Back to homepage

Tag "கடற்படை"

சிலாவத்துறை மக்கள் குடியிருப்பிலிருந்து, கடற்படையினர் வெளியேற வேண்டும்: முசலி பிரதேச சபையில் தீர்மானம்

சிலாவத்துறை மக்கள் குடியிருப்பிலிருந்து, கடற்படையினர் வெளியேற வேண்டும்: முசலி பிரதேச சபையில் தீர்மானம் 0

🕔14.Mar 2019

– எ.எம்.றிசாத்- சிலாவத்துறை மண் மீட்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சிலாவத்துறையின் மக்கள் குடியிருப்பிலிருந்து கடற்படையினர் வெளியேற வேண்டுமெனக் கோரி, முசலி  பிரதேச சபையின் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற 13 ஆவது அமர்வில் தீர்மானமொன்று  நிறைவேற்றப்பட்டது. அத்துடன் கடற்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள முசலி பிரதேச சபையின் உப காரியாலயத்தையும் விடுவிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த

மேலும்...
இந்தியாவுக்கு கடத்த முயற்சித்த 12 கிலோ தங்கம் சிக்கியது; கடத்தல்காரர்களும் கைது

இந்தியாவுக்கு கடத்த முயற்சித்த 12 கிலோ தங்கம் சிக்கியது; கடத்தல்காரர்களும் கைது 0

🕔29.Jan 2018

இந்தியாவுக்கு கடல் வழியாக 12 கிலோகிராம் தங்கத்தை கடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி கடற்படையினரால் முறியடிக்கப்பட்டது. உறுமலை கடற்பகுதியில், படகு ஒன்றில் மேற்படி தங்கத்தினை கடத்த முற்பட்ட இலங்கையர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதோடு, கடத்த முயற்சித்த தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் 100 கிராம் எடையுடைய 120 கட்டிகள், மேற்படி படகிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. இதன் பெறுமதி 07 கோடி

மேலும்...
கடலில் கடத்திய 05 கோடி ரூபாய் பெறுமதியான தங்கக் கட்டிகள்; கடற்படையினரிடம் சிக்கின

கடலில் கடத்திய 05 கோடி ரூபாய் பெறுமதியான தங்கக் கட்டிகள்; கடற்படையினரிடம் சிக்கின 0

🕔17.Jan 2018

– பாறுக் ஷிஹான் – தங்கக் கட்டிகளை சிறிய படகு ஒன்றில் கடத்துவதற்கு முயற்சித்தவர்களை, நேற்றிரவு காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து, கடற்படையினர் கைது செய்துள்ளனர். படகிலிருந்த மீன் வலைகளில் சூட்சுமமாக மறைக்கப்பட்ட நிலையில் 70 தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டன. இலங்கையைச் சேர்ந்த ஆண்கள் இருவர் மேற்படி படகில் இருந்ததாகவும், ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கடற்படையினர், அந்தப்

மேலும்...
பெண்ணாக மாறியதால், பறிபோனது தொழில்; கடற்படை வீரருக்கு நேர்ந்த பரிதாபம்

பெண்ணாக மாறியதால், பறிபோனது தொழில்; கடற்படை வீரருக்கு நேர்ந்த பரிதாபம் 0

🕔11.Oct 2017

ஆணாக இருந்து பெண்ணாக மாறிய, கடற்படை பொறியியல் பிரிவைச் சேர்ந்த கடற்படை வீரர், அவருடைய பணியிலிருந்து நேற்று முன்தினம் திங்கட்கிழமை நீக்கப்பட்டுள்ள சம்பவம் இந்தியா – விசாகப்பட்டிணத்தில் இடம்பெற்றுள்ளது. ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த மணீஷ் குமார் கிரி என்பவரே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்திய கடற்படையின் விசாகப்பட்டினம் தளத்திலுள்ள பொறியியல் பிரிவில், மேற்படி

மேலும்...
நீர்கொழும்பு துப்பாக்கிச் சண்டை: கைதானவர்களில் ஒருவர் கடற்படையிலிருந்து விலகியவர்

நீர்கொழும்பு துப்பாக்கிச் சண்டை: கைதானவர்களில் ஒருவர் கடற்படையிலிருந்து விலகியவர் 0

