Back to homepage

Tag "கோட்டாபய ராஜபக்ஷ"

கோட்டாவுக்கு எதிராக, லஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் வழக்கு

கோட்டாவுக்கு எதிராக, லஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் வழக்கு 0

🕔31.Aug 2016

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக, கொழும்பு பிரதான நீதிமன்றில் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு – வழக்கு ஒன்றை இன்று புதன்கிழமை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் கோட்டாவின் பெயருடன் மேலும் 07 பேரின் பெயர்களும் இணைக்கப்பட்டுள்ளன. ‘மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்தினை, கப்பலில் வைத்துச் செயற்படும் பொருட்டு, அவன் கார்ட் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியமை தொடர்பிலேயே

மேலும்...
கோட்டாவின் அச்சுறுத்தல் காரணமாகவே, நாட்டை விட்டு வெளியேறினேன்: முன்னாள் பொலிஸ் பேச்சாளர்

கோட்டாவின் அச்சுறுத்தல் காரணமாகவே, நாட்டை விட்டு வெளியேறினேன்: முன்னாள் பொலிஸ் பேச்சாளர் 0

🕔20.Aug 2016

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் கொலை அச்சுறுத்தல் காரணமாகவே, தான் நாட்டை விட்டு வெளியேறி அவுஸ்திரேலியா சென்றதாக முன்னாள் பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார். ஆட்சிமாற்றம் ஏற்பட்டதனைத் தொடர்ந்து இலங்கைக்கு திரும்பிய தனக்கு, பொலிஸ் திணைக்களத்தில் மீண்டும் சேவையாற்ற அமைச்சரவை அனுமதியளித்துள்ளமை மகிழ்ச்சியளிப்பதாகவும், விரைவில் பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்படலாம் என எதிர்ப்பார்ப்பதாகவும், அவர்

மேலும்...
கோட்டாவின் ராணுவப் பாதுகாப்பு குறைப்பு

கோட்டாவின் ராணுவப் பாதுகாப்பு குறைப்பு 0

🕔12.Jul 2016

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த ராணுவப் பாதுகாப்பு இன்று செவ்வாய்கிழமை நீக்கப்பட்டுள்ளது. இதனை கோட்டாவும் உறுதி செய்துள்ளார். தனக்கு வழங்கப்பட்டிருந்த ராணுவப் பாதுகாப்பை நீக்கி விட்டு, பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரை பாதுகாப்புக்கு நியமித்துள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனது பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டிருந்த 50 ராணுவ வீரர்களில்

மேலும்...
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு கோட்டாவை மக்கள் கோருகின்றனராம்; அவரே கூறுகிறார்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு கோட்டாவை மக்கள் கோருகின்றனராம்; அவரே கூறுகிறார் 0

🕔13.Jun 2016

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு, தன்னிடம் பலர் கோரிக்கை விடுத்து வருவதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதேவேளை, தான் ஜனாதிபதியாக வந்தால், தற்போதைய சிக்கலை சரியான வழிக்கு கொண்டு வருவேன் என்றும் அவர் கூறியுள்ளார். ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “அடுத்த ஜனாதிபதித் தேர்தலில்

மேலும்...
கொஸ்கம விவகாரம்; கோட்டாவுக்கு எதிராக கிளம்பும் எதிர்ப்புகள்

கொஸ்கம விவகாரம்; கோட்டாவுக்கு எதிராக கிளம்பும் எதிர்ப்புகள் 0

🕔11.Jun 2016

யுத்தத்துக்குப் பயந்து, ராணுவ சேவையிலிருந்த போது வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்ற கோட்டாபய ராஜபக்ஷ, தற்போது ராணுவ உயர் அதிகாரிகள் தொடர்பில் மோசமான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக அதிருப்தியும், எதிர்ப்பும் தெரிவிக்கப்படுகிறது. கொஸ்கம ராணுவ முகாமின் ஆயுத கிடங்குகள் வெடித்தமை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் முன்னளாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள கருத்து, குறித்து ராணுவத்தினர் கடுமையான அதிருப்தி வெளியிட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும்...
சுதந்திரக் கட்சியில் கோட்டாவுக்குப் பதவி; பொய்யான செய்தி என்கிறார் துமிந்த திஸாநாயக்க

