தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆசாத் சாலியின் உடல் நிலை பாதிப்பு: உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் 0
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மேல் மாகாண முன்னாள் ஆளுனர் ஆசாத் சாலியின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவருக்கு உடனடியாக வைத்திய சிகிச்சை அவசியப்படுவதாகவும், தேவையான வைத்திய வசதிகள் உடனடியாக வழங்கப்படாத காரணத்தினால் அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆசாத் சாலி பாதிக்கப்பட்டால் அதற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களமே