பிரதி சபாநாயகராக பெண் ஒருவரை தெரிவு செய்ய ரணில் விருப்பம்

🕔 May 14, 2022

பிரதி சபாநாயகர் பதவிக்கு பெண் நாடாளுமன்ற உறுப்பிர் ஒருவருக்கு வாய்ப்பை வழங்குமாறு, கட்சித் தலைவர்களிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அடுத்த பிரதி சபாநாயகராக யாரை நியமிப்பது என்பது தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வருமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்த போதே இதனைக் கூறியுள்ளார்.

இன்று (14) காலை தன்னைச் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பிரதமர் இதனைக் கூறியதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றம் மே 17ஆம் திகதி கூடும் போது பிரதி சபாநாயகர் தெரிவு நடைபெறும்.

பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு இந்த வாய்ப்பை வழங்குமாறு கட்சித் தலைவர்களிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் இதன்போது பிரதமர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்