அஹ்னாப் ஜஸீம்: 20 மாதங்களுக்குப் பின்னர் பிணையில் விடுதலை

🕔 December 15, 2021

யங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சுமார் 20 மாத காலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த ‘நவரசம்’ எனும் கவிதை நூலாசிரியர் அஹ்னாப் ஜஸீம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

புத்தளம் மேல் நீதிமன்றம் இன்று (15) இந்தப் பிணை உத்தரவை வழங்கியுள்ளது.

அஹ்னாப் ஜஸீமை பிணையில் விடுவிப்பதற்கு சட்ட மா அதிபர் எதிர்ப்புத் தெரிவிக்கப் போவதில்லை என, கடந்த 08ஆம் திகதி, உச்ச நீதிமன்றில் தெரிவித்திருந்த நிலையில், புத்தளம் மேல் நீதிமன்றில் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2020 மே 16ஆம் திகதி இரவு 08 மணியளவில், சிலாவத்துறை – பண்டாரவெளியில் அமைந்துள்ள வீட்டில் வைத்து அஹ்னாப் கைது செய்யப்பட்டிருந்தார்.

அஹ்னாப் எழுதி வெளியிட்ட ‘நவரசம்’ கவிதைத் தொகுப்பில் பயங்கரவாதத்தைத் தூண்டும் வகையிலான விடயங்கள் உள்ளதாகக் கூறப்பட்டு இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

தொடர்பான செய்தி: தடுத்து வைக்கப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம்; பிணைக் கோரிக்கையை எதிர்க்கப் போவதில்லை: சட்ட மா அதிபர் தரப்பு உச்ச நீதிமன்றில் தெரிவிப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்