பாடசாலைகள் ஆரம்பமாகும் திகதி குறித்து, கல்வியமைச்சர் அறிவிப்பு
நாட்டிலுள்ள பாடசாலைகளில் தரம் 01 தொடக்கம் 05 வரையிலான வகுப்புகளையும், முன்பள்ளி பாடசாலைகளையும் ஜனவரி மாதம் 11ஆம் திகதி தொடக்கம் மீண்டும் திறப்பதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. இது குறித்து கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளார். இருந்தபோதும் மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களிலுள்ள பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை திறக்கப்பட மாட்டாது