Back to homepage

Tag "காலி"

காலி, மாத்தறை மாவட்டங்கள் இம்முறை தலா ஒரு நாடாளுமன்ற ஆசனத்தை இழக்கின்றன: தேசப்பிரிய தெரிவிப்பு

காலி, மாத்தறை மாவட்டங்கள் இம்முறை தலா ஒரு நாடாளுமன்ற ஆசனத்தை இழக்கின்றன: தேசப்பிரிய தெரிவிப்பு

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்குரிய இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆசனங்கள் இம்முறை மொனராகல மற்றும் பதுளை மாவட்டங்களுக்கு வழங்கப்படுவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணைக்குழுவில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் கூறினார். இதன்போது, பொதுத்தேர்தலுக்கான பணத்தை பெறுவதில் சிக்கல் நிலவுவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின்

மேலும்...
சஹ்ரானுடன் தேரீர் அருந்தியோரும் விசாரிக்கப்பட்டுள்ளனர்: பிரதமர் தகவல்

சஹ்ரானுடன் தேரீர் அருந்தியோரும் விசாரிக்கப்பட்டுள்ளனர்: பிரதமர் தகவல்

பயங்கரவாதத் தாக்குதல் நடத்திய தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹரான் ஹாஷிமுடைய சகாக்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இதனைக் கூறினார். பொலிஸார் மற்றும் புலனாய்வுத்துறையினரின் அறிக்கைகளின் பிரகாரம், சஹரானின் சகாக்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் பலர்

மேலும்...
தலை கீழாகப் புரண்டு முச்சக்கர வண்டி விபத்து; சாரதி, மனைவி மற்றும் இரு பிள்ளைகள் காயம்

தலை கீழாகப் புரண்டு முச்சக்கர வண்டி விபத்து; சாரதி, மனைவி மற்றும் இரு பிள்ளைகள் காயம்

– க. கிஷாந்தன் – நுவரெலியாவிலிருந்து காலி பகுதியில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு  சென்ற முச்சக்கரவண்டி ஒன்று இன்று திங்கட்கிழமை விபத்துக்குள்ளாகியதாக திம்புள்ள பத்தனை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் கொட்டகலை பொரஸ்கிறிக் பகுதியில் குறித்த முச்சக்கரவண்டி மண்மேட்டில் மோதுண்டு பிரதான வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாது. சாரதிக்கு தூக்கம் ஏற்பட்டதன்

மேலும்...
ரத்கமவில் கடத்தப்பட்ட வர்த்தகர்கள், தீ வைத்து எரிக்கப்பட்டுள்னர்: பொலிஸ் பேச்சாளர்

ரத்கமவில் கடத்தப்பட்ட வர்த்தகர்கள், தீ வைத்து எரிக்கப்பட்டுள்னர்: பொலிஸ் பேச்சாளர்

காலி – ரத்கமவில் கடத்தப்பட்ட வர்த்தகர்கள் இருவரும் கோனமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து கொலை செய்யப்பட்டு, மெதகொடை பிரதேசத்தில் தீ வைக்கப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். எனினும் சம்பவத்துக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட

மேலும்...
திருகோணமலையிலிருந்து, சர்வமதத் தலைவர்கள் காலிக்கு விஜயம்

திருகோணமலையிலிருந்து, சர்வமதத் தலைவர்கள் காலிக்கு விஜயம்

– ஹஸ்பர் ஏ ஹலீம் – சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் திருகோணணலை மாவட்டத்தைச் சேர்ந்த சர்வ மதத் தலைவர்கள், காலி மாவட்டத்துக்கு இன்று செவ்வாய்கிழமை பயணமொன்றினை மேற்கொண்டுள்ளனர். திருகோணமலை மாவட்ட எகட் கரித்தாஸ் நிறுவனம், இதற்கான ஏற்பாட்டினை செய்துள்ளது. சமாதானம், நல்லிணக்கம், புரிந்துனர்வு மற்றும் பரஸ்பரம் உள்ளிட்ட விடயங்களை மூவின சமூகத்துக்கும் இடையில் கொண்டு

