Back to homepage

Tag "பாகிஸ்தான்"

கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட பாகிஸ்தானிய கைதி: இந்தியச் சிறையில் கொடூரம்

கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட பாகிஸ்தானிய கைதி: இந்தியச் சிறையில் கொடூரம் 0

🕔20.Feb 2019

இந்தியாவின் ஜெய்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாகிஸ்தானை சேர்ந்த சிறைக்கைதி ஷாக்கருல்லா என்பவரை, சக சிறைக் கைதிகள் கொன்றுள்ளனர். பாகிஸ்தானின் சியால்கோட்டை சேர்ந்த ஷாக்கருல்லா, ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தார். இந்திய சிறைக் கைதிகள் நான்கு பேர் அவரை கல்லால் அடித்து கொன்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் இன்று புதன்கிழமை மதியம் நடைபெற்றதாக பொலிஸ் கூறுகிறது.

மேலும்...
பேருவளை ஹெரோயின் கடத்தல் விவகாரம்: பிரதான சந்தேக நபர்கள் பற்றிய தகவல் வெளியானது

பேருவளை ஹெரோயின் கடத்தல் விவகாரம்: பிரதான சந்தேக நபர்கள் பற்றிய தகவல் வெளியானது 0

🕔11.Dec 2018

பேருவளை கடற்பரப்பில் வைத்து கடந்த வாரம் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் பாகிஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த கடத்தலுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் சீசெல்ஸ் மற்றும் பங்களாதேஸ் நாடுகளில் தங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர்களை கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸார் ஊடாக குறித்த நாடுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட

மேலும்...
பாகிஸ்தானிலுள்ள சீனத் தூதரகம் மீது தற்கொலைத் தாக்குதல்: இரண்டு பொலிஸார் பலி

பாகிஸ்தானிலுள்ள சீனத் தூதரகம் மீது தற்கொலைத் தாக்குதல்: இரண்டு பொலிஸார் பலி 0

🕔23.Nov 2018

பாகிஸ்தான் கராச்சி நகரில் உள்ள சீனத் தூதரகத்தின் மீது, இன்று வெள்ளிக்கிழமை காலை  நடத்தப்பட்ட  தாக்குதலில் குறைந்தது 02 பொலிஸார் உயிரிழந்துள்ளனர். சீனத் தூதரகத்தினுள் ஆயுததாரிகள் நுழைய முற்பட்ட போதும், அங்கிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அதனை தடுத்துள்ளனர். இதன்போது நடந்த தாக்குதலில் இரண்டு பொலிஸார் கொல்லப்பட்டதோடு, மேலும் சில பொலிஸார் கடுமையான காயங்களுக்கு உள்ளாகினர். இதேவேளை,

மேலும்...
45 லட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயினுடன், இருவர் கைது

45 லட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயினுடன், இருவர் கைது 0

🕔26.Oct 2018

ஹெரோயின் போதைப் பொருளை – குளிசை வடிவில் விழுங்கிக் கொண்டு வந்த பாகிஸ்தான் நாட்டவர்கள் இருவர், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 350 கிராம் எடையுடைய 35 ஹெரோயின் மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் 67 வயதுடைய பெண், மற்றையவர் 44 வயதுடைய ஆண் ஆவார். கைப்பற்றப்பட்ட ஹெரோயின்

மேலும்...
பாக்கிஸ்தான் பல்கலைக்கழகங்களில், இலங்கை மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்குமாறு, அமைச்சர் றிசாட் வேண்டுகோள்

பாக்கிஸ்தான் பல்கலைக்கழகங்களில், இலங்கை மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்குமாறு, அமைச்சர் றிசாட் வேண்டுகோள் 0

🕔7.Sep 2018

பாகிஸ்தானிய புதிய அரசாங்கத்தின் உருவாக்கத்தில் அந்நாட்டு பல்கலைக்கழக மாணவர்களினதும், இளைஞர்களினதும் பங்களிப்பு காத்திரமானதாக இருந்தது எனவும், பிரதமர் இம்ரான்கானின் அரசாங்கத்தின் புதிய கொள்கைத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் இவ்விரு சாராரும் உத்வேகம் காட்டுவதாகவும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கலாநிதி ஹசன் சொஹைப் முராத் தெரிவித்தார். லாஹூரிலுள்ள முகாமைத்துவம் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் ஐ.எல்.எம் நம்பிக்கை நிதியத்தின் (ILM

