Back to homepage

Tag "மினுவாங்கொட"

மினுவாங்கொட முஸ்லிம்கள் மீதான தாக்குதல்; பிக்குவின் பொய் முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது: ஆணைக்குழுவில் சாட்சியம்

மினுவாங்கொட முஸ்லிம்கள் மீதான தாக்குதல்; பிக்குவின் பொய் முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது: ஆணைக்குழுவில் சாட்சியம் 0

🕔3.Dec 2020

– எம்.எப்.எம். பஸீர் – ஈஸ்டர் தின தாக்குதல்களின் பின்னர் கடந்த 2019 மே மாதம் 13 ஆம் திகதி மினுவாங்கொட பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளுக்கு அடித்தளமிட்டதாக நம்பப்படும் சம்பவம், பொய்யான விடயம் ஒன்றினை மையப்படுத்தியதென, அந்த சம்பவத்துக்கு முகம் கொடுத்ததாக கூறப்படும் இளம் பெளத்த பிக்கு (பயில் நிலை ) ஜனாதிபதி

மேலும்...
பல்கலைக்கழக மாணவி ஒருவரும் கொரோனா தொற்றினால் பாதிப்பு: பி.சி.ஆர். பரிசோதனையில் உறுதி

பல்கலைக்கழக மாணவி ஒருவரும் கொரோனா தொற்றினால் பாதிப்பு: பி.சி.ஆர். பரிசோதனையில் உறுதி 0

🕔10.Oct 2020

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவியொருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை வழங்கப்பட்டதன் காரணமாக குறித்த மாணவி கடந்த வாரமே பாணந்துறையிலுள்ள தனது வீட்டுக்குச் சென்று விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த மாணவி, மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்ணொருவரின் உறவினருடன் தனியார் விடுதியொன்றில் தங்கியிருந்துள்ளார். இந்த காரணத்தால் அந்த மாணவிக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட

மேலும்...
சமூகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை: ராணுவத் தளபதி தகவல்

சமூகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை: ராணுவத் தளபதி தகவல் 0

🕔10.Oct 2020

மினுவங்கொட ஆடைத்தொழில்சாலையில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தவிர, சமூகத்தில் இருந்து இதுவரையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சிலா தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் இன்று சனிக்கிழமை காலை கலந்து கொண்ட போதே அவர் இதனைக் கூறினார். இதுவரையில் 1083 பேர் மினுவங்கொட கொத்தணியில் கொரோனா

மேலும்...
நாடு முழுவதும் கொரோனா பரவும் ஆபத்து உள்ளது: பொலிஸ் பேச்சாளர் எச்சரிக்கை

நாடு முழுவதும் கொரோனா பரவும் ஆபத்து உள்ளது: பொலிஸ் பேச்சாளர் எச்சரிக்கை 0

🕔9.Oct 2020

நாடு முழுவதும் கொரோனா பரவும் ஆபத்து காணப்படுகின்றது என பொலிஸ் பேச்சாளர் அஜித்ரோகன தெரிவித்துள்ளார். பொதுமக்களை முக்கவசங்களை அணியுமாறும்சுகாதார விதிமுறைகைளை பின்பற்றுமாறும் அவர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையின் பல ஊழியர்களை தனிமைப்படுத்துவதற்காக இன்னமும் கண்டுபிடிக்க வேண்டிய நிலையிலுள்ளதாக, பொலிஸாரும் புலனாய்வு பிரிவினரும் தெரிவித்துள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார். நேற்றுவரை 400 தொழிலாளர்களே தங்களை அடையாளப்படுத்தியுள்ளனர்

மேலும்...
மினுவாங்கொட தொழிற்சாலையில் 323  கொரோனா தொற்றாளர்கள்; இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

மினுவாங்கொட தொழிற்சாலையில் 323 கொரோனா தொற்றாளர்கள்; இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் 0

🕔6.Oct 2020

மினுவாங்கொட தொழிற்சாலையில் பணியாற்றிய மேலும் 220 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். திவுலப்பிட்டியை சேர்ந்த பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, அவர் பணியாற்றிய தொழிற்சாலையில் உள்ளவர்களுக்கும் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் மினுவாங்கொட தொழிற்சாலையில் கடமையாற்றி வந்த 220 பேரே இவ்வாறு