மேலும்...
இருதய நோயால் நாளொன்றுக்கு இலங்கையில் 150 பேர் வரை மரணம்

இருதய நோயால் நாளொன்றுக்கு இலங்கையில் 150 பேர் வரை மரணம்

இதய நோய் காரணமாக நாளொன்றுக்கு 120 இற்கும் 150 இற்கும் இடையிலானோர் இலங்கையில் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் இருதய நோய்ப் பிரிவுக்குப் பொறுப்பான விசேட வைத்திய நிபுணர் நாமல் கமகே இந்த தகவலைக் கூறினார். இருதய நோய் சம்பந்தமாக மூன்றாம் நிலை சிகிச்சை செய்யும் போது, அதிக செலவு ஏற்படுவதே இவ்வாறான

மேலும்...
ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து; 05 கோடி ரூபாய் நஷ்டம்

ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து; 05 கோடி ரூபாய் நஷ்டம்

ஆடைத் தொழிற்சாலையொன்றின் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீயினால், அங்கு வைக்கப்பட்டிருந்த 05 கோடி ரூபாய் பெறுமதியான ஆடைகள் எரிந்து நாசமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலி – தங்கெதர பிரதேசத்தில் இன்று செவ்வாய்கிழமை காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. புதுவருட காலத்தை முன்னிட்டு விற்பனை செய்வதற்காக குறித்த ஆடைகள் களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த நிலையில், காலி மாநகரசபை

மேலும்...
முஸ்லிம்களுக்கு சொந்தமான வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்; காலியில் சம்பவம்

முஸ்லிம்களுக்கு சொந்தமான வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்; காலியில் சம்பவம்

காலி நகருக்கு அண்மையில் அமைந்துள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான வீடொன்றின் மீது, இன்று செவ்வாய்கிழமை அதிகாலை வேளையில், பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. காலி – தூவ பிரதேசத்தில் அமைந்துள்ள சமகிவத்தை குடியிடுப்பு பகுதியிலுள்ள வீடொன்றின் மீதே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் காலி – கிந்தொட்ட பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு

மேலும்...
காலி எரியும் போது களம் புகுந்த அமைச்சர் றிசாட்; பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று பாதுகாப்பை உறுதிப்படுத்தினார்

காலி எரியும் போது களம் புகுந்த அமைச்சர் றிசாட்; பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று பாதுகாப்பை உறுதிப்படுத்தினார்

காலி ஜிந்தோட்டை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் கட்டுக்கடங்காது போனமையினை அடுத்து, மன்னாரிலிருந்து கொழும்பு திரும்பியிருந்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன், உடனடியாக அந்தப் பிரதேசத்துக்கு விரைந்தார். அமைச்சர் கொழும்பிலிருந்து காலிக்குச் சென்ற நள்ளிரவு வேளை பாதுகாப்பு காரணங்களைக் காட்டி கொழும்பு – காலி வீதியூடாக அந்தப் பிரதேசத்துக்குச் பொலிஸார் அனுமதியளிக்க மறுத்தனர். எனினும்,

மேலும்...
ஜின்தோட்டயில் இன்று காலை வரை ஊரடங்குச் சட்டம்; நிலமை கட்டுப்பாட்டுக்குள்

ஜின்தோட்டயில் இன்று காலை வரை ஊரடங்குச் சட்டம்; நிலமை கட்டுப்பாட்டுக்குள்

காலி – ஜின்தோட்ட பகுதியில் இடம்பெற்ற வன்முறைகளையடுத்து அங்கு நேற்றிரவு முதல் இன்று சனிக்கிழமை காலை 9.00 மணிவரை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வன்முறைகளுடன் தொடர்புடைய 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அங்கு நூற்றுக் கணக்கில் பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு கடமையிலிருந்த அதிரடிப்படையினர் விலக்கிக் கொள்ளப்பட்டமையினைத்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்