Back to homepage

Tag "கோட்டாபய ராஜபக்ஷ"

மோசடி தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு, கோட்டா உள்ளிட்ட நால்வருக்கு அழைப்பு

மோசடி தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு, கோட்டா உள்ளிட்ட நால்வருக்கு அழைப்பு 0

🕔22.Aug 2018

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் மிஹின் லங்கா நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் வாக்கு மூலம் வழங்கும் பொருட்டு ஆஜராகுமாறு பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 04 பேருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் ஆராய அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவே இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

மேலும்...
ஒன்றிணைந்த எதிரணியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக கோட்டா மட்டுமே இருக்க முடியும்: கம்மன்பில

ஒன்றிணைந்த எதிரணியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக கோட்டா மட்டுமே இருக்க முடியும்: கம்மன்பில 0

🕔6.Aug 2018

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஒன்றிணைந்த எதிரணியின் சார்பான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளராக, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ களமிறக்கப்பட வேண்டும் என்று, பிவிதுரு ஹெலஉறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்; ஏதாவது குற்றங்களுடன் கோட்டாவை தொடர்புபடுத்துவதற்கான

மேலும்...
கோட்டாவுக்கு எதிராக குமார வெல்கம போர்க் கொடி; ஒன்றிணைந்த எதிரணிக்குள் குழப்பம்

கோட்டாவுக்கு எதிராக குமார வெல்கம போர்க் கொடி; ஒன்றிணைந்த எதிரணிக்குள் குழப்பம் 0

🕔10.Jul 2018

நாட்டின் தலைவராக தெரிவு செய்யப்படுபவர் குறைந்தபட்சம் பிரதேசசபைத் தலைவராகவேனும் இருந்திருக்க வேண்டும் என்று ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். எமது ஜனாதிபதி வேட்பாளர்  இதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே, மக்களின் துன்பங்களை அவரால் புரிந்து கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார். நாட்டின்

மேலும்...
கோட்டாவை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: திஸ்ஸ விதாரண தெரிவிப்பு

கோட்டாவை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: திஸ்ஸ விதாரண தெரிவிப்பு 0

🕔7.Jul 2018

கோட்டாபய ராஜபக்ஷவை எதிர்வரும ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக நிறுத்துவதை, தாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று, லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாண தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்; “2020 ஆம் ஆண்டில் நடைபெறவுளள ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவை வேட்பாளராக நிறுத்துவதை, இடசாரி கட்சி என்ற வகையில் நாம்

மேலும்...
கோட்டாவுக்கும் தனக்குமிடையிலான உறவு குறித்து, பசில் ராஜபக்ஷ விளக்கம்

கோட்டாவுக்கும் தனக்குமிடையிலான உறவு குறித்து, பசில் ராஜபக்ஷ விளக்கம் 0

🕔28.Jun 2018

கோட்டாபய ராஜ­ப­க்ஷ­வுக்­கு­ம் தனக்குமிடையில் எந்­த­வி­த­மான பிரச்­சி­னையும் இல்லை என்று, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனது சகோதர் கோட்டாவும், தானும் புரிந்­து­ணர்­வுடன் செயற்­பட்டு வரு­வதாகவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; “எனக்கும் எனது சகோ­தரர் கோட்டாபய ராஜபக்ஷவுக்­கு­மி­டையில் நெருக்­கடி நிலவுவதாக பிர­சாரம் செய்­து­வ­ரு­கின்­றனர். ஆனால் எனக்கும் எனது சகோ­தரருக்கும் இடையில்

மேலும்...
தந்தைக்கு அருங்காட்சியகம் அமைத்தமை தொடர்பில், கோட்டாவிடம் விசாரணை

தந்தைக்கு அருங்காட்சியகம் அமைத்தமை தொடர்பில், கோட்டாவிடம் விசாரணை 0

🕔25.Jun 2018

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் இன்று திங்கட்கிழமை வாக்கு மூலம் ஒன்றினை வழங்கியுள்ளார். அவரின் தந்தையார் டீ.ஏ. ராஜபக்ஷவின் நினைவாக தங்காலை வீரகெட்டிய பகுதியில் அருங்காட்சியத்தை நிர்மாணிப்பதற்கு, அரச நிதியை முறைக்கேடாக பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் வாக்கு மூலம் பெறுவதற்காக அவர் அழைக்கப்பட்டிருந்தார். சுமார் மூன்று

மேலும்...
கோட்டா வேண்டாம்: மஹிந்தவிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

கோட்டா வேண்டாம்: மஹிந்தவிடம் அமெரிக்கா வலியுறுத்தல் 0

🕔13.Jun 2018

கோட்டாபய ராஜபக்ஷவை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கப்படக் கூடாது என்று அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நேரடியாக தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ அவ்வாறு களமிறங்குவதை மேற்குலகம் விரும்பவில்லை என்றும் அவர் இதன் போது கூறியுள்ளார். இலங்கையில் தனது பணியை முடித்துக் கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்

மேலும்...
அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேர், கோட்டாவை சந்திக்கின்றனர்

அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேர், கோட்டாவை சந்திக்கின்றனர் 0

🕔11.Jun 2018

தேசிய அரசாங்கத்திலிருந்து விலகிய  சுதந்திரக்கட்சியின் 16 நாடாளுன்ற உறுப்பினர்களும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவின் இல்லத்தில் இந்த சந்திப்பு நாளை செவ்வாய்கிழமை இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்போது தற்கால அரசியல் சூழ்நிலை மற்றும் எதிர்கால அரசியல் குறித்து ஆராயப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும்...
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டா களமிறங்குவாரா: பதிலளித்தார் மஹிந்த

