முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா கைது

🕔 March 17, 2023

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா கைது செய்யப்பட்டுள்ளார்.

களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

2011ஆம் ஆண்டு வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில், சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுத்த குற்றச்சாட்டு தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா – செட்டிகுளம் வைத்தியசாலைக்கு அருகில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா பயணித்த  வாகனம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஸ்ரீ ரங்காவின் பாதுகாப்புக்காக இணைக்கப்படடிருந்த அமைச்சரவை பாதுகாப்பு பிரிவை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் பலியானார்.

கொல்லப்பட்ட அதிகாரியே வாகனத்தை ஓட்டிச் சென்றதாக கூறி வவுனியா நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட போதும், அது பொய்யான அறிக்கை எனக் கூறப்பட்டது.

இந்த நிலையில் குறித்த வாகனத்தை விபத்தின் போது ரங்காவே செலுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதனை ரங்கா மறுத்திருந்தார்.

இந்தப் பின்னணியில் வழக்கின் சாட்சி ஒருவரை ரங்கா அச்சுறுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டமையை அடுத்து, அவரை கைது செய்யுமாறு வவுனியா மேல்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்