Back to homepage

Tag "கொரோனா வைரஸ்"

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சந்தைகளை 03 நாட்களுக்கு மூட தீர்மானம்: மேயர் றகீப் அறிவிப்பு

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சந்தைகளை 03 நாட்களுக்கு மூட தீர்மானம்: மேயர் றகீப் அறிவிப்பு 0

🕔18.Mar 2020

– அஸ்லம் எஸ். மௌலானா – கல்முனை மாநகர சபை ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் இயங்கும் அனைத்து பொதுச் சந்தைகளையும் நாளை வியாழக்கிழமை தொடக்கம் 03 நாட்களுக்கு தாற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இக்காலப்பகுதியில் சன நெரிசல் ஏற்படாதவாறு விசாலமான பொது வெளிகளில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வர்த்தகர்களும் பொது மக்களும் அறிவுறுத்தப்படுகின்றனர். கல்முனை பிரதேச செயலகத்தில் இன்று

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பிரதேச சபை அலட்சியமாகச் செயற்படுவதாக மக்கள் விசனம்

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பிரதேச சபை அலட்சியமாகச் செயற்படுவதாக மக்கள் விசனம் 0

🕔18.Mar 2020

– அஹமட் – கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான முன் ஆயத்த நடவடிக்கைள் எவற்றிலும் இதுவரையில் அட்டாளைச்சேனை பிரதேச சபை ஈடுபடவில்லை என, மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அதிகாரத்துக்குட்பட்ட பகுதிகளிலுள்ள முடி திருத்தும் கடைகள் (Saloon)கள் தொடர்ந்தும் இயங்கி வருகின்ற போதிலும், அவற்றினை மூடுவதற்கான நடவடிக்கைகளை இதுவரை பிரதேச சபையினர் எடுக்கவில்லை

மேலும்...
இவரைக் கண்டால் அறிவியுங்கள்: பிரதி பொலிஸ் மா அதிபர் கோரிக்கை

இவரைக் கண்டால் அறிவியுங்கள்: பிரதி பொலிஸ் மா அதிபர் கோரிக்கை 0

🕔17.Mar 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் வெளிநாட்டவர் ஒருவரைக் கண்டுபிடிக்க, பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர். மேற்படி நபரின் படத்தை பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இன்று செவ்வாய்கிழமை செய்தியாளர் சந்திப்பின்போது காண்பித்து இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். இவருடன் இருந்ததாக கூறப்படும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுடன் கண்டுபிடிக்கப்பட்டார். இந்தநிலையில்

மேலும்...
கொரோனா: மறைந்திருக்கும் ஆட்களை பொதுமக்களின் உதவியுடன் தேடுவதற்கு அரசாங்கம் முடிவு

கொரோனா: மறைந்திருக்கும் ஆட்களை பொதுமக்களின் உதவியுடன் தேடுவதற்கு அரசாங்கம் முடிவு 0

🕔17.Mar 2020

கொரோனா ஆபத்து அதிகம் கொண்ட நாடுகளிலிருந்து இலங்கைக்கு வந்து, தனிமைப்படுத்தப்படாது தம்மை மறைத்திருக்கும் ஆட்களை, பொது மக்களின் விழிப்புணர்வின் ஊடாக, பொது மக்களின் உதவியுடன் தேடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கொரோனா நோய்க்கிருமியின் பரவலை எதிர்த்துப் போராடுவதற்காக அரசாங்கத்தினால் இன்று செவ்வாய்கிழமை இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. அங்கு மேற்கொள்ளப்பட்ட ஏனைய தீர்மானங்கள்

மேலும்...
கொழும்பு, புத்தளம் மாவட்டங்களிலும் தென் மாகாணத்திலும் கொரோனா அபாயம் அதிகமுள்ளதாக எச்சரிக்கை

கொழும்பு, புத்தளம் மாவட்டங்களிலும் தென் மாகாணத்திலும் கொரோனா அபாயம் அதிகமுள்ளதாக எச்சரிக்கை 0