சுதந்திரக் கட்சியில் கோட்டாவுக்குப் பதவி; பொய்யான செய்தி என்கிறார் துமிந்த திஸாநாயக்க 0

🕔7.Jun 2016

கோட்டாபய ராஜபக்ஷவை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில்  இணைத்துக் கொள்ளவுள்ளதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் – அவர் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையில்; “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவராக கோட்டாபய ராஜபக்ஷவை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக வெளியான தகவல்களில் எவ்வித உண்மைகளும் கிடையாது. ஸ்ரீலங்கா

மேலும்...
கோட்டாவுக்கு கட்சியில் பதவிகள் வழங்கினால், அரசிலிருந்து விலகி விடுவேன்; சந்திரிக்கா எச்சரிக்கை

கோட்டாவுக்கு கட்சியில் பதவிகள் வழங்கினால், அரசிலிருந்து விலகி விடுவேன்; சந்திரிக்கா எச்சரிக்கை 0

🕔7.Jun 2016

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பதவியொன்றினை வழங்கி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி உள்வாங்கிக் கொள்ளுமாயின், இந்த அரசுடன் – தான் தொடர்ந்தும் இருக்கப் போவதில்லை என்று, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்தார். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, கடந்த ஞாயிற்றுக்கிழமை அத்தனகல பிரதேசதத்தில் நிவாரணப் பொருட்களை வழங்கி வைத்த பின்னர் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். “நாட்டினைச் சூரையாடுவதை

மேலும்...
சரத் பொன்சேகா அரசியல் அறிவற்றவர்; அமைச்சர் ஜோன் செனவிரட்ன பதிலடி

சரத் பொன்சேகா அரசியல் அறிவற்றவர்; அமைச்சர் ஜோன் செனவிரட்ன பதிலடி 0

🕔7.Jun 2016

முன்னாள் ராணுவத் தளபதியும் அமைச்சருமான சரத் பொன்சேகா எவ்விதமான அரசியல் அறிவும் அற்றவர் என்று அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார். இவ்வாறான ஒருவருடன் அமைச்சரவையில் ஒன்றாக அமர்ந்திருப்பதை நினைக்கையில் வருத்தமளிப்பதாகவும் அவர் மேலும் கூறினார். தொழில் அமைச்சில் நேற்று திங்கட்கிழமை மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பா அமைச்சர் மேலும்

மேலும்...
கோட்டாவை சுதந்திரக் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவராக நியமிப்பது குறித்து பேச்சு; அமைச்சர் செனவிரட்ன

கோட்டாவை சுதந்திரக் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவராக நியமிப்பது குறித்து பேச்சு; அமைச்சர் செனவிரட்ன 0

🕔5.Jun 2016

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவராக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை நியமிப்பதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாக, அமைச்சர் டப்ளியு.டி.ஜே. செனவிரட்ன வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளதாக ‘ஏசியன் மிரர்’ செய்தி வெளியிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், அவரின் சகோதரர் கோட்டாபய ராஜபக்ஷவும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில், நாட்டுக்கு பாரிய சேவை செய்துள்ளனர் என்றும் அமைச்சர் கூறியதாகவும்

மேலும்...
என்னை நானே அடித்துக் கொள்ள வேண்டும்; கோட்டா வருத்தம்

என்னை நானே அடித்துக் கொள்ள வேண்டும்; கோட்டா வருத்தம் 0

🕔10.May 2016

சரத் பொன்சேகாவிற்கு ராணுவ தளபதி பதவி வழங்கிய தன்னை – தானே அடித்து கொள்ள வேண்டும் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதேவேளை,  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கான ராணுவ பாதுகாப்பு நீக்கப்பட்டமையை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளார். பாரிய ஊழல், மோசடி தொடர்பில விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு

