Back to homepage

Tag "அட்டாளைச்சேனை"

லெப்பை, மரைக்காயர், மாப்பிளை பரம்பரை: காயல்பட்டினம் மற்றும் கேரளாவிலிருந்து இலங்கை வந்த கதை

லெப்பை, மரைக்காயர், மாப்பிளை பரம்பரை: காயல்பட்டினம் மற்றும் கேரளாவிலிருந்து இலங்கை வந்த கதை 0

🕔1.Mar 2023

டொக்டர் எஸ். கியாஸ் – ‘அட்டாளைச்சேனையின் அரசியலும் வரலாறும்’ எனும் தொடரொன்றை எழுதி வருகின்றார். இந்த எழுத்துக்கள் ஓர் ஊர் பற்றிய வரலாற்றுடன் மட்டும் அடங்கி விடாமல் – இலங்கை முஸ்லிம்ளின் தொன்மம், தமிழர்களின் வரலாறு, முக்குவர் மற்றும் திமிலர்களுடனான தொடர்பு என பரந்து விரிகின்றது. தமது ‘வேர்’களை அறியும் ஆவலுள்ளோர் இதைப் படிக்கலாம். ஒவ்வொரு

மேலும்...
அட்டாளைச்சேனையில் மீன் சந்தையை தவிர்த்து, பிரதான வீதியோரங்களில் மீன் வியாபாரம் செய்வோர் தொடர்பில் முறைப்பாடு: பொலிஸ் நடவடிக்கை இன்னுமில்லை

அட்டாளைச்சேனையில் மீன் சந்தையை தவிர்த்து, பிரதான வீதியோரங்களில் மீன் வியாபாரம் செய்வோர் தொடர்பில் முறைப்பாடு: பொலிஸ் நடவடிக்கை இன்னுமில்லை 0

🕔24.Feb 2023

– அஹமட் – அட்டாளைச்சேனையில் மீன் சந்தைக் கட்டடமொன்று அண்மையில் திறந்து வைக்கப்பட்ட நிலையில், சில மீன் வியாபாரிகள் குறித்த இடத்தில் மீன்களை விற்பனை செய்யாமல், தமது வாகனங்களில் மீன் சந்தைக் கட்டடத்துக்கு முன்பாகவும், பிரதான வீதியோரங்களிலும் வியாபாரத்தில் ஈடுபடுவதால், பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகத் தெரிவித்து, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அட்டாளைச்சேனை

மேலும்...
கிழக்கில் முஸ்லிம்கள் எப்போது குடியேறினர்: அட்டாளைச்சேனை வரலாற்றை தெரிந்து கொள்வோம்

கிழக்கில் முஸ்லிம்கள் எப்போது குடியேறினர்: அட்டாளைச்சேனை வரலாற்றை தெரிந்து கொள்வோம் 0

🕔16.Feb 2023

டொக்டர் எஸ். கியாஸ் – ‘அட்டாளைச்சேனையின் அரசியலும் வரலாறும்’ எனும் தொடரொன்றை எழுதி வருகின்றார். இந்த எழுத்துக்கள் ஓர் ஊர் பற்றிய வரலாற்றுடன் மட்டும் அடங்கி விடாமல் – இலங்கை முஸ்லிம்ளின் தொன்மம், தமிழர்களின் வரலாறு, முக்குவர் மற்றும் திமிலர்களுடனான தொடர்பு என பரந்து விரிகின்றது. தமது ‘வேர்’களை அறியும் ஆவலுள்ளோர் இதைப் படிக்கலாம். ஒவ்வொரு

மேலும்...
அட்டாளைச்சேனையில் மீன் வியாபாரத்துக்கான கட்டடத்தை திறந்து கொடுக்காமல், தவிசாளர் இழுத்தடிப்புச் செய்வதாக புகார்

அட்டாளைச்சேனையில் மீன் வியாபாரத்துக்கான கட்டடத்தை திறந்து கொடுக்காமல், தவிசாளர் இழுத்தடிப்புச் செய்வதாக புகார் 0