🕔17.Mar 2020

கொரோனா தொற்று காரணமாக நாட்டில் இன்று செவ்வாய்கிழமை தொடக்கம் எதிர்வரும் மூன்று தினங்களுக்கு 88 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சைகளை வழங்குவதற்காக பொலன்னறுவையில் விசேட பிரிவொன்றை ஸ்தாபித்துள்ளதாக இராணுவ தளபதி லெப்டின் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் சேவைகள் இன்று (17) முதல் எதிர்வரும் 20ஆம் திகதி

மேலும்...
சகல பரீட்சைகளும் பிற்போடப்பட்டன: கொரோனாவினால் 21 பேர் பாதிப்பு

சகல பரீட்சைகளும் பிற்போடப்பட்டன: கொரோனாவினால் 21 பேர் பாதிப்பு 0

🕔16.Mar 2020

மார்ச் மாதம் நடைபெறவிருந்த சகல பரீட்சைகளும் திகதி அறிவிப்பின்றி பிற்போடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதோடு திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. அத்துடன் பொது விழாக்கள் மற்றும் ஒன்றுகூடல்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான பரீட்சைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மேலும்...
கொரோனா: இலங்கையில் 18 பேர் பாதிப்பு: ஒரே நாளில் 07 பேர் அடையாளம் காணப்பட்டனர்

கொரோனா: இலங்கையில் 18 பேர் பாதிப்பு: ஒரே நாளில் 07 பேர் அடையாளம் காணப்பட்டனர் 0

🕔16.Mar 2020

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை நேற்று ஞாயிற்றுக்கிழமை வரை 18 ஆக உயர்ந்துள்ளது. சனிக்கிழிழமை வரை 10 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அந்த தொகையானது நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவாகும் போது 18 வரை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜயசிங்க தெரிவிக்கின்றார். கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் நேற்று காலை

மேலும்...
எதிர்வரும் திங்கட்கிழமையை, பொது விடுமுறை நாளாக அரசாங்கம் அறிவிப்பு

எதிர்வரும் திங்கட்கிழமையை, பொது விடுமுறை நாளாக அரசாங்கம் அறிவிப்பு 0

🕔14.Mar 2020

நாளை மறுதினம் திங்கட்கிழமையை, பொது விடுமுறை நாளாக அரசாங்கம் அறிவித்துள்ளது. கொரோனோ வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதிலிருந்து பாதுகாப்பு பெறும் நடவடிக்கையாக இந்த விடுமுறை வழங்கப்படுகிறது. நாட்டில் 10 பேர் இதுவரையில் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகி இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தொகை மேலும் அதிகரிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, பாடசாலைகளுக்கு

மேலும்...
கொரோனா: பாதிக்கப்பட்ட 08ஆவது இலங்கையர் அடையாளம் காணப்பட்டார்

கொரோனா: பாதிக்கப்பட்ட 08ஆவது இலங்கையர் அடையாளம் காணப்பட்டார் 0

🕔14.Mar 2020

இலங்கையைச் சேர்ந்த 8 வது கொரோனா வைரஸ் நோயாளி இனங்காணப்பட்டுள்ளார். கந்தகாடு கண்காணிப்பு மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர்களில் ஒருவக்கே, இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த நபர் பொலன்னறுவை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இவர் இத்தாலியில் இருந்து இலங்கை வந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இன்றைய தினம் மூன்று பேருக்கு இதுவரை

மேலும்...
கனடா பிரதமரின் மனைவி கொரோனா தொற்றினால் பாதிப்பு

கனடா பிரதமரின் மனைவி கொரோனா தொற்றினால் பாதிப்பு 0

🕔13.Mar 2020

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஏ.என்.ஐ செய்திச் சேவை தெரிவித்துள்ளது. சமீபத்தில் பிரிட்டன் சென்று திரும்பிய ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோஃபிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது

மேலும்...
கொரோனாவை கட்டுப்படுத்தலாம், சில நாடுகள் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளாமை கவலையளிக்கிறது: உலக சுகாதார அமைப்பு

கொரோனாவை கட்டுப்படுத்தலாம், சில நாடுகள் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளாமை கவலையளிக்கிறது: உலக சுகாதார அமைப்பு 0

