Back to homepage

Tag "ஈஸ்டர் தின தாக்குதல்"

ஈஸ்டர் தின தாக்குதல்: புலஸ்தினி தப்புவதற்கு உதவியதாக கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி அபூபக்கர் பிணையில் விடுவிப்பு

ஈஸ்டர் தின தாக்குதல்: புலஸ்தினி தப்புவதற்கு உதவியதாக கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி அபூபக்கர் பிணையில் விடுவிப்பு 0

🕔21.Mar 2023

ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதலில் ஒரு முக்கிய சூத்திரதாரியாக சந்தேகிக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன் (ஸாரா ஜஸ்மின்) என்பவர் இந்தியாவுக்குத் தப்பிச் செல்லும் பொருட்டு – தனது வாகனத்தில் ஏற்றிச் சென்றார் எனும் குற்றசாட்டில் கைது செய்யப்பட்டு மூன்று வருடங்களாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி நாகூர்த்தம்பி அபூபக்கர் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டார். மட்டக்களப்பு

மேலும்...
சஹ்ரான் மனைவி ஹாதியாவுக்கு பிணை; வெளிநாடு செல்ல தடை, மாதாந்தம் கையொப்பமிடமிட வேண்டும்: நிபந்தனைகள் விதித்து உத்தரவிட்டது நீதிமன்றம்

சஹ்ரான் மனைவி ஹாதியாவுக்கு பிணை; வெளிநாடு செல்ல தடை, மாதாந்தம் கையொப்பமிடமிட வேண்டும்: நிபந்தனைகள் விதித்து உத்தரவிட்டது நீதிமன்றம் 0

🕔16.Mar 2023

கிறிஸ்தவர்களை இலங்கு வைத்து 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி எனக் கூறப்படும் சஹ்ரான் ஹாசிமுடைய மனைவி பாத்திமா ஹாதியா, நான்கு ஆண்டுகளின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இவரை, கல்முனை மேல் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை (15) பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டது.

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல் விவகாரம்: முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் மனு நிராகரிப்பு

ஈஸ்டர் தின தாக்குதல் விவகாரம்: முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் மனு நிராகரிப்பு 0

🕔1.Mar 2023

ஈஸ்டர் தின தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்குமாறு தமக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் நிராகரித்து, அவற்றிலிருந்து தன்னை விடுவிக்குமாறு உத்தரவிடக் கோரி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ மொராயிஸ் மற்றும் பிராங்க் குணவர்தன

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான, விசாரணைகளுக்கு உதவுங்கள்: ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் பேராயர் மெல்கம் ரஞ்சித் கோரிக்கை

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான, விசாரணைகளுக்கு உதவுங்கள்: ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் பேராயர் மெல்கம் ரஞ்சித் கோரிக்கை 0

🕔7.Mar 2022

ஈஸ்டர் தின தாக்குதல்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணையை உறுதிப்படுத்துவதற்கு ஆதரவு வழங்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு கொழும்பு பேராயர் பேராயர் மல்கம் ரஞ்சித் இன்று (07) கோரிக்கை விடுத்துள்ளார். ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுகளின் போது உரையாற்றிய பேராயர் மல்கம் ரஞ்சித்; ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான முக்கிய

மேலும்...
பேராயர் மெல்கம் ரஞ்சித் தலைமையிலான குழுவுக்கும் பாப்பரசருக்கும் இடையில் வத்திக்கானில் சந்திப்பு

பேராயர் மெல்கம் ரஞ்சித் தலைமையிலான குழுவுக்கும் பாப்பரசருக்கும் இடையில் வத்திக்கானில் சந்திப்பு 0

🕔28.Feb 2022

பேராயர் மெல்கம் ரஞ்சித் தலைமையிலான இலங்கை கத்தோலிக்கக் குழுவினர் இன்று (28) வத்திக்கானில் பாப்பரசர் பிரான்சிஸ்ஸை சந்தித்தனர். ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்ட வத்திக்கானுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக பேராயர் ரஞ்சித் தெரிவித்திருந்த நிலையில், இந்த சந்திப்பு நடந்துள்ளது. நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க தன்னால் இயன்ற உதவிகளை வழங்குவதாக உறுதியளித்து,

