திருகோணமலை உள்ளிட்ட மூன்று பகுதிகளில் நிலநடுக்கம் 0
திருகோணமலை, கோமரன்கடவல மற்றும் கிரிந்த ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலை சிறியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நில அதிர்வு 3 ரிக்டர் அளவில் உணரப்பட்டதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது. கிரிந்த பிரதேசத்தில் உணரப்பட்ட நிலநடுக்கம் 2.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. அண்மைக்காலமாக, இலங்கையில் இவ்வாறான சிறியளவான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.