🕔13.Mar 2020

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த முடியும் என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இதன்படி, அனைத்து நாடுகளும் உரிய தடுப்பு முறைகளை கையாண்டால், கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தலாம் என்றும், அந்த அமைப்பின் தலைவர் டெட்டிரோஸ் அதானோம் கெப்ரோயஸ் தெரிவித்துள்ளார். உலக நாடுகளின் தூதர்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் அவர் இதனைக்கு குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த அறிக்கையில்;

மேலும்...
மட்டக்களப்பு கெம்பஸ்ஸில் கொரோனா பரிசோதனை முகாம்; சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் செயற்பாடா: ஆசாத் சாலி கேள்வி

மட்டக்களப்பு கெம்பஸ்ஸில் கொரோனா பரிசோதனை முகாம்; சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் செயற்பாடா: ஆசாத் சாலி கேள்வி 0

🕔10.Mar 2020

கட்டுநாயாக்க விமான நிலையத்திலிருந்து எத்தனையோ மைல் தொலைவிலுள்ள மட்டக்களப்பு கெம்பஸில், வெளிநாட்டிலிருந்து வருகை தரும் பயணிகளை கொண்டுசென்று, கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தும் நிலையமாக, அந்த கெம்பசை மாற்றியமை, சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடா? என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல்மாகாண முன்னாள் ஆளுநருமான அஷாத் சாலி கேள்வியெழுப்பினார். நாவலையில், இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத்

மேலும்...
கொரோனா அச்சம்: மட்டக்களப்பு  பல்கலைக்கழகத்தில் தடுத்து வைக்க,  181 பேர் அனுப்பப்படவுள்ளனர்

கொரோனா அச்சம்: மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் தடுத்து வைக்க, 181 பேர் அனுப்பப்படவுள்ளனர் 0

🕔10.Mar 2020

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தில் தென்கொரியா மற்றும் இத்தாலியில் இருந்து வருகை தந்த, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானர்வர்கள் எனச் சந்தேகிக்கப்படுவோர் அனுப்பி வைக்கப்படவுள்ளனர். இவர்கள் இன்று திங்கட்கிழமை காலை  நாட்டை வந்தடைந்துள்ளனர்.  இவ்வாறு வருகை தந்தவர்களில் 179 இலங்கையர்கள் மற்றும் 2 தென்கொரிய நாட்டவர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிகாலை 3.33 மணியளவில் குறித்த பயணிகள் விமான நிலையத்தை

மேலும்...
கைத் தொலைபேசி மூலம், கொரோனா வைரஸ் தொற்றும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை

கைத் தொலைபேசி மூலம், கொரோனா வைரஸ் தொற்றும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை 0

🕔6.Mar 2020

கொரோனா வைரஸ் – கைத் தொலைபேசியின் திரைகளில் உயிர்வாழ்ந்து தொற்றும் ஆபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். தொற்றுக்குள்ளானவர்கள் தும்மும் போதும் இருமும் போதும் வெளியேறும் வைரஸ், கைத் தொலைபேசியின் திரையில் ஏழு நாட்கள் உயிர் வாழும் தன்மை கொண்டது என்று, லண்டனிலுள்ள பல்கலைக்கழகம் ஒன்று நடத்திய ஆய்வில் மூலம் கண்டறியப்பட்டள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று தகவல்

மேலும்...
சௌதி அரேபியருக்கு கொரோனா தொற்று: ஈரானிலிருந்து பஹ்ரைன் வழியாக வந்ததாக தெரிவிப்பு

சௌதி அரேபியருக்கு கொரோனா தொற்று: ஈரானிலிருந்து பஹ்ரைன் வழியாக வந்ததாக தெரிவிப்பு 0

🕔3.Mar 2020

சௌதி அரேபியாவில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதை அந்த நாடு உறுதி செய்துள்ளது. ஈரானிலிருந்து பஹ்ரைன் வழியாக சௌதிக்குள் நுழைந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. சௌதி அரேபியாவைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை இதுவே முதல்முறை. அந்நாடு முன்பே கொரொனா தம் நாட்டிற்குள் நுழையாமல் இருக்கப் பல முயற்சிகளை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்