Back to homepage

Tag "கொவிட்"

கொவிட் மரணம்: 10 ஆயிரத்தைக் கடந்தது

கொவிட் மரணம்: 10 ஆயிரத்தைக் கடந்தது 0

🕔5.Sep 2021

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதிப்படுத்தினார். நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 189 பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார். அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 10,140 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, இதுவரையில் கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை

மேலும்...
கொவிட் தடுப்பூசி செலுத்திய நாடுகள்: இலங்கைக்கு முதலிடம்

கொவிட் தடுப்பூசி செலுத்திய நாடுகள்: இலங்கைக்கு முதலிடம் 0

🕔4.Sep 2021

நாட்டின் மொத்த சனத்தொகை அடிப்படையில் உலகில் அதிகளவில் கொவிட் தடுப்பூசி செலுத்தியுள்ள நாடுகள் தொடர்பான கடந்த வாரத்துக்கான தரப்படுத்தலில் இலங்கை முதலிடத்தை பிடிததுள்ளது. Our World இணையத்தளத்தினால் வெளியிடப்பட்டுள்ள கடந்த வாரத்துக்கான தரவுகளின்படி, இது 13 சதவீதமாக காணப்படுகிறது. ஈக்வடோர் 12.5 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. புரூணை, நியூஸிலாந்து மற்றும் கியூபா முறையே 3,

மேலும்...
கொவிட் தொற்றுள்ளவர்கள் இந்த மருந்தைப் பயன்படுத்த வேண்டாம்

கொவிட் தொற்றுள்ளவர்கள் இந்த மருந்தைப் பயன்படுத்த வேண்டாம் 0

🕔2.Sep 2021

கொவிட் தொற்றுக்கு இலக்கானவர்கள் ‘ஐவர்மெக்டின்’ மருந்து பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என மக்களுக்கு அவசர அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடயத்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொவிட் வைரஸுக்கு ‘ஐவர்மெக்டின்’ பலனளிக்க கூடியது என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் இல்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “இதனால் அந்த மருந்து பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ள

மேலும்...
கொவிட் சடலங்களை அடக்கம் செய்ய, மேலும் மூன்று இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

கொவிட் சடலங்களை அடக்கம் செய்ய, மேலும் மூன்று இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன 0

🕔30.Aug 2021

கொவிட் சடலங்களை அடக்கம் செய்ய திருகோணமலை, புத்தளம் மற்றும் அம்பாறை மாவட்டங்களில் மேலும் மூன்று இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சின் கொவிட்-19 ஒருங்கிணைப்பாளர் மற்றும் தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார். மட்டக்களப்பிலுள்ள ஓட்டமாவாடி – மஜ்மா நகரில் கொவிட் பிரேதங்களை அடக்கம் செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த வாரம்

மேலும்...
புகைப்பவர்கள் கொவிட் காரணமாக மரணிக்கும் சாத்தியம் அதிகம்

புகைப்பவர்கள் கொவிட் காரணமாக மரணிக்கும் சாத்தியம் அதிகம் 0

🕔28.Aug 2021

புகைப்பிடிப்பவர்கள் கொவிட் காரணமாக மரணிக்க அதிகளவில் சாத்தியமுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர். புகைபிடித்தல் நுரையீரலின் செயல்பாட்டை பலவீனப்படுத்துகிறது என்று கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா கூறினார். மேலும், சிகரெட், சுருட்டு அல்லது வேறு வகையில் புகைப்பிடிப்பவர்களின் நுரையீரல் செயல்பாடு பலவீனம் அடைவதாகவும் விசேட வைத்தியர் சுட்டிக்காட்டினார். இவ்வாறானவர்களுக்கு கொவிட்

மேலும்...
றிஷாட் பதியுதீனுடைய மாமனாருக்கு கொரோனா தொற்று: பிணை கோரிய சட்டத்தரணிகள்