🕔15.Feb 2023

– அஹமட் – அட்டாளைச்சேனை சந்தைப் பகுதியில் மீன்களை விற்பனை செய்வதற்கென கட்டடமொன்று புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதனைத் திறந்து மீன் வியாபாரிகளுக்கு வழங்காமல், பிரதேச சபை – இழுத்தடிப்புச் செய்து வருவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக மீன் வியாபாரிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாவதாகவும், பொதுமக்கள் மிக மோசமான சுகாதார அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாகவும் கூறப்படுகிறது.

மேலும்...
போதைப் பொருளுக்கு எதிரான கருத்தை திரிபுபடுத்துவோர், அந்த வியாபரத்துடன் தொடர்புபட்டவர்களா?;  சந்தேகம்  ஏற்பட்டுள்ளதாக, வேட்பாளர் அமீர் தெரிவிப்பு

போதைப் பொருளுக்கு எதிரான கருத்தை திரிபுபடுத்துவோர், அந்த வியாபரத்துடன் தொடர்புபட்டவர்களா?; சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக, வேட்பாளர் அமீர் தெரிவிப்பு 0

🕔14.Feb 2023

– அஹமட் – போதைப் பொருள் பாவனைக்கு எதிராக – தான் வெளியிட்ட கருத்தை திரிபுபடுத்தி தனக்கு எதிராக பிரசாரம் செய்கின்றவர்கள், போதைப் பொருளுடன் தொடர்புபட்டவர்களா? என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக, அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, அல் முனீறா வட்டாரத்தில் போட்டியிடும் ஏ.கே. அமீர் தெரிவித்துள்ளார். தான்

மேலும்...
கோணாவத்தை ஆற்றை மண்ணிட்டு நிரப்பிய உதுமாலெப்பை:  “பழைய நிலைக்கு கொண்டு வருவேன்” என, தேர்தல் வாக்குறுதி வழங்குவாரா?

கோணாவத்தை ஆற்றை மண்ணிட்டு நிரப்பிய உதுமாலெப்பை: “பழைய நிலைக்கு கொண்டு வருவேன்” என, தேர்தல் வாக்குறுதி வழங்குவாரா? 0

🕔9.Feb 2023

– மரைக்கார் – அட்டாளைச்சேனை – கோணாவத்தை ஆற்றின் குறுக்காக அமைந்துள்ள பெரிய பாலம் பகுதியில், ஆற்றின் பெரும் பகுதியை சட்ட விரோதமாக மண்ணிட்டு நிரப்புவதற்கு காரணமாக இருந்த கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, தற்போது அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடுகின்றார். இந்த நிலையில், அவர் அட்டாளைச்சேனையின் தவிசாளராக தெரிவானால்; “நிரப்பப்பட்ட

மேலும்...
வேட்பாளர்களை பாடசாலைக்கு அழைக்கும் அதிபர்கள் குறித்து பெற்றோர்கள் முறைப்பாடு

வேட்பாளர்களை பாடசாலைக்கு அழைக்கும் அதிபர்கள் குறித்து பெற்றோர்கள் முறைப்பாடு 0

🕔7.Feb 2023

– அஹமட் – உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அரச பாடசாலைகளுக்கு அழைத்து – அங்கு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு சில அதிபர்கள் சந்தர்ப்பம் வழங்கியுள்ளமை குறித்து பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர். குறிப்பாக அட்டாளைச்சேனையிலுள்ள அரச பாடசாலைகளில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அழைத்து, அவர்களிடமிருந்து அன்பளிப்புகளைப் பெற்றுக் கொள்ளும் வைபவங்கள் நடந்துள்ளதாகவும் இது

மேலும்...
அட்டாளைச்சேனை – இறக்காமம் எல்லைப் பிரச்சினை: கற்சேனை ஏழைகளுக்கு வந்த, பல கோடி ரூபா பெறுமதியான வீட்டுத் திட்டம் இல்லாமல் போனது

