Back to homepage

Tag "ஆளுநர்"

வட மாகாண ஆளுராக மார்ஷல் பெரேரா; ரெஜினோல்ட் குரேக்கு பதவி இல்லை

வட மாகாண ஆளுராக மார்ஷல் பெரேரா; ரெஜினோல்ட் குரேக்கு பதவி இல்லை 0

🕔4.Jan 2019

தென் மாகாண ஆளுநராகக் கடமையாற்றிய மார்ஷல் பெரேரா, வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முன்னதாக சப்ரகமுவ மாகாண ஆளுராகவும் மார்ஷல் பெரேரா பதவி வகித்துள்ளார். இதேவேளை, வடக்கு மாகாண ஆளுநராகக் கடமையாற்றிய ரெஜினோல்ட் குரேயை ஆளுநராக ஜனாதிபதி நியமிக்க மாட்டார் என, ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அனைத்து மாகாண ஆளுநர்களையும் பதவி

மேலும்...
கிழக்கு மாகாண ஆளுநராகிறார் ஆஸாத் சாலி

கிழக்கு மாகாண ஆளுநராகிறார் ஆஸாத் சாலி 0

🕔4.Jan 2019

– மப்றூக் – கிழக்கு மாகாண ஆளுநராக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் ஆஸாத் சாலி நியமிக்கப்படவுள்ளார். இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு, கிழக்கு மாகாண ஆளுநராக, தான் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளமையை ‘புதிது’ செய்தித்தளத்துக்கு ஆஸாத் சாலி உறுதிப்படுத்தினார். கொழும்பு மாநகரசபையின் பிரதி மேயர், மத்திய மாகாண சபை உறுப்பினர் உள்ளிட்ட

மேலும்...
கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் பதவியிலிருந்து நிஸாம் மாற்றம்; பின்புலத்தில் அரசியல்

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் பதவியிலிருந்து நிஸாம் மாற்றம்; பின்புலத்தில் அரசியல் 0

🕔2.Oct 2018

– முன்ஸிப் அஹமட் – கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி வந்த எம்.ரி.எம். நிஸாம், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக, அவர் சிறப்பாகப் பணியாற்றி  வந்த  நிலையிலேயே,  இவ்வாறானதொரு நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவின் கையொப்பத்துடன், கிழக்கு மாகாண

மேலும்...
கிழக்கு பட்டதாரிகளுக்கு அரச தொழில் வழங்குவது தொடர்பில், ஆளுநருடன் பேசியுள்ளேன்: அமைச்சர் ஹிஸ்புல்லா தகவல்

கிழக்கு பட்டதாரிகளுக்கு அரச தொழில் வழங்குவது தொடர்பில், ஆளுநருடன் பேசியுள்ளேன்: அமைச்சர் ஹிஸ்புல்லா தகவல் 0

🕔23.Jul 2018

கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளை, இருக்கின்ற அரச தொழில் வெற்றிடங்களுக்கு நியமிப்பது சம்பந்தமாக, கிழக்கு மாகாண ஆளுநருடன் கலந்துரையாடியுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.காத்தான்குடி ஹிழுறியா வித்தியாலயத்தில் 08 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள வகுப்பறை கட்டிட அடிக்கல் நடும் விழா இன்று திங்கட்கிழமை பாடசாலை வளாகத்தில், அதிபர்

மேலும்...
சர்வதேச பொலிஸாரால் தேடப்படும் அர்ஜுன மகேந்திரன்; சிங்கப்பூரில் சுதந்திரமாக உலவித் திரியும் காட்சி அம்பலம்

சர்வதேச பொலிஸாரால் தேடப்படும் அர்ஜுன மகேந்திரன்; சிங்கப்பூரில் சுதந்திரமாக உலவித் திரியும் காட்சி அம்பலம் 0

🕔19.Apr 2018

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரும், பிணைமுறி மோடிசியின் பிரதான சந்தேக நபருமான அர்ஜுன மகேந்திரன் சிங்கப்பூரில் சுதந்திரமாக சுற்றித்திரிவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக செயற்பட்ட அர்ஜுன மகேந்திரன் பிணைமுறி மோசடி மூலம் பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் இவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றார்.

