21 மூலிகைப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட முகக் கவசம்: அமைச்சர் சுதர்ஷினியிடம் கையளிப்பு

🕔 August 30, 2021

க்டீரியா மற்றும் வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக, 21 உள்ளூர் மூலிகைப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட முகக் கவசம், ராஜாங்க அமைச்சர் டொக்டர் சுதர்ஷினி பெனாண்டோபுள்ளேயிடம் கையளிக்கப்பட்டது.

முகக்கவசத்தைத் தயாரித்த சமன் ஹெட்டியாராச்சி அதனை – சுகாதார அமைச்சின் ஆரம்ப சுகாதார பராமரிப்பு, தொற்றுநோய் மற்றும் தொற்றுநோயியல் துறை ராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளேயிடம் சுகாதார அமைச்சில் வைத்து கையளித்தார்.

பெருங்காயம், சிடார், கறுவாப்பட்டை, பாவட்டை வேர், சிவப்பு வெங்காயம், மரமஞ்சள், வேப்பிலை, கராம்பு, இஞ்சி, பச்சை மஞ்சள் ஆகியவை உட்பட 21 மூலிகைளை உள்ளடக்கி, இந்த முகக் கவசத்தை தயாரித்துள்ளதாக சமன் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

Comments