்காணலொன்றிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். ரணில் விக்ரமசிங்க – தனது அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்ளும்பொருட்டு, தனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிக்க, நாடாளுமன்ற

மேலும்...
தம்மை பதவி விலக்குமாறு, சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் வேண்டுகோள்

தம்மை பதவி விலக்குமாறு, சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் 0

🕔7.Apr 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தம்மை பதவி விலக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். மேற்படி அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், கடிதமொன்றின் ஊடாக இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர். அமைச்சர் தயாசிறி ஜயசேகர மூலம் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சுதந்திரக் கட்சியைச்

மேலும்...
பிரதமருக்கு எதிரான பிரேரணையில் ஏன் பங்கேற்கவில்லை; தன்னிலை விளக்கம் தருகிறார் ஹிஸ்புல்லா

பிரதமருக்கு எதிரான பிரேரணையில் ஏன் பங்கேற்கவில்லை; தன்னிலை விளக்கம் தருகிறார் ஹிஸ்புல்லா 0

🕔5.Apr 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுத்த தீர்மானத்துக்கு அமையவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் தான் பங்கேற்கவில்லை என ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு நேற்று  புதன்கிழமை இரவு நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.

மேலும்...
வென்றார் ரணில்; தோற்றது பிரேரணை

வென்றார் ரணில்; தோற்றது பிரேரணை 0

🕔4.Apr 2018

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 46 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. பிரேரணைக்கு ஆதரவாக 77 வாக்குகளும், எதிராக 122 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அதேவேளை, 26 பேர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. அந்தவகையில், 46 மேலதிக வாக்குகளால் பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மை கட்சிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மு.காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

மேலும்...
பிரேரணைக்கு ஆதரவாகவே வாக்களிப்பேன்: அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவிப்பு

பிரேரணைக்கு ஆதரவாகவே வாக்களிப்பேன்: அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவிப்பு 0

🕔4.Apr 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் நடைபெற்று வரும் விவாதத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சியும், நபர்களும் தமதுநிலைப்பாடு தொடர்பில் அறிவித்து வரும் தருணத்தில், அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க – பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதெனத் தெரிவித்துள்ளார். அவர் மட்டுமன்றி தனது தரப்பினரும் ஆதரவாகவே வாக்களிப்பர் எனவும் அவர் கூறியுள்ளார். நாடாளுமன்றில் சபைக்கு வெளியில் வைத்து

மேலும்...
நம்பிக்கையில்லா பிரேரணை; ரணிலுக்கு ‘குறி’ சொல்லும் மஹிந்த தரப்பு

நம்பிக்கையில்லா பிரேரணை; ரணிலுக்கு ‘குறி’ சொல்லும் மஹிந்த தரப்பு 0

🕔2.Apr 2018

– எம்.ஐ. முபாறக் – பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை, வாக்கெடுப்புக்காக வரும் நாள் நெருங்க நெருங்க, அது தொடர்பிலான செயற்பாடுகளும் விரைவு படுத்தப்பட்டுள்ளன. பிரதமரை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகளும், எப்படியாவது அவரைக் காப்பாற்றிவிட வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியும் ஏட்டிக்குப் போட்டியாக ஓடித் திரிகின்றன. குறிப்பாக, பிரேரணையைக்

மேலும்...
ஐ.தே.கட்சிக்குள் இருக்கும், ஆறு கறுப்பாடுகள்; தேடும் நடவடிக்கை தீவிரம்

ஐ.தே.கட்சிக்குள் இருக்கும், ஆறு கறுப்பாடுகள்; தேடும் நடவடிக்கை தீவிரம் 0

🕔31.Mar 2018

– எம்.ஐ. முபாறக் – பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இப்போது அது தொடர்பான வேலைகளில்தான் பிரதான அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளன. உள்ளூராட்சி சபை தேர்தல் வெற்றியுடன் இருக்கும் மஹிந்த அணி, இந்த பிரேரணையில் தோற்றுப்போனால், அது அவர்கள் பெற்ற தேர்தல் வெற்றியை அவமதிப்பதாக இருக்கும் என்று அவர்கள் கருதுகின்றனர். இதனால்தான் ஐக்கிய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்