🕔13.Aug 2017

நீர்கொழும்பு – குரண பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கடற்படையிலிருந்து விலகியவர் என நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசேட அதிரடி படையினருக்கும், வேனில் பயணித்த பாதாள உலகக் கோஸ்டி என சந்தேகிக்கப்படும் நபர்களுக்குமிடையில் நேற்று சனிக்கிழமை துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதன்போது, காயமடைந்த இரு சந்தேக நபர்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும்...
கடற்படையின் முன்னாள் பேச்சாளருக்கு விளக்க மறியல்

கடற்படையின் முன்னாள் பேச்சாளருக்கு விளக்க மறியல் 0

🕔14.Jul 2017

கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பி. தஸநாயகவை, எதிர்வரும் 19ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டே நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. கொழும்பிலும், அதன் சுற்றுப் பகுதியிலுமுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் 11 பேரை கடத்தி காணாமல் போகச் செய்தமை தொடர்பான குற்றச்சாட்டில், கடற்படையின் முன்னாள் பேச்சாளரை குற்றப் புலனாய்வு பிரிவினர்

மேலும்...
கடற்படையின் முன்னாள் பேச்சாளர் தஸநாயக கைது

கடற்படையின் முன்னாள் பேச்சாளர் தஸநாயக கைது 0

🕔12.Jul 2017

கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கொமடோர் டி.கே.பி. தஸநாயக இன்று புதன்கிழமை மாலை கைது செய்யப்பட்டார். வெலிசறையில் வைத்து, இவரை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 2008 – 2009 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 11 இளைஞர்கள் காணாமல் செய்யப்பட்டமைக்கு உடந்தையாகவும், உதவியாகவும் இருந்தார் எனும் குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டார்.

மேலும்...
போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தரை மோதிய, லெப்டினன்ட் கொமாண்டர் கைது

போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தரை மோதிய, லெப்டினன்ட் கொமாண்டர் கைது 0

🕔25.Jan 2017

கடற்படையின் லெப்டினன்ட் கொமாண்டர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை, குறித்த  லெப்டினன்ட் கொமாண்டர் செலுத்திய வாகனம் மோதியமையினை அடுத்தே, அவர் கைது செய்யப்பட்டார் எனத் தெரிவிக்கக்படுகிறது. குறித்த சம்பவம், பொலநறுவை – தம்புள்ள வீதியில் நேற்று செவ்வாய்கிழமை இரவு இடம்பெற்றது. பாதிப்புக்குள்ளான பொலிஸ் உத்தியோகத்தர் தம்புள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும்...
முச்சக்கர வண்டி, கடற்படை பஸ் மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்

முச்சக்கர வண்டி, கடற்படை பஸ் மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம் 0

🕔9.Sep 2016

– க. கிஷாந்தன் – முச்சக்கர வண்டியொன்றும் கடற்படையினருக்கு சொந்தமான பஸ் வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் படுகாயமடைந்த நிலையில் வெலிமடை மற்றும் தியத்தலாவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெலிமடை – பண்டாரவளை பிரதான வீதியில் யல்பத்வெல எனுமிடத்தில் இன்று வெள்ளிக்கிழமை இந்த விபத்து நிகழ்ந்தது.

மேலும்...
சீரற்ற காலநிலையால் ஏற்படும் அனர்த்தம் குறித்து அறிவிக்கவும்: பாதுகாப்பு அமைச்சு

சீரற்ற காலநிலையால் ஏற்படும் அனர்த்தம் குறித்து அறிவிக்கவும்: பாதுகாப்பு அமைச்சு 0

🕔15.May 2016

சீரற்ற வானிலையால் ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. 0112434251 எனும் இலக்கத்தினூடாக இலங்கை ராணுவத்தினருக்கு, தகவல் வழங்க முடியும். அனர்த்தங்களை கட்டுப்படுத்துவதற்காக தகவல்களை கோருவதாக பாதுகாப்பு  அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, அனர்த்தம் ஏற்படும் போது 0112445368 என்ற இலக்கத்தினூடாக இலங்கை கடற்படையினருக்கும், 0112343970 என்ற இலக்கத்தினூடாக விமானப் படையினருக்கும் தகவல்களை வழங்க முடியும்