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல்: ஜனாதிபதி ஆணைக்குழுவின் 70 ஆயிரம் பக்க அறிக்கையின் மென்பிரதியை வழங்குமாறு கோரிக்கை

ஈஸ்டர் தின தாக்குதல்: ஜனாதிபதி ஆணைக்குழுவின் 70 ஆயிரம் பக்க அறிக்கையின் மென்பிரதியை வழங்குமாறு கோரிக்கை 0

🕔23.Feb 2022

ஈஸ்டர் தினத் தாக்குதல்கள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் மென் பிரதியொன்றை வழங்குமாறு நாடாளுமன்ற சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுளுமன்ற உறுப்பினர் ஹரின் பெனாண்டோ இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். மேற்படி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மற்றும் சாட்சிப் பதிவுகள் அடங்கிய 88 தொகுதிகளும் ஜனாதிபதியின் சட்டப்

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல்: ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் முழுத் தொகுதிகளும் நாடாளுமன்றுக்கு சமர்ப்பிப்பு

ஈஸ்டர் தாக்குதல்: ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் முழுத் தொகுதிகளும் நாடாளுமன்றுக்கு சமர்ப்பிப்பு 0

🕔22.Feb 2022

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மற்றும் அது தொடர்பான சாட்சி பதிவுகள் உட்பட அனைத்து தொகுதிகளும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் 88 தொகுதிகளைக் கொண்ட முழுமையான அறிக்கை இன்று (22) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தின் சட்ட விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்த ரோஹணதீரவினால் சபாநாயகர்

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல்; முக்கிய தகவல்களை அரசாங்கம் ஒழித்து வைத்துள்ளது: பேராயர் மெல்கம் ரஞ்சித் குற்றச்சாட்டு

ஈஸ்டர் தின தாக்குதல்; முக்கிய தகவல்களை அரசாங்கம் ஒழித்து வைத்துள்ளது: பேராயர் மெல்கம் ரஞ்சித் குற்றச்சாட்டு 0

🕔19.Feb 2022

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நியாயம் கிடைக்காது என கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கம் ஒன்றின் கீழாவது இதற்கு நியாயம் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார். நாட்டின் தற்போதைய அரசாங்கம் சட்டத்தை கேலிக்கு உள்ளாகி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் ஈஸ்டர் தாக்குதல்

மேலும்...
ஷெஹான் மாலக்க, பிணையில் விடுவிப்பு

ஷெஹான் மாலக்க, பிணையில் விடுவிப்பு 0

🕔15.Feb 2022

சமூக செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக்க கமகே, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வெளியிட்டிருந்த கருத்து தொடர்பாக விசாரணை செய்ய நேற்றைய தினம் (14) குற்றப் புலனாய்வு பிரிவினர் அவரை கைது செய்திருந்தனர். இன்றைய தினம் அவர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, பிணை வழங்கப்பட்டுள்ளது. தொடர்பான செய்தி: ஈஸ்டர் தாக்குதல்

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பேசி வந்த, சமூக செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக கைது

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பேசி வந்த, சமூக செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக கைது 0

🕔14.Feb 2022

சமூக செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக கமகே, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (14) கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு, ஷெஹான் மாலக கமகே 2019 ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து வெளிப்படையாகப் பேசியிருந்தார். ஈஸ்டர் தாக்குதல் – ஓர் அரசியல் சதி என்று கூறிய கமகே, இது குறித்து விசாரணை நடத்துமாறு அரசாங்கத்துக்கு கோரிக்கை

மேலும்...
சுதந்திர தின விழாவைப் புறக்கணிக்க, பேராயர் மெல்கம் ரஞ்சித் தீர்மானம்: காரணமும் வெளியிடப்பட்டது

