இந்தியச் சந்தையிலிருந்து விலகுகிறது ‘மேகி நூடுல்ஸ்’

🕔 June 5, 2015

Maggiமேகி நூடுல்ஸை’ இந்தியச் சந்தையிலிருந்து திரும்பப்பெறுவதாக, ‘நெஸ்லே இந்தியா’ நிறுவனம் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டம் மற்றும் நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அளவை விடவும்,  ‘நெஸ்லே’ நிறுவனத் தயாரிப்பான ‘மேகி நூடுல்ஸில்’ காரீயத்தின் அளவு அதிகமாக உள்ளதாக ஏற்கனவே புகார் எழுந்தது.

இதனையடுத்து,  இந்தியா முழுவதும்  ‘மேகி நூடுல்ஸ்’ சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், டெல்லியில்   ‘மேகி நூடுல்ஸ்’க்கு 15 நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து – உத்தராகண்ட், ஜம்மு-காஷ்மீர் மற்றும் குஜராத் மாநிலங்களிலும் நேற்று தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில்,  ‘மேகி நூடுல்ஸை’ சந்தையிலிருந்து திரும்பப்பெறுவதாக ‘நெஸ்லே இந்தியா’ நிறுவனம் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

இருப்பினும், தங்கள் நிறுவனத் தயாரிப்பான ‘மேகி நூடுல்ஸ்’ உண்பதற்கு உகந்தது என்றும்,  மீண்டும் ‘மேகி நூடுல்ஸ்’ சந்தைக்கு வரும் எனவும் – அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்