முஸ்லிம் அமைச்சர்கள் மூவர், அரசியலமைப்பு பேரவைக்கு தெரிவு

🕔 April 5, 2016

Hak+Ris+Kabeer - 013புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதை நோக்காகக் கொண்டு அமைக்கப்பட்ட அரசியலமைப்பு பேரவைக்கான அங்கத்தவர்கள், இன்று செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டனர்.

முழு நாடாளுமன்றமும் அரசியலமைப்பு பேரவையாக இன்று செவ்வாய்கிழமை முதன் முதலாக கூடியபோதே இந்த நியமனம் இடம்பெற்றது.

அரசியலமைப்பு பேரவையின் தலைவராக சபாநாயகர் கரு ஜயசூரிய செயற்படும் நிலையில், 07 உப தலைவர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.

அத்தோடு, சகல கட்சி உறுப்பினர்களையும் உள்ளடக்கிய வகையில் 21 பேர் அடங்கிய வழிநடத்தல் குழுவும், இன்றைய தினம் நியமிக்கப்பட்டது.

உபதலைவர்கள் மற்றும் வழிநடத்தல் குழுவுக்கான பெயர்களை சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல முன்மொழிய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வழிமொழிந்தார். அவர்களது பெயர் விபரம் வருமாறு:

உப தலைவர்கள்

♦ திலங்க சுமதிபால ♦ செல்வம் அடைக்கலநாதன் ♦ கபீர் ஹாசீம் ♦ சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே
♦ திலக் மாரப்பன ♦ நலிந்த ஜயதிஸ்ஸ ♦ மஹிந்த யாப்பா அபேவர்தன

வழிநடத்தல் குழு

♦ ரணில் விக்ரமசிங்க ♦ லக்ஷ்மன் கிரியெல்ல ♦ நிமல் சிறிபால டி சில்வா ♦ ரஊப் ஹக்கீம் ♦ விஜயதாச ராஜபக்ஷ ♦ சுசில் பிரேமஜயந்த ♦ ரிஷாட் பதியுதீன் ♦ சம்பிக ரணவக்க ♦ டி.எம்.சுவாமிநாதன் ♦ மனோ கணேசன் ♦ மலிக் சமரவிக்ரம ♦ ரா.சம்பந்தன் ♦ அநுரகுமார திஸாநாயக்க ♦ டிலான் பெரேரா ♦ தினேஸ் குணவர்தன ♦ ஜயம்பதி விக்ரமரத்ன ♦ எம்.ஏ.சுமந்திரன்  ♦ பிமல் ரத்நாயக்க ♦ டக்ளஸ் தேவானந்தா ♦ பிரசன்ன ரணதுங்க ♦ துஷிதா விஜேமான்ன

Comments

புதிது பேஸ்புக் பக்கம்