மேலும்...
முஸ்லிம் அரசியலும், கூர் மழுங்கிய கருவிகளும்

முஸ்லிம் அரசியலும், கூர் மழுங்கிய கருவிகளும் 0

🕔17.Apr 2018

– முகம்மது தம்பி மரைக்கார் –‘ஒரு மரத்தை வெட்டுவதற்கு எனக்கு 06 மணி நேரம் வழங்கப்பட்டால், அதில் 04 மணி நேரத்தை கோடாரியைத் தீட்டுவதற்கே பயன்படுத்திக் கொள்வேன்’ என்று ஆப்ரஹாம் லிங்கன் சொன்னார், எல்லா செயற்பாடுகளை மேற்கொள்வதற்கும் கருவிகள் தேவையாக இருக்கின்றன. கருவிகள் என்பவை ‘ஆயுதங்களாக’ மட்டும் இருப்பதில்லை. ஒரு தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ‘பிரசாரம்’

மேலும்...
முஸ்லிம் ஒருவரைக் கூட, இந்த அரசாங்கம் ஆளுநராக நியமிக்கவில்லை: நாமல் குற்றச்சாட்டு

முஸ்லிம் ஒருவரைக் கூட, இந்த அரசாங்கம் ஆளுநராக நியமிக்கவில்லை: நாமல் குற்றச்சாட்டு 0

🕔14.Apr 2018

மேல் மாகாண ஆளுநர் பதவியை அலவி மௌலானாவுக்கு வழங்கி, முஸ்லிம்களை மஹிந்த ராஜபக்ஷ கௌரவித்தார் என்பதை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இனவாதியாக சித்தரிக்க முயற்சிப்பவர்களுக்கு தான் ஞாபகமூட்ட விரும்புதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். புதிய ஆளுநர் நியமனம் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில்; “இந்த நாட்டில் இனவாதம் இன்று

மேலும்...
அது நேற்று; இது இன்று: ரெஜினோல்ட் குரே மீண்டும் வட மாகாண ஆளநராக நியமனம்

அது நேற்று; இது இன்று: ரெஜினோல்ட் குரே மீண்டும் வட மாகாண ஆளநராக நியமனம் 0

🕔13.Apr 2018

மத்திய மாகாண ஆளுநராக நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ரெஜினோல்ட் குரே, இன்று வெள்ளிக்கிழமை வட மாகாண ஆளுநராக சத்தியப் பிரமாணம் செய்துள்ள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே, வடமாகாணத்துக்கான ஆளுநராக இவர் பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஊவா மாகாண ஆளுநராக நேற்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட பி.பி.

மேலும்...
கிழக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு நாளை; 30ஆம் திகதியுடன் அனைத்து உறுப்பினர்களும் பதவி இழக்கின்றனர்

கிழக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு நாளை; 30ஆம் திகதியுடன் அனைத்து உறுப்பினர்களும் பதவி இழக்கின்றனர் 0

🕔24.Sep 2017

– அஹமட் – கிழக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு, நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. 2012ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி, முதலாவது அமர்வோடு ஆரம்பித்த கிழக்கு மாகாண சபையானது, இம்மாதம் 30ஆம்திகதியுடன் கலைகிறது. முதலாவது அமர்வின் போது கிழக்கு மாகாண சபையின் தவிசாளராக ஆரியவதி கலப்பதி தெரிவு செய்யப்பட்டார். அப்போதைய முதலமைச்சர் நஜீப்

மேலும்...
கிழக்கு மாகாண சபை 30இல் கலைகிறது; ஆளுநர் வசமாகிறது நிருவாகம்

கிழக்கு மாகாண சபை 30இல் கலைகிறது; ஆளுநர் வசமாகிறது நிருவாகம் 0

🕔22.Sep 2017

கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகள், இன்னும் சில நாட்களில் கலையவுள்ள நிலையில், அவற்றின் நிருவாகம் – ஆளுநர்களின் கீழ் கொண்டு வரப்படும் என்று, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண சபையின் முதலாவது கூட்டம் 2012ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 01ஆம் திகதி இடம்பெற்றது. அந்த வகையில்,