மேலும்...
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் பிரஜைகள் தொடர்பில், ஜனாதிபதி மைத்திரி கருத்து

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் பிரஜைகள் தொடர்பில், ஜனாதிபதி மைத்திரி கருத்து 0

🕔23.Aug 2018

போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் பிரஜைகளை அவர்களுடைய நாட்டிற்கு கையளிப்பதற்காக பாகிஸ்தானின் புதிய அரசாங்கத்துடன் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – மயிலிட்டி துறைமுகத்தை புனரமைப்பு செய்வதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று புதன்கிழமை மயிலிட்டி துறைமுகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர்

மேலும்...
இம்ரானை பிரதமாக்கும் திட்டம், மூன்று வருடங்களுக்கு முன்னரே தீட்டப்பட்டது: அம்பலப்பலமாக்கினார் முன்னாள் மனைவி

இம்ரானை பிரதமாக்கும் திட்டம், மூன்று வருடங்களுக்கு முன்னரே தீட்டப்பட்டது: அம்பலப்பலமாக்கினார் முன்னாள் மனைவி 0

🕔29.Jul 2018

இம்ரான் கானை ஆட்சிக்குக் கொண்டு வரும் திட்டம் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பே மேற்கொள்ளப்பட்டதாக இம்ரானின் முன்னாள் மனைவியும் பத்திரிகையாளருமான ரேஹம் கான் தெரிவித்துள்ளார். மேலும், “இம்ரானுக்கு பல சிக்கலான விஷயங்கள் புரியாது. ராணுவத்தின் சொல்படிதான் அவர் நடப்பார்” என்றும் அவர் கூறியுள்ளார். தி இந்து ஆங்கிலம் நாளிதழுக்கு ரேஹம் கான் வழங்கிய பேட்டியிலேயே, இந்த

மேலும்...
பாகிஸ்தானின் புதிய பிரதமராக இன்ரான் கான், ஓகஸ்ட் 14க்கு முன் பதவியேற்பார்

பாகிஸ்தானின் புதிய பிரதமராக இன்ரான் கான், ஓகஸ்ட் 14க்கு முன் பதவியேற்பார் 0

🕔29.Jul 2018

பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான்கான் ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதிக்கு முன்னர் பதவியேற்பார் என, இன்ரான்கானின் தெஹ்ரீக்–இ–இன்சாப் கட்சி அறிவித்துள்ளது. ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி பாகிஸ்தானின் சுதந்திரமாகும். இந்த நிலையில், புதிய பிரதமராக பதவியேற்கும் இம்ரான்கானுக்கு ஏராளமான சவால்கள் காத்திருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல் கடந்த 25

மேலும்...
பாகிஸ்தான்: தேர்தல் சாவடியருகில் குண்டு வெடிப்பு; 28 பேர் பலி

பாகிஸ்தான்: தேர்தல் சாவடியருகில் குண்டு வெடிப்பு; 28 பேர் பலி 0

🕔25.Jul 2018

பாகிஸ்தானில் இன்று புதன்கிழமை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில், அங்கு இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 28 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தான் குவட்டாவில் ஒரு வாக்குச்சாவடி அருகே இந்தக் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு இந்தத் தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. அதேவேளை, தற்கொலைக் குண்டுத்தாக்குதலே இடம்பெற்றுள்ளதாகவும்

மேலும்...
பாகிஸ்தான் சென்றார் மைத்திரி; குடியரசு தின நிகழ்வில் பிரதம அதிதியாகவும் பங்கேற்கிறார்

பாகிஸ்தான் சென்றார் மைத்திரி; குடியரசு தின நிகழ்வில் பிரதம அதிதியாகவும் பங்கேற்கிறார் 0

🕔22.Mar 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று வியாழக்கிழமை பாகிஸ்தான் சென்றுள்ளார். நாளை நடைபெறவுள்ள பாகிஸ்தானின் குடியரசு தின நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளுமாறு, அந்த நாட்டின் ஜனாதிபதி விடுத்திருந்த அழைப்புக்கிணங்கவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு சென்றுள்ளார். இதேவேளை, இரண்டு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகளை கட்டியெழுப்புகின்றமை தொடர்பில், இரு நாடுகளின்