றிஷாட் பதியுதீனுடைய மாமனாருக்கு கொரோனா தொற்று: பிணை கோரிய சட்டத்தரணிகள் 0

🕔27.Aug 2021

றிஷாட் பதியூதீனின் மாமனாருக்கு (மனைவியின் தந்தை) கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய சந்தர்ப்பத்தில் தீ காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சிறுமி ஹிஷாலியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தற்போது இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், றிஷாட் பதியூதீனின் மனைவியின் தந்தைக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக

மேலும்...
தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களிடம், கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு குறைகிறது: ஆராய்ச்சியாளர்கள் தெரிவிப்பு

தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களிடம், கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு குறைகிறது: ஆராய்ச்சியாளர்கள் தெரிவிப்பு 0

🕔26.Aug 2021

இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களிடம் கொரோனா நோய் தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு குறைவதைக் காண்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். ‘ஃபைசர்’ தடுப்பூசியை இரு டோஸ் செலுத்திக் கொண்டவர்களிடம் தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு ஒரு மாத காலத்தில் 88 சதவீதமாக இருந்தது. இது ஐந்து முதல் ஆறு மாதங்களில் 74 சதவீதமாக குறைந்திருக்கிறது. ‘ஆஸ்ட்ராசெனீகா’ தடுப்பூசியை செலுத்திக்

மேலும்...
கொவிட் நிவாரணப் பணிக்காக சம்பளத்தை வழங்க முடியாது: ராஜாங்க அமைச்சர் பியல் தெரிவிப்பு

கொவிட் நிவாரணப் பணிக்காக சம்பளத்தை வழங்க முடியாது: ராஜாங்க அமைச்சர் பியல் தெரிவிப்பு 0

🕔24.Aug 2021

கொவிட் நிவாரப் பணிகளுக்காக தனது சம்பளத்தை வழங்க முடியாது என்று ராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார். அரச வங்கியொன்றில் பெற்றுக்கொண்ட கடனுக்காக தனது சம்பளத்தொகை அப்படியே வெட்டப்படுவதால், கொவிட் பணிக்காக தனது சம்பளத்தை வழங்க முடியாத இக்கட்டான நிலைக்கு தான் தள்ளப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்...
கொவிட் காரணமாக மரணித்தோரில் 91 வீதமானோர், எவ்வித தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளாதோர்: விசேட வைத்திய நிபுணர் சமித கினிகே

கொவிட் காரணமாக மரணித்தோரில் 91 வீதமானோர், எவ்வித தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளாதோர்: விசேட வைத்திய நிபுணர் சமித கினிகே 0

🕔22.Aug 2021

நாட்டில் கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களில் 91 வீதமானோர் எந்தவிதமான தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளாதவர்கள் என்று, பிரதான தொற்று நோய் ஆய்வகத்தின் விசேட வைத்திய நிபுணர் சமித கினிகே தெரிவித்துள்ளார். மரணித்தவர்களில் 08 வீதமானோர் தடுப்பூசியின் ஒரு ‘டோஸ்’இனை மற்றும் பெற்றுக் கொண்டவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த

மேலும்...
எதிர்வரும் 10 நாட்கள் நாடு முடக்கப்படுகிறது: அரசாங்கம் அறிவிப்பு

எதிர்வரும் 10 நாட்கள் நாடு முடக்கப்படுகிறது: அரசாங்கம் அறிவிப்பு 0

🕔20.Aug 2021

நாடு எதிர்வரும் 10 நாட்களுக்கு முடக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன் பிரகாரம் இன்றிரவு 10.00 மணி தொடக்கம் எதிர்வரும் 30ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரை நாடு முடக்கப்படும் என, அமைச்சரவை இணைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இருந்த போதிலும் இந்தக் காலப் பகுதியினுள் அத்தியவசிய சேவைகள் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கொவிட் நிலைமையைக் கட்டுப்படுத்த, தவிசாளர் அமானுல்லா தலைமையில் தீர்மானங்கள் நிறைவேற்றம்