சுதந்திர தின விழாவைப் புறக்கணிக்க, பேராயர் மெல்கம் ரஞ்சித் தீர்மானம்: காரணமும் வெளியிடப்பட்டது 0

🕔3.Feb 2022

நாட்டின் 74ஆவது சுதந்திர தினம் நாளை (04) கொண்டாடப்பபடவுள்ள நிலையில், சுதந்திர தின விழாவை புறக்கணிக்க கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் தீர்மானித்துள்ளார். சுதந்திர தினத்தில் வழமையாக மேற்கொள்ளும் செயற்பாடுகளை ரத்துச் செய்வதற்கு பேராயர் மெல்கம் ரஞ்சித் தீர்மானித்துள்ளார் என, கொழும்பு மறைமாவட்ட தொடர்பாடல் பிரிவின் உறுப்பினர் அருட்தந்தை கர்தினால் சிறில் காமினி பெனாண்டோ இன்று

மேலும்...
கைக்குண்டு விவகாரம்: அச்சுறுத்திப் பெறும் வாக்குமூலங்கள் அடிப்படையிலான முடிவை ஏற்கப் போவதில்லை: கர்தினால் மல்கம் ரஞ்சித்

கைக்குண்டு விவகாரம்: அச்சுறுத்திப் பெறும் வாக்குமூலங்கள் அடிப்படையிலான முடிவை ஏற்கப் போவதில்லை: கர்தினால் மல்கம் ரஞ்சித் 0

🕔24.Jan 2022

பொரளை கிறிஸ்தவ தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்டமை தொடர்பில் பொதுமக்களை அச்சுறுத்தி பொலிஸார் பெறும் வாக்குமூலங்களை அடிப்படையாக கொண்ட முடிவினை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார் “ஓல் செயின்ட்ஸ் தேவாலய கைக்குண்டு வழக்கில் எடுக்கப்பட்ட முடிவுகளை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இது மக்களை அச்சுறுத்தி சேகரிக்கப்பட்ட ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டவை” என்று கர்தினால் ரஞ்சித்

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விளக்க மறியலில் வைக்கப்பட்ட கல்முனை நபர் மரணம்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விளக்க மறியலில் வைக்கப்பட்ட கல்முனை நபர் மரணம் 0

🕔6.Jan 2022

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரொருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு மரணித்தவர் கல்முனையைச் சேர்ந்த 42 வயதுடையவர் என பொரளை பொலிஸார் – கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளனர். சந்தேக நபர் சுகயீனம் காரணமாக கடந்த வருடம் நொவம்பர்

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல்: ரிஷாட் பதியுதீனுக்கு தொடர்பு இருப்பதற்கான சாட்சியங்கள் இல்லை என அறிவிப்பு

ஈஸ்டர் தின தாக்குதல்: ரிஷாட் பதியுதீனுக்கு தொடர்பு இருப்பதற்கான சாட்சியங்கள் இல்லை என அறிவிப்பு 0

🕔18.Dec 2021

ஈஸ்டர் தின தாக்குதலில் ரிஷாட் பதியுதீனுக்கு தொடர்பு இருப்பதாக நிரூபிக்கப்படுவதற்கான போதுமான சாட்சியம் இதுவரை இல்லை என நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சட்ட விரோதமான கைது தொடர்பாக, நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியம் (IPU) ஏகமானதாக எடுத்துள்ள தீர்மானத்தில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. உலகின் 179 தேசிய நாடாளுமன்றங்கள் மற்றும்

மேலும்...
சஹ்ரானிடம் பயிற்சி பெற்றதாகக் கூறப்படும் நபர், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது

சஹ்ரானிடம் பயிற்சி பெற்றதாகக் கூறப்படும் நபர், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது 0

🕔3.Dec 2021

ஈஸ்டர் தினத் தாக்குதல் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். 25 வயதுடைய சந்தேக நபர் – ஹிங்குல பிரதேசத்தில் வைத்து நேற்று (02) கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டுவரும் –

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்