மேலும்...
கொரோனா : நாட்டில் மீண்டும் அவசரநிலை அறிவிப்பு

கொரோனா : நாட்டில் மீண்டும் அவசரநிலை அறிவிப்பு 0

🕔5.Oct 2020

கம்பஹா மாவட்டம் மினுவங்கொட பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் தொடர்ச்சியாக அடையாளம் காணப்பட்டு வருவதையடுத்து, நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. சுகாதார அமைச்சு இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது. மினுவங்கொட பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, சமூகத்திற்குள் பரவுவதை கட்டுப்படுத்த வேண்டும் என சுகாதார

மேலும்...
பெண்ணொருவருக்கு கொரோனா; திவுலபிடிய, மினுவாங்கொட பகுதிகளில் ஊடரங்குச் சட்டம்

பெண்ணொருவருக்கு கொரோனா; திவுலபிடிய, மினுவாங்கொட பகுதிகளில் ஊடரங்குச் சட்டம் 0

🕔4.Oct 2020

திவுலபிடிய பகுதியில் வசித்து வரும் 39 வயதுடைய பெண்ணொருவருக்கு கொவிட் 19 வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் குறித்த பெண் தற்போது கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பெண் காய்ச்சல் அறிகுறிகளுடன் கம்பஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், நோய் குணமடைந்து வீட்டுக்கு திரும்பும் வேளையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அவருக்கு

மேலும்...
மினுவாங்கொட வன்முறை; மதுமாதவ அரவிந்தவை கைது செய்வதற்கான ஆதாரங்கள் இல்லை: சட்டமா அதிபர் தெரிவிப்பு

மினுவாங்கொட வன்முறை; மதுமாதவ அரவிந்தவை கைது செய்வதற்கான ஆதாரங்கள் இல்லை: சட்டமா அதிபர் தெரிவிப்பு 0

🕔13.Jun 2019

மினுவாங்கொட பிரதேசத்தில் கடந்த மாதம் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பாக, மது மாதவ அரவிந்தவிவை கைது செய்வதற்கான போதிய ஆதாரங்கள் இல்லை என்று, உச்ச நீதிமன்றுக்கு சட்டமா அதிபர் அறிவித்துள்ளார். பிவித்ரு ஹெல உறுமய கட்சியின் உப தலைவரான மதுமாதவ அரவிந்த, கடந்த மாதம் மினுவாங்கொட பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் நடைபெறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர்

மேலும்...
நாத்தான்டிய, மினுவாங்கொட வன்முறை: 46 பேருக்கு பிணை

நாத்தான்டிய, மினுவாங்கொட வன்முறை: 46 பேருக்கு பிணை 0

🕔29.May 2019

நாத்தாண்டிய- கொட்டராமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களையடுத்து, கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, சந்தேகநபர்கள் 31 பேர், இன்று புதன்கிழமை சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மாரவில மாவட்ட நீதவான் சிறிமெவன் மஹேந்திர ராஜா முன்னிலையில், சந்தேகநபர்கள் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோதே, நீதவான்  தலா 50,000 ரூபாய் சரீரப் பிணையில் அவர்களை விடுதலை செய்துள்ளார். இம் மாதம்  13

மேலும்...
வஞ்சம்

வஞ்சம் 0

🕔23.May 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – முஸ்லிம் சமூகம் மீது வஞ்சம் தீர்க்கக் காத்திருந்தோருக்கெல்லாம் ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் நல்லதொரு வாய்ப்பாக அமைந்து விட்டது. ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களையும், பயங்கரவாதிகளாக சில கூட்டம் சித்தரித்துக் கொண்டிருக்கிறது. மறுபுறத்தில், இந்தத் தாக்குதலைச் சாட்டாக வைத்து முஸ்லிம் பிரதேசங்கள் பலவற்றில் காடைத்தனங்கள் இடம்பெற்றுள்ளன. இத்தனைக்கும் பாதிக்கப்பட்ட

மேலும்...
மினுவாங்கொட தாக்குலின் பின்னணியில், சில அரசியல்வாதிகளே இருந்தனர்: பௌத்த தேரர் தெரிவிப்பு

மினுவாங்கொட தாக்குலின் பின்னணியில், சில அரசியல்வாதிகளே இருந்தனர்: பௌத்த தேரர் தெரிவிப்பு 0