அட்டாளைச்சேனை – இறக்காமம் எல்லைப் பிரச்சினை: கற்சேனை ஏழைகளுக்கு வந்த, பல கோடி ரூபா பெறுமதியான வீட்டுத் திட்டம் இல்லாமல் போனது 0

🕔7.Feb 2023

– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில் வறிய மக்களுக்கான வீட்டுத் திட்டமொன்றுக்கு, இறக்காமம் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் அப்பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் காட்டிய எதிர்ப்பின் காரணமாக அந்தத் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. குவைத் நாட்டின் நிதியுதவியின் கீழ் ‘அன்நூர்’ எனும் நிறுவனம் மேற்படி வீட்டுத் திட்டத்தை பல கோடி ரூபா

மேலும்...
அட்டாளைச்சேனை அல் முனீறா பாடசாலை அதிபர் ஒழுக்கமற்று செயற்படுகிறார்; அபிவிருத்திச் சங்கம் குற்றச்சாட்டு: வலயக் கல்விப் பணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவிப்பு

அட்டாளைச்சேனை அல் முனீறா பாடசாலை அதிபர் ஒழுக்கமற்று செயற்படுகிறார்; அபிவிருத்திச் சங்கம் குற்றச்சாட்டு: வலயக் கல்விப் பணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவிப்பு 0

🕔14.Mar 2022

– அஹமட் – அட்டாளைச்சேனை அல் முனீறா பெண்கள் பாடசாலை அதிபருக்கு எதிராக, அந்தப் பாடசாலையின் அபிவிருத்திச் சங்கம் பல்வேறு குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியுள்ள நிலையில், குறித்த அதிபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும், அவரை இடமாற்றம் செய்யுமாறும் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளருக்கு கடிதம் மூலம் அறிவித்தும் உரிய நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என, பாடசாலை அபிவிருத்திச்

மேலும்...
பாலமுனை தனியார் காணியில் அடாத்தாக விகாரை அமைக்க முயற்சித்தமைக்கு எதிராக, சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாக ‘குரல்கள் இயக்கம்’ தெரிவிப்பு

பாலமுனை தனியார் காணியில் அடாத்தாக விகாரை அமைக்க முயற்சித்தமைக்கு எதிராக, சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாக ‘குரல்கள் இயக்கம்’ தெரிவிப்பு 0

🕔11.Mar 2022

– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாலமுனை – முல்லிக்குளத்து மலைப் பகுதியில் தனிநபர் ஒருவருக்குச் சொந்தமான காணியினுள் சட்டவிரோதமாக நுழைந்து விகாரையொன்றினை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்ட தரப்பினருக்கு எதிராக, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் பணிகளை தாம் தொடங்கியுள்ளதாக ‘குரல்கள் இயக்கம்’ தெரிவித்துள்ளது. அக்கரைப்பற்றில் நேற்று (10) மாலை ‘குரல்கள் இயக்கம்’ நடத்திய

மேலும்...
பாலமுனை பகுதியில் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான காணியில் பௌத்த விகாரை அமைக்க முயற்சி: பொதுமக்கள் எதிர்ப்பால், நடவடிக்கை நிறுத்தம்

பாலமுனை பகுதியில் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான காணியில் பௌத்த விகாரை அமைக்க முயற்சி: பொதுமக்கள் எதிர்ப்பால், நடவடிக்கை நிறுத்தம் 0

🕔9.Mar 2022

– மப்றூக் – பௌத்த பிக்குகள் உள்ளடங்கலான குழுவொன்று அம்பாறை மாவட்டத்திலுள்ள தனியார் ஒருவரின் காணியொன்றினுள் அடாத்தாக விகாரையொன்றை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட வேலைகளைத் தொடங்கியமைக்கு – அப்பகுதி முஸ்லிம் மக்கள் இன்று புதன்கிழமை காலை கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாலமுனை பிரதேசத்திலுள்ள தனியார் ஒருவருக்குச் சொந்தமான

