டோக்கியோ பராலிம்பிக் போட்டிகளில் இலங்கைக்கு மற்றொரு பதக்கம்

🕔 August 30, 2021

டோக்கியோவில் இடம்பெற்று வரும் பாராலிம்பிக் போட்டிகளில் இலங்கை தனது இரண்டாவது பதக்கத்தை வென்றுள்ளது.

அற்கமைய F64 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை வீரர் சமித் துலான் கொடிதுவக்கு வெண்கலப் பதக்கத்தை இலங்கைக்கு பெற்றுக் கொடுத்துள்ளார்.

இதற்கு முன்னர் F46 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை வீரர் தினேஸ் பிரியந்த ஹேரத் 67.79 மீற்றர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து உலக சாதனை படைத்து தங்கப் பதக்கத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: பராலிம்பிக் போட்டி: உலக சாதனை படைத்தார் இலங்கை வீரர்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்