மு.கா.வில் இணைந்தார் உதுமாலெப்பை; அடுத்தது என்ன? கசப்பாக மாறுமா களநிலைவரம்: கடந்த காலத்தை முன்னிறுத்திய அலசல்
– மரைக்கார் – கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை முஸ்லிம் காங்கிரஸில் நேற்று புதன்கிழமை அதிகாரபூர்வமாக இணைந்து விட்டார். அவருடன் சட்டத்தரணி எம்.எம். பஹீஜ் உள்ளிட்ட தேசிய காங்கிரஸில் இருந்து விலகிய சிலரும் மு.காங்கிரஸில் சேர்ந்துள்ளனர். “இனி, அடுத்து என்ன” என்பதுதான் அநேகரின் கேள்வியாக உள்ளது. அநேகமாக ஒவ்வொரு பிரதேசத்திலும் முஸ்லிம் காங்கிரஸ்