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கொவிட் நிலைமையைக் கட்டுப்படுத்த, தவிசாளர் அமானுல்லா தலைமையில் தீர்மானங்கள் நிறைவேற்றம் 0

🕔18.Aug 2021

– முன்ஸிப் அஹமட், படங்கள்: எஸ்.எம். அறூஸ் – மைதானங்களில் விளையாடுதல், கடற்கரைகளில் பொதுமக்கள் ஒன்று கூறுதல் மற்றும் ஹோட்டல்களில் அதிகளவானோர் கூடியிருத்தல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு உடனடியாக தடை விதிக்கப்படுவதாக அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா தெரிவித்தார். தற்போது நிலவி வரும் கொவிட் நிலைமையினைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, அட்டாளைச்சேனை பிரதேசத்தில் எடுக்கப்பட வேண்டிய

மேலும்...
கொவிட் நோயாளிகளுக்கான மருந்து, 05 லட்சம் ரூபாவுக்கு விற்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிப்பு

கொவிட் நோயாளிகளுக்கான மருந்து, 05 லட்சம் ரூபாவுக்கு விற்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிப்பு 0

🕔17.Aug 2021

நாட்டில் கொவிட் நோயாளிகளுக்கு சிகிச்சையின் பொருட்டு வழங்கப்படும் ரொசிலிசுமாப் (Tocilizumab) மருந்தை இறக்குமதி செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார். நாடாளுமன்றத்தில் இன்று (17) உரையாற்றிய போது அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார். நாடாளுமன்றத்தின் முந்தைய அமர்வில், மருந்துப் பற்றாக்குறை குறித்து அவர் கவலை தெரிவித்தபோது, அவரைக் கேலி செய்ததாகவும் இதன்

மேலும்...
கொவிட் பாதிப்பை குறைத்துக் காட்டும் ‘மேஜர் ஜெனரல்’: நாடாளுமன்றில் தகவல் வெளியிட்டார் முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித

கொவிட் பாதிப்பை குறைத்துக் காட்டும் ‘மேஜர் ஜெனரல்’: நாடாளுமன்றில் தகவல் வெளியிட்டார் முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித 0

🕔17.Aug 2021

கொவிட் இறப்புகள் மற்றும் நோய்த்தொற்றுகள் குறித்து குறைந்த 400எண்ணிக்கை வெளியிடும் விடயத்துக்கு பின்னால், ராணுவ அதிகாரியொருவர் இருப்பதாக முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (17) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த விடயத்தில் ‘மேஜர் ஜெனரல்’ ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். இந்த மேஜர் ஜெனரலே, கோவிட் வைரஸால் இறந்த அல்லது பாதிக்கப்பட்டவர்களின்

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்: கொரோனா தொற்றுக்கு ஆளானார்

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்: கொரோனா தொற்றுக்கு ஆளானார் 0

🕔17.Aug 2021

அகில இலங்கை தமிழ் மக்கள் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொவிட் தொற்றுக்கு ஆளாகியுள்ளார். ஏற்கனவே ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடந்த சில வாரங்களில் கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர கடந்த 13ஆம் திகதி கொவிட் தொற்றுக்கு ஆளாகியிருந்தமை உறுதி செய்யயப்பட்டிருந்தது. இதேவேளை, முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர

மேலும்...
திருமணம் உள்ளிட்ட  நிகழ்வுகளுக்கு தடை

திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு தடை 0

🕔15.Aug 2021

வீடுகளிலோ அல்லது மண்டபங்களிலோ திருமண நிகழ்வுகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக ராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாளை மறுதினம் (17 ஆம் திகதி) நள்ளிரவு தொடக்கம், மீள அறிவிக்கும் வரையில் இந்தத் தடை அமுலில் இருக்கும். அத்துடன் நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களை ஹோட்டல்களிலோ அல்லது மண்டபங்களிலோ நடத்த இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்