மேலும்...
கிழக்கு பட்டதாரிகளுக்கு, செப்டம்பரில் ஆசிரியர் நியமனம்: ஆளுநர் தெரிவிப்பு

கிழக்கு பட்டதாரிகளுக்கு, செப்டம்பரில் ஆசிரியர் நியமனம்: ஆளுநர் தெரிவிப்பு 0

🕔1.Aug 2017

கிழக்கு மாகாணத்தில் 1700 பட்டதாரிகளுக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படும் என்று, ஆளுநர் ரோஹித போகொல்லாகம கூறியுள்ளார். கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா, கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலையில் நேற்று திங்கங்கிழமை ஆரம்பமானது. அதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசியபோதே, மேற்கண்ட விடயத்தை அவர் கூறினார். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த

மேலும்...
மாகாண சபை முறைமையில், நம்பிக்கையிழக்கும் நிலை: எதிர்கட்சித் தலைவர் உதுமாலெப்பை

மாகாண சபை முறைமையில், நம்பிக்கையிழக்கும் நிலை: எதிர்கட்சித் தலைவர் உதுமாலெப்பை 0

🕔7.Aug 2016

– கே.ஏ. ஹமீட் – மாகாண சபைகளுக்கு உச்ச அதிகாரத்தை வழங்கி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் மனங்களை வென்றெடுப்பதற்கான ஏற்பாடுகளை அவசரமாக மேற்கொள்ள வேண்டும் என்று, கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும், தேசிய காங்கிரசின் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெவ்வை வேண்டுகோள் விடுத்தார். ‘மாகாண சபை அதிகாரங்கள் புதிய அரசியல் அமைப்பில் எவ்வாறு

மேலும்...
மத்திய வங்கியின் புதிய ஆளுநராக தமிழர் நியமனம்

மத்திய வங்கியின் புதிய ஆளுநராக தமிழர் நியமனம் 0

🕔2.Jul 2016

இலங்கை மத்திய வங்கியின்புதிய ஆளுநராக கலாநிதி இந்திரஜித் குமாரசாமி ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு இத்தகவல வெளியிட்டுள்ளது. அனைத்து கட்சிகளினதும் ஆலோசனைகளைப் பெற்றதன் பின்னர், இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மத்திய

மேலும்...
வடக்கு – கிழக்கு இணைக்கக் கூடாது; அரசியலமைப்பு நிபுணர்குழு பரிந்துரை

வடக்கு – கிழக்கு இணைக்கக் கூடாது; அரசியலமைப்பு நிபுணர்குழு பரிந்துரை 0

🕔3.Jun 2016

வடக்­கு மற்றம் கிழக்­கு மாகாணங்களை இணைக்கக் கூடாது என அர­சி­ய­ல­மைப்பு குறித்த யோச­னைகள் பெறும்  நிபுணர் குழு பரிந்­து­ரைத்­துள்ளது. மேலும், சிறு­பான்­மை­யினர் சார்பில் உப ஜனா­தி­பதி ஒருவர் நிய­மிக்­கப்­பட வேண்டும் எனவும் அந்தக்குழு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் தொடர்பில் மக்­க­ளி­ட­மி­ருந்து பெறப்­பட்ட சுமார் 5000 க்கும் மேற்­பட்ட யோச­னை­க­ளி­லி­ருந்தே இந்த பரிந்­து­ரைகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. முஸ்லிம் சமூகம் சார்பில்

மேலும்...
மத்திய மாாகாணத்தின் புதிய ஆளுநராக பெண் ஊடகவியலாளர்

மத்திய மாாகாணத்தின் புதிய ஆளுநராக பெண் ஊடகவியலாளர் 0

🕔17.Mar 2016

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நிலுகா எகநாயக்க இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். மத்திய மாகாண ஆளுநர் சுரங்கனி எல்லாவெல மரணமானதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, நிலுகா எகநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார் என்று ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. நிலுகா எகநாயக்க – சுபசெத செய்திப் பத்திரிகையின் முன்னாள் ஆலோசகராகக்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்