சீனியின் விலையை உடனடியாகக் குறைக்க முடியாது: ராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன

🕔 August 28, 2021

சீனியின் விலையை உடனடியாகக் குறைக்க முடியாது என்றும், அடுத்த வாரம் தொடக்கம் குறைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாகவும் நுகர்வோர் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்.

சந்தையில் அதிகரித்துள்ள சீனியின் விலை குறித்து வினவப்பட்ட போது, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஒரு கிலோகிராம் சீனி 210 ரூபா வரையில் தற்போது விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், சீனியின் விலையை குறைக்க முடியாது என, சீனி இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உப தலைவர் நிஹால் செனவிரத்ன நேற்று தெரிவித்திருந்தார்.

மேலும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குத் தேவையான சீனி மாத்திரமே கையிருப்பில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், தற்போதைய நிலையில், சந்தை நடவடிக்கையின் அடிப்படையில், சீனியின் விலையை உடனடியாக குறைக்க முடியாது என நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு லசந்த அலகியவன்ன கூறியுள்ளார்.

எனினும், அடுத்துவரும் மூன்று வாரங்களில் சீனியின் விலையை 190 ரூபா, 180 ரூபா என்ற அளவுக்கு குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்