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டா களமிறங்குவாரா: பதிலளித்தார் மஹிந்த 0

🕔10.Jun 2018

கோட்டாபய ராஜபக்ஷவை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என, பொதுமக்கள் விடுக்கும் வேண்டுகோள்களை கருத்தில் எடுத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போது, அவர் இதனை கூறினார். ஜனாதிபதியாகுவதற்கு கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எவ்வளவு ஆதரவு தேவை என்பது குறித்து தனக்கு தெரியும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

மேலும்...
கோட்டா ஒரு பொய்யர்; சொத்துக்களை அம்பலப்படுத்தியது ஆங்கில ஊடகம்

கோட்டா ஒரு பொய்யர்; சொத்துக்களை அம்பலப்படுத்தியது ஆங்கில ஊடகம் 0

🕔27.May 2018

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கதிர்காமத்தில் அவரின் பெயரில் சொகுசு விடுதியொன்று இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தனது மனைவியின் உடஹமுல்லவில் அமைந்திருக்கும் வீட்டைத் தவிர்த்து தனக்கு வேறெந்த சொத்துக்களும் இலங்கையில் இல்லை என, கோட்டா தெரிவித்துவரும் நிலையிலேயே, கதிர்காமத்தில் சொகுசு விடுதி உள்ள செய்தி வெளியாகியுள்ளது. ராணுவ வீரர்களைக் கொண்டு மேற்படி சொகுசு

மேலும்...
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார்; அமெரிக்க குடியுரிமையையும் துறப்பேன்: கோட்டா தெரிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார்; அமெரிக்க குடியுரிமையையும் துறப்பேன்: கோட்டா தெரிவிப்பு 0

🕔11.Apr 2018

அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிடுவதற்கு தான் தயாராக உள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாப ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதற்­காக தனது அமெ­ரிக்க குடி­யு­ரி­மையைக் கைவி­டவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஆங்­கில ஊடகம்  ஒன்­றுக்கு வழங்கியுள்ள செவ்­வி­யொன்றிலேயே அவர் இந்த தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார். குறித்த நேர்காணலின் முக்கிய பகுதிகள் வருமாறு; கேள்வி: ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நீங்கள் தெரிவு

மேலும்...
கோட்டா – மைத்திரி தரப்பு சீனாவில் சந்திப்பு

கோட்டா – மைத்திரி தரப்பு சீனாவில் சந்திப்பு 0

🕔3.Apr 2018

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள்  செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சீனா சென்றுள்ள நிலையில், அங்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முக்கிய ஆலோசகர்கள் சிலருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நெருக்கமான ஐவர் கொண்ட குழுவொன்றையும் கோட்டாபய ராஜபக்ஷவையும் தனித்தனியாக சீன ஜனாதிபதி தனது நாட்டிற்கு அழைத்தார். அதன் பின்னர் இரண்டு தரப்பினரும்

மேலும்...
கோட்டாவை கைது செய்வதற்கான, இடைக்காலத் தடை நீடிப்பு

கோட்டாவை கைது செய்வதற்கான, இடைக்காலத் தடை நீடிப்பு 0

🕔27.Feb 2018

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ மீது பொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடவடிக்கை எடுப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை இந்தத் தடையினை நீடிக்கும் உத்தரவை வழங்கியது. கோட்டாபய ராஜபக்‌ஷவை மார்ச் 23ஆம் திகதி வரை கைது செய்வதற்கு இந்த உத்தரவின்

மேலும்...
எவன்காட் வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி, கோட்டா முன்வைத்த மனு நிராகரிப்பு

எவன்காட் வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி, கோட்டா முன்வைத்த மனு நிராகரிப்பு 0

🕔2.Feb 2018

எவன்காட் வழக்கிலிருந்து தன்னையும் மேலும் 07 பேரையும் விடுவிக்குமாறு கோரி, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ முன்வைத்திருந்த மனுவினை, கொழும்பு உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்தினை எவன்காட் நிறுவனம் செயற்படுத்துவதற்கான அனுமதியினை வழங்கியதன் மூலம், அரசாங்கத்துக்கு 11.4 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுத்தியதாக, கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், மேலும் 07 பேருக்கும்

மேலும்...
சு.கட்சியின் பிரதித் தலைவராக கோட்டாவை கொண்டுவர முயற்சி; ஜனாதிபதியின் சகோதரர் டட்லி சிறிசேன களத்தில்

சு.கட்சியின் பிரதித் தலைவராக கோட்டாவை கொண்டுவர முயற்சி; ஜனாதிபதியின் சகோதரர் டட்லி சிறிசேன களத்தில் 0

🕔15.Dec 2017

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவர் பதவிக்கு, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கொண்டு வரும் முயற்சியில், ஜனாதிபதியின் சகோதரரும் தொழிலதிபருமான டட்லி சிறிசேன ஈடுபட்டு வருவதாக, ராவய பத்திரிகை செய்தியொன்றினை வெளியிட்டுள்ளது. சுதந்திரக் கட்சியினையும் ஒன்றிணைந்த எதிரணியையும் ஐக்கியப்படுத்தி, அதன் பின்னர் சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவராக கோட்டாவை நியமிப்பதே, டட்லியின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்