மேலும்...
விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா பயணமானார் கோட்டா

விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா பயணமானார் கோட்டா 0

🕔12.Apr 2016

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ, அமெரிக்காவுக்கு திடீரென பயணமாகியுள்ளார். எதிர்வரும் 18ஆம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே கோட்டபாய அவசரமாக அமெரிக்காவுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முப்படையினர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளடங்களாக 179 பேரை, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தியமை தொடர்பில், மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளுக்காக வாக்குமூலம் ஒன்றினை பெற்றுகொள்ளும் பொருட்டு, ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு

மேலும்...
பசில் ராஜபக்ஷவுக்கு எக்கச்சக்க பாதுகாப்பு வழங்கியமை தொடர்பில், கோட்டாவிடம் விசாரணை

பசில் ராஜபக்ஷவுக்கு எக்கச்சக்க பாதுகாப்பு வழங்கியமை தொடர்பில், கோட்டாவிடம் விசாரணை 0

🕔12.Apr 2016

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவிற்கு கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தின் போது கூடுதல் பாதுகாப்பு வழங்கியமை குறித்து, அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாரிய நிதி மோசடிகள், அதிகார துஸ்பிரயோகம் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இந்த விசாரணை நடத்தப்பட உள்ளது. எதிர்வரும் 18ம் திகதி ஆணைக்குழுவின்

மேலும்...
மஹிந்தவுக்கு ராணுவப் பாதுகாப்பு வழங்குவது, சட்டத்துக்கு விரோதமானது

மஹிந்தவுக்கு ராணுவப் பாதுகாப்பு வழங்குவது, சட்டத்துக்கு விரோதமானது 0

🕔8.Apr 2016

சட்டத்துக்கு முரணான வகையிலேயே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக 103 ராணுவத்தினர் நியமிக்கப்பட்டிருந்ததாக பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். இவ்வளவு காலமும் நடந்த இந்தத் தவறைச் சரி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடையெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்; “முன்னாள்

மேலும்...
ராணுவத் தலைமையகத்தைப் பாதுகாக்க முடியாமல் போனவர் பொன்சேகா; கோட்டா கிண்டல்

ராணுவத் தலைமையகத்தைப் பாதுகாக்க முடியாமல் போனவர் பொன்சேகா; கோட்டா கிண்டல் 0

🕔25.Mar 2016

ராணுவத் தலைமையகத்தை பாதுகாக்க முடியாமல் போன ராணுவத்தளபதி பொன்சேகா, நான்தான் யுத்ததை முடிவுக்குக் கொண்டு வந்தேன் என எவ்வாறு கூற முடியும் என்று, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார். ரக்னா லங்கா மற்றும் அவன்காட் நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில், பாரிய நிதி மோசடி தொடர்பான விசாரணைப்

மேலும்...
நாமல், கோட்டா, பசில் என்று, எனக்கு சார்பானவர்கள் அனைவரையும் அரசாங்கம் கைது செய்து விடும்: மஹிந்த

நாமல், கோட்டா, பசில் என்று, எனக்கு சார்பானவர்கள் அனைவரையும் அரசாங்கம் கைது செய்து விடும்: மஹிந்த 0

🕔28.Feb 2016

தன்னுடைய புதல்வர் நாமல் ராஜபக்ஷ, சகோதரர்களான கோட்டாபய ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ மற்றும் தனக்கு ஆதரவு வழங்கும் அரசியல்வாதிகள் அனைவரையும் அரசாங்கம் கைது செய்துவிடும் என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். நாமல், கோட்டா, பசில், விமல் வீரவன்ச, மஹிந்தானந்த அளுத்கமகே, ரோஹித அபேகுணவர்த்தன, குமார வெல்கம என்று எல்லோரையும் கைது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்