உள்ளுராட்சி சபை கிடைக்கும் வரை, சகல தேர்தல்களிலும் சுயேட்சையில் போட்டி; சாய்ந்தமருது பிரகடனத்தில் தீர்மானம் 0
– எம்.வை. அமீர் – சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபை அரச வர்த்தமானியில் உத்தியோகபூர்வமாக பிரசுரிக்கப்படும் வரை, சகல தேர்தல்களிலும் சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்மாப் பள்ளிவாசல்கள் பரிபாலனசபையின் நெறிப்படுத்தலின் கீழ், கட்சி சாராத சுயேட்சைக் குழுவை தேர்தலுக்கு முன்னிறுத்தும் தீர்மானமொன்று இன்று புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது. சாய்ந்தமருது உள்ளுராட்சிசபை கோரிக்கையை முன்வைத்து, மூன்று நாள் கடையடைப்பு மற்றும் மறியல்