மேலும்...
அட்டாளைச்சேனை கல்வியற் கல்லூரியின் ஆசிரிய பயிலுனர்கள்: அம்பாறை, மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகளுக்கு இணைப்பு

அட்டாளைச்சேனை கல்வியற் கல்லூரியின் ஆசிரிய பயிலுனர்கள்: அம்பாறை, மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகளுக்கு இணைப்பு 0

🕔8.Mar 2022

– எம்.ஜே.எம். சஜீத் – அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் 2018/2020 ஆம் வருட ஆசிரிய பயிலுனர்களை அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளுக்கு இணைப்பதற்குரிய அனுமதி கல்வி அமைச்சின் ஆசிரிய கல்விப்பிரிவின் பிரதம ஆணையாளரிடம் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் கல்லூரியின் பீடாதிபதி தெரிவித்தார். அதனடிப்படையில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ள 08 வலயங்களைச் சேர்ந்த

மேலும்...
மரியாதை கொடுத்து பேசவில்லையாம்; தெரு மின்விளக்கை கழற்றிச் சென்ற அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளர்: மக்கள் கண்டனம்

மரியாதை கொடுத்து பேசவில்லையாம்; தெரு மின்விளக்கை கழற்றிச் சென்ற அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளர்: மக்கள் கண்டனம் 0

🕔4.Feb 2022

– அஹமட் – தனக்கு பொதுமகன் ஒவருர் மரியாதை கொடுத்துப் பேசவில்லை எனக்கூறி, அந்தப் பொதுமகனின் கடையின் முன்பாக – பாலமுனை பிரதான வீதியில் பொருத்தப்பட்டிருந்த தெரு மின்விளக்கை, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் எனக் கூறிக் கொள்கின்றவர் கழற்றிச் சென்ற சம்பவமொன்று அண்மையில் நடந்துள்ளது. இது சம்பந்தமாகத் தெரியவருவதாவது; அட்டாளைச்சேனை பிரதேச சபையின் நிர்வாகத்துக்குட்பட்ட

மேலும்...
அட்டாளைச்சேனையில் சிறுமியைக் கடத்தியவர், புத்தளத்தில் கைது

அட்டாளைச்சேனையில் சிறுமியைக் கடத்தியவர், புத்தளத்தில் கைது 0

🕔17.Jan 2022

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 14 வயது சிறுமியொருவரைக் கடத்திச் சென்ற நபர், புத்தளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட சிறுமியும் அங்கிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர், அட்டாளைச்சேனையைச் சேர்ந்த 09ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியொருவர் கடத்தப்பட்டுள்ளதாக, அவரின் பெற்றோர் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். கடத்தியவரையும் சிறுமியையும் பெற்றோர் தேடி

மேலும்...
அட்டாளைச்சேனையில் 14 வயது சிறுமி கடத்தல்; பின்னணியில் உள்ளுர் அரசியல்வாதி: பொலிஸ் நிலையத்தில் முறையிட்டும் நடவடிக்கை இல்லை என பெற்றோர் விசனம்

அட்டாளைச்சேனையில் 14 வயது சிறுமி கடத்தல்; பின்னணியில் உள்ளுர் அரசியல்வாதி: பொலிஸ் நிலையத்தில் முறையிட்டும் நடவடிக்கை இல்லை என பெற்றோர் விசனம் 0

🕔12.Jan 2022

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 14வயதுடைய சிறுமியொருவர் கடத்தப்பட்டுள்ளதாக, சிறுமியின் பெற்றோர் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம் மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் அம்பாறைக் காரியாலயம் ஆகியவற்றில் சிறுமியின் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர். கடந்த 12 நாட்களுக்கு முன்னர் இளைஞர் ஒருவர், குறித்த சிறுமியை கடத்திச் சென்றுள்ளதாகவும் குறித்த முறைப்பாட்டில் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்