ஞானசார தேரர் பிணையில் விடுதலை; சாட்சிகளை அச்சுறுத்தக் கூடாது எனவும் உத்தரவு

🕔 February 23, 2016

Gnanasara - 012பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட ஞானசார தேரர் இன்று செவ்வாய்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஞானசார தேரரை 02 லட்சம் ரூபாய் பெறுமதியான ஆட்பிணையில் விடுவிக்குமாறு, ஹோமாகம நீதவான் நீதிமன்ற நீதிபதி ரங்க திஸாநாயக்க உத்தரவிட்டார்.

இதேவேளை, ஞானசாரர் – சாட்சிகளை அச்சுறுத்தக் கூடாது என்றும் இதன்போது நீதவான் உத்தரவிட்டார்.

ஊடகவியலாளர் பிரகீத் என்னலிகொட காாணமல் போனமை தொடர்பான வழக்கின் சாட்சியான, எக்னலிகொடவின் மனைவியை, நீதிமன்ற வளாகத்துக்குள் வைத்து அச்சுறுத்திய குற்றச்சாட்டில், ஞானசாரர் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

கடந்த மாதம் 26 ஆம் திகதி நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தேரர், இம்மாதம் 09 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார்.

ஆயினும், பிணை வழங்கப்பட்ட அதே தினம் – எக்னலிகொடவின் மனைவியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் தேரர் விளக்க மறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்