அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரி; இஸ்லாம் பாடத்துக்கு பயிலுநர்கள் குறைக்கப்பட்டவிவகாரம்: கல்வியமைச்சருக்கு ஜம்இய்யத்துல் உலமா கடிதம்

🕔 January 26, 2023

– அஹமட் –

ட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியில் இஸ்லாம் பாடநெறிக்கு வழமையிலும் குறைவான பயிலுநர்களை இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக, கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கடிதமொன்றை எழுதியுள்ளது.

வழமையாக அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரியில் ஒவ்வொரு கல்வியாண்டுக்கும் இஸ்லாம் பாடநெறிக்கு 30 பயிலுநர்கள் இணைத்துக் கொள்ளப்படுகின்ற போதிலும், இம்முறை இரண்டு கல்வியாண்டுக்கென இஸ்லாம் பாடநெறிக்கு 20 மாணவர்கள் மட்டுமே இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

‘கடந்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 20 வீதமானோர் இஸ்லாம் பாடத்தில் சித்தியடையவில்லை என்பது மிகவும் கவலையளிக்கிறது. இந்தப் பிரச்சினைக்கு அடையாளம் காணப்பட்ட முக்கிய காரணிகளில் ஒன்று, நாடு முழுவதும் போதிய இஸ்லாம் பாட ஆசிரியர்கள் இல்லாமை ஆகும்’ என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரியில் இஸ்லாம் பாட நெறிக்கு – அதிக பயிலுநர்களை சேர்த்துக் கொள்வதற்கு தொடர்புடைய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்குமாறும் அந்தக் கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் செயலாளர் அஷ் ஷேய்க் எம். அர்கம் நூராமித் கையெழுத்துடன் குறித்த கடிதம் கல்வியமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தொடர்பான செய்தி: அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரியில் முஸ்லிம் பயிலுநர்களின் எண்ணிக்கையை குறைக்க சதி: பீடாதிபதி புண்ணியமூர்த்தியின் ‘விளையாட்டு’ தொடர்வதாக குற்றச்சாட்டு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்