ஏறாவூரில் இளைஞர்களைத் தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தருக்கு பிணை; பணியும் இடைநிறுத்தம்

🕔 October 23, 2021

றாவூரில் இளைஞர்கள் இருவரை தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டு, நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில் – பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் அவர் கடமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இரண்டு இளைஞர்களை மனிதாபிமானமற்ற முறையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாக்கும் காட்சிகளைக் கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் நேற்று வெளியாகின.

ஏறாவூரில் நடந்த விபத்து ஒன்று தொடர்பில், குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் விபத்து நடந்த இடத்தை அடையாளப்படுத்தும் பணியை மேற்கொண்டபோது, குறித்த இரண்டு இளைஞர்களும், சம்பவ எல்லையின் குறுக்காக மோட்டார் பைக்கில் வேகமாக பயணித்துள்ளதுடன், சம்பவ இடத்தை அடையாளப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட நாடாவையும் இழுத்துச் சென்றுள்ளனர் என்று அமைச்சர் சரத் வீரசேகர கூறியுள்ளார்.

இதையடுத்தே, குறித்த இளைஞர்களை பொலிஸ் உத்தியோகத்தர் துரத்திச்சென்று பிடித்து, தாக்கியுள்ளாளர் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

“எனினும் இந்தத் தாக்குதலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது” என அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இந்த தாக்குதலை நடத்தியுள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் ஏறாவூரைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்களாவர்.

இன்று கைது செய்யப்பட்ட மேற்படி பொலிஸ் உத்தியோகத்தர் ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது, அவரை ஒரு லட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

தொடர்பான செய்தி: ஏறாவூரில் பொலிஸ் தாக்கிய விவகாரம்: நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்