மேலும்...
கடலில் சிக்கிய ஹெரோயின் கப்பல்; வெளிநாட்டவர்களும் கைது

கடலில் சிக்கிய ஹெரோயின் கப்பல்; வெளிநாட்டவர்களும் கைது 0

🕔2.Apr 2016

இலங்கையின் தெற்குக் கடற்பகுதியில்பயணித்த கப்பலொன்றிலிருந்து 101 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். சந்தேகத்திற்கிடமான கப்பலொன்றை நேற்று வெள்ளிக்கிழமை சோதனைக்குட்படுத்திய போதே இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டன. இதன்போது, கப்பலில் இருந்த 10 ஈரானியர்கள், ஒரு பாகிஸ்தானியர் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கடற்படை ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களும் கைப்பற்றப்பட்ட ஹெரோயினும் பொலிஸ்

மேலும்...
கடற்படையிலிருந்து யோசித ராஜபக்ஷ இடைநிறுத்தம்

கடற்படையிலிருந்து யோசித ராஜபக்ஷ இடைநிறுத்தம் 0

🕔29.Feb 2016

லெப்டினன்ட் யோசித ராஜபக்ஷ – கடற்படை சேவையிலிருந்து நேற்றைய தினம் 28 ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுக்கிணங்க  இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது. பொலிஸ் நிதி மோசடிப் புலனாய்வுப் பிரிவின் வேண்டுகோளுக்கு இணங்கவே, பாதுகாப்பு அமைச்சு இந்த உத்தரவினை விடுத்துள்ளது. கடற்படை ஊடகப் பேச்சாளர் அக்ரம் அலவி

மேலும்...
ராஜபக்ஷக்களின் அசிங்கம்: அம்பலத்துக்கு வரும் சீ.எஸ்.என். மோசடி

ராஜபக்ஷக்களின் அசிங்கம்: அம்பலத்துக்கு வரும் சீ.எஸ்.என். மோசடி 0

🕔26.Feb 2016

சீ.எஸ்.என். தொலைக்காட்சியின் ஒளிப்பரப்புகளுக்காக, ராஜபக்ஷவினரின் அழுத்தங்களின் பேரில், அரச வளங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது. அந்தவகையில், கடற்படை, தேசிய ரூபவாஹினி, சுயாதீன தொலைக்காட்சி ஆகியவற்றின் வளங்களைப் பயன்படுத்தி ஒளிப்பரப்பு கோபுரங்கள் அமைப்பது மற்றும் ட்ரான்ஸ்மீட்டர்களை பொருத்துவது உட்பட இலத்திரனியல் உபகரணங்களை பொருத்தும் கட்டடங்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சீ.எஸ்.என். ஒளிபரப்புக்காக பிதுருதலாகல மலையில் இருந்து ஒளிப்பரப்புகளுக்காக ஆரம்பத்தில் கடற்படையின்

மேலும்...
யோசிதவுக்கு ஆதரவு தெரிவித்து கைப்பட்டி அணிந்த, கடற்படை ரக்பி வீரர்கள் தொடர்பில் விசாரணை

யோசிதவுக்கு ஆதரவு தெரிவித்து கைப்பட்டி அணிந்த, கடற்படை ரக்பி வீரர்கள் தொடர்பில் விசாரணை 0

🕔15.Feb 2016

யோசித ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான கைப்பட்டிகளைஅணிந்து கொண்டு விளையாடிய – கடற்படை விளையாட்டுக் கழகத்தின் ரக்பி அணி வீரர்கள் நால்வர் தொடர்பில், கடற்படையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேற்படி வீரர்கள் தமது கைகளில் ‘YO07’ என்று எழுதப்பட்டிருந்த கைப்பட்டிகளை அணிந்திருந்தனர். இது அவர்களின் முன்னாள் அணித் தலைவர் யோசித ராஜபக்ஷவுக்கு ஆதரவினைத் தெரிவிக்கும் வகையிலான ஒரு செயற்பாடாக

மேலும்...
யோசித ராஜபக்ஷ, நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினரால் விசாரணை

யோசித ராஜபக்ஷ, நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினரால் விசாரணை 0

🕔30.Jan 2016

மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வர் யோசித ராஜபக்ஷ, நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்  இன்று சனிக்கிழமை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடற்படை தலைமையகத்தில் சற்று முன்னர் இந்த விசாரணை இடம்பெற்றதாக அறிய முடிகிறது. கால்டன் ஸ்போர்ட்ஸ் நெற்வேர்க் எனப்படும் சி.எஸ்.என். ஊடக நிறுவனம் மேற்கொண்டதாகக் கூறப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது. யோசித ராஜபக்ஷ –

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்