Back to homepage

Tag "ஃபேஸ்புக்"

இலங்கை குண்டுவெடிப்பு: சஹ்ரான் வாழ்க்கை தடம் மாறியது எப்படி? பிரத்தியேக கள ஆய்வு

இலங்கை குண்டுவெடிப்பு: சஹ்ரான் வாழ்க்கை தடம் மாறியது எப்படி? பிரத்தியேக கள ஆய்வு

– யூ. எல். மப்றூக், பிபிசி தமிழுக்காக – அச்சத்துள் உறைந்து போயிருக்கிறது காத்தான்குடி. தமக்குப் பரிட்சயமில்லாத எவருடனும் பேசுவதற்கு அங்குள்ள மக்கள் தயங்குகின்றனர். வழமையான சந்தோசத்தையும் கலையினையும் இந்த ஊர் இழந்து போயுள்ளதைக் காண முடிகிறது. இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள சஹ்ரான் காசிம் என்பவர்

மேலும்...
அரசு ஊழியர்கள் பேஸ்புக் பயன்படுத்தினால் பணி நீக்கம் செய்யப்படுவர்: மத்திய மாகாண ஆளுநர் அதிரடி அறிவிப்பு

அரசு ஊழியர்கள் பேஸ்புக் பயன்படுத்தினால் பணி நீக்கம் செய்யப்படுவர்: மத்திய மாகாண ஆளுநர் அதிரடி அறிவிப்பு

அரசு அலுவலர்கள் கடமை நேரத்தில் ஃபேஸ்புக் அல்லது ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட நபரை வேலையிலிருந்து நீக்குவேன் என்று மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார். அதன் பின்னரே, குறித்த நபர் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மத்திய மாகாணத்தில் அரசு தொழில் நியமனம் வழங்கும் நிகழ்வொன்றில் நேற்று செவ்வாய்கிழமை

மேலும்...
உகண்டாவில் வட்ஸ்அப், ஃபேஸ்புக் பயன்படுத்த வரி

உகண்டாவில் வட்ஸ்அப், ஃபேஸ்புக் பயன்படுத்த வரி

உகண்டாவில் வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் போன்றவற்றினைப் பயன்படுத்த வேண்டுமாயின் அங்கு வரி செலுத்த வேண்டியுள்ளது. செய்திப் பகிர்வு ‘அப்’ மற்றும் சமூக வலைத்தளங்களில் ‘வெட்டிப் பேச்சை’, அந்த நாட்டு ஜனாதிபதி  யுவரி முஸவனி விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இவற்றினூடாக வம்புகள் வளர்வதாகவும், அதன் காரணமாக உற்பத்திகள் பாதிக்கப்படுவதாகவும் அந்த நாட்டு ஜனாதிபதி கூறியுள்ளார். குரல் மற்றும் செய்தி ‘அப்’களைப்

மேலும்...
கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா மோசடி: ஃபேஸ்புக் கணக்கை அழித்துவிடலாமா?

கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா மோசடி: ஃபேஸ்புக் கணக்கை அழித்துவிடலாமா?

இப்படிச் சொல்வதற்கு மன்னிக்கவும் – நீங்கள் ஒரு அடிமுட்டாள். ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் தொடக்கத்தில் சொன்ன கருத்துதான் இது. 2004ஆம் ஆண்டு ஃபேஸ்புக்கை உருவாக்கத் தொடங்கியபோது (அப்போது அவருக்கு வயது 19) தன் நண்பர்களுக்குத் தொடர்ந்து குறுந்தகவல்களை அனுப்பிய மார்க், தான் உருவாக்கிவரும் சமூக வலைதளத்தில் 4,000 பேர் இணைந்திருந்ததைப் பற்றிக் குறிப்பிடும்போது சொன்னார்:

மேலும்...
பேஸ்புக் தொடர்பில், 1570 முறைப்பாடுகள்

பேஸ்புக் தொடர்பில், 1570 முறைப்பாடுகள்

பேஸ்புக் தொடர்பாக இந்த வருடத்தில் முதல் எட்டு மாதங்களுக்குள் 1570 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, இலங்கை கணினி அவசர நடவடிக்கைப் பிரிவின் பாதுகாப்பு பொறியியலாளலர் ரொசான் சந்திரகுப்தா தெரிவித்துள்ளார். கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் போலியான கணக்குகள் மற்றும் பேஸ்புக் கணக்குகளில் சட்டவிரோதமாக உள்நுழைந்தமை தொடர்பிலேயே அதிக முறைபாடுகள் கிடைத்துள்ளதாக ரொசான் சந்திரகுப்தா கூறியுள்ளார். முறைபாடுகளுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், அது தொடர்பில் தேவையான

மேலும்...
மேலும் உணர்வுகளோடு ஃபேஷ்புக்

மேலும் உணர்வுகளோடு ஃபேஷ்புக்

சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில், லைக் (Like) பட்டனோடு சேர்த்து புதிய பட்டன்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. லவ் (Love), ஹா ஹா (Haha), வாவ் (Wow), ஸாட் (Sad), ஆங்க்ரி (Angry) என கூடுதலாக 05 விருப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஃபேஸ்புக்கில் நண்பர்களின் பதிவுகளுக்கு பின்னூட்டம் (Comment) இடும் வசதியும், விரும்பும் (Like) வசதியும் இதுவரை இருந்துவந்தது. நீண்ட காலமாக,

மேலும்...
ஃபேஸ்புக் நிறுவுனருக்கு ‘நோ’ சொன்ன சீன ஜனாதிபதி

ஃபேஸ்புக் நிறுவுனருக்கு ‘நோ’ சொன்ன சீன ஜனாதிபதி

ஃபேஸ்புக் நிறுவுனர் மார்க் ஸுகர்பெர்க் (Mark Zuckerberg) மனைவியின் வயிற்றில் உள்ள குழந்தைக்கு பெயரிட சீன ஜனாதிபதி ஸி ஜிங்பிங் மறுத்துள்ளமையானது, ஊடகங்களில் பரபரப்புச் செய்தியாக மாறியுள்ளது. மார்க் ஸுகர்பெர்க் மனைவி ப்ரஸில்லா சான்,  சீன வம்சாவளிப் பெண் ஆவார். அமெரிக்காவிற்கு அகதியாக இடம் பெயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். ப்ரஸில்லா தன்னுடன் படித்த காலம் முதலே மார்க், 

மேலும்...