மேலும்...
அரிசி இறக்குமதிக்கான செயன்முறை ஆரம்பம்: அமைச்சர் றிசாத் தெரிவிப்பு

அரிசி இறக்குமதிக்கான செயன்முறை ஆரம்பம்: அமைச்சர் றிசாத் தெரிவிப்பு 0

🕔1.Aug 2017

நாட்டின் அரிசித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் மியன்மாரிலிருந்தும் தாய்லாந்திலிருந்தும் அரிசியை இறக்குமதி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பூரணப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான ஆவணங்கள் இரண்டு நாடுகளுக்கும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். தாய்லாந்திருந்து 01 லட்சம் மெற்றிக் தொன் நாட்டரிசியும், 25 ஆயிரம் மெற்றிக் தொன்

மேலும்...
நவாஸ் ஷெரீபை காட்டிக் கொடுத்த ‘கலிப்ரி’ எழுத்துரு; பாகிஸ்தான் பிரதமர் சிக்கிய கதை

நவாஸ் ஷெரீபை காட்டிக் கொடுத்த ‘கலிப்ரி’ எழுத்துரு; பாகிஸ்தான் பிரதமர் சிக்கிய கதை 0

🕔29.Jul 2017

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தனது பதவியை ராஜிநாமா செய்தாரல்லவா? ஏன் செய்தார்? உடனே, ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியதால் என்பீர்கள். தங்கள் நாட்டுக்குத் தெரியாமல் மோசடியாக வெளிநாடுகளில் சொத்துக் குவித்த நபர்கள் மற்றும் நிறுவனங்களின் தகவல்கள், பனாமா பேர்பர்ஸ் எனும் பெயரில், சில காலங்களுக்கு முன்னர் வெளியாகி – உலகை கதிகலங்க வைத்தது. பனாமா பேர்பர்ஸ்

மேலும்...
பாகிஸ்தானின் புதிய பிரதமராக, நவாஸ் ஷெரீபின் தம்பி  ஷெஹ்பாஸை நியமிக்க முடிவு

பாகிஸ்தானின் புதிய பிரதமராக, நவாஸ் ஷெரீபின் தம்பி ஷெஹ்பாஸை நியமிக்க முடிவு 0

🕔28.Jul 2017

பாகிஸ்தானின் பிரதம மந்திரி பதவியிலிருந்து நவாஸ் ஷெரீப் ராஜிநாமா செய்தமையினை அடுத்து, புதிய பிரதமராக – நவாஸ் ஷெரீப்பினுடைய சகோதரர் ஷெஹ்பாஸ் ஷெரீப் தெரிவு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் உயர் மட்டத்தவர்களைச் சந்தித்து நவாஸ் ஷெரீப் கலந்துரையாடிய போதே, இந்த தீர்மானம் எட்டப்பட்டது. இந்தச் சந்திப்பின்போது,  தனது சகோதரரை புதிய பிரதமராக நியமிப்பதற்கு நவாஸ்

மேலும்...
பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து, நவாஸ் ஷெரீப் ராஜிநாமா

பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து, நவாஸ் ஷெரீப் ராஜிநாமா 0

🕔28.Jul 2017

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். பிரமராக பதவி வகிப்பதற்கு நவாஸ் ஷெரீப் தகுதியற்றவர் என, அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியமையை அடுத்து, அவர் இந்த முடிவை மேற்கொண்டார். பனாமா பேப்பர் லீக் மோசடி தொடர்பில் நவாஸ் ஷெரீப் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், இது குறித்து

மேலும்...
அரிசித் தட்டுப்பாட்டினை இல்லாமலாக்கும் நடவடிக்கை; அமைச்சர் றிசாத் முன்னெடுப்பு

அரிசித் தட்டுப்பாட்டினை இல்லாமலாக்கும் நடவடிக்கை; அமைச்சர் றிசாத் முன்னெடுப்பு 0

🕔18.Jul 2017

  – சுஐப். எம். காசிம் – ஒரு லட்சம் மெற்றிக்தொன் நாட்டரிசியை இலங்கைக்கு வழங்குவதற்கு, தாய்லாந்து இணக்கம் தெரிவித்துள்ளதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இது தொடர்பான புரிந்துணர்வுக் கடிதமும், கொள்வனவு சம்பந்தமான ஆவணங்களும் ஒரு வாரத்திற்குள் தாய்லாந்து அரசுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 01 மெற்றிக்தொன் நாட்டரிசியை 425 டொலருக்கு வழங்குவதற்கு தாய்லாந்து அரசாங்கம் இணக்கம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்