🕔20.May 2019

– அஸ்ரப் ஏ சமத் – மினுவாங்கொட நகரில் கடந்த வாரம் நடைபெற்ற  அசம்பாவிதங்களுக்கு பின்னால் இனக்குரோதம் கொண்ட சில அரசியல்வாதிகள் இருந்தார்கள் என்று மினுவான்கொட தர்மராம இந்துல உடக்கந்த ஜானந்த தேரர் தெரிவித்தார். மினுவாங்கொட நகர ஜூம்ஆப் பள்ளிவாசலில் சர்வமத தலைவர்களின் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது மீண்டும் சக வாழ்வினை ஏற்படுத்தும் முகமாக ஊடக சந்திப்பு

மேலும்...
மினுவாங்கொடயில் முஸ்லிம் ஒருவரின் கடைக்கு தீ வைப்பு

மினுவாங்கொடயில் முஸ்லிம் ஒருவரின் கடைக்கு தீ வைப்பு 0

🕔16.May 2019

மினுவாங்கொடயிலுள்ள முஸ்லிம் ஒருவரின் கடையொன்றுக்கு இன்று வியாழக்கிழமை தீ வைக்கப்பட்டுள்ளது. இன்று நண்பகலளவில் குறித்த கடைக்குத் தீ வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருக்கும் ஊடகவியலாளர் ஒருவர் ‘புதிது’ செய்தித்தளத்துக்கு உறுதிப்படுத்தினார். மினுவாங்கொடயில் விமான நிலைய வீதியில் நேற்று முன்தினம் தாக்குதலுக்குள்ளான பவ்ஸ் ஹோட்டலில் இருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள கடையொன்றுக்கே தீ வைக்கப்பட்டுள்ளது. குறித்த கடை

மேலும்...
வன்முறையில் பலியான அமீரின் ஜனாஸாவுக்கு வந்த தேரர்கள்; புரிந்துணர்வு குறித்துப் பேசினார் அமைச்சர் றிசாட்

வன்முறையில் பலியான அமீரின் ஜனாஸாவுக்கு வந்த தேரர்கள்; புரிந்துணர்வு குறித்துப் பேசினார் அமைச்சர் றிசாட் 0

🕔15.May 2019

அப்பாவி முஸ்லிம்கள் மீது கடந்த திங்கட்கிழமை மாலை திட்டமிட்டு நடாத்தப்பட்ட காடைத்தன தாக்குதலால் சேதமாக்கப்படட பள்ளி வாசல்கள், மத்ரஸாக்கள், முஸ்லிம்களின் வீடுகள், வியாபார நிலையங்கள் மற்றும் உடமைகளை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நேற்று செவ்வாய்கிழம பார்வையிட்டார்.  மினுவாங்கொட கொட்டாரமுல்ல, பண்டுவஸ்நுவர தேர்தல் தொகுதியில் ஹெட்டிப்பொல, கொட்டம்பபிட்டி மற்றும் பிங்கிரிய தேர்தல் தொகுதியில் கினியம உள்ளிடட பாதிக்கப்பட்ட

மேலும்...
மினுவாங்கொட தாக்குதலில் ஈடுபட்ட 74 பேர் கைது

மினுவாங்கொட தாக்குதலில் ஈடுபட்ட 74 பேர் கைது 0

🕔14.May 2019

மினுவாக்கொடை பகுதியில் வன்முறைகளில் ஈடுபட்டார்கள் எனும் குற்றச்சாட்டில் 74 பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களுள் 33 பேர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை ‘ நவ சிங்ஹலே ‘ அமைப்பின் தலைவர் டேன் பிரியஸாத் என்பவரை குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கொழும்பு – வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை இடம்மாற்றுமாறு

மேலும்...
மினுவாங்கொடயில் 30 கடைகள் மீது தாக்குதல்; 20 கடைகள் தீயில் நாசம்

மினுவாங்கொடயில் 30 கடைகள் மீது தாக்குதல்; 20 கடைகள் தீயில் நாசம் 0

🕔14.May 2019

கம்பஹா மாவட்டம் மினுவாங்கொட பிரதேசத்திலுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான சுமார் 30 கடைகள் தாக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 20 கடைகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாகவும் அங்குள்ள உள்ளுரா் ஊடகவியலாளர் ஒருவர் பிபிசியிடம் கூறினார். இது இவ்வாறிருக்க, மினுவாங்கொட பிரதேசத்திலிருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள கல்லொளுவ பகுதிலுள்ள முஸ்லிம்கள் மீது படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், குறித்த உள்ளூர் ஊடகவியலாளர் தெரிவித்தார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்