கொத்தலாவல சட்டமூலத்தை அமைச்சர் விமல் வீரசன்ச எதிர்ப்பார்

🕔 July 11, 2021

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைகழக சட்டமூலத்துக்கு எதிராக வாக்களிக்கப்போவதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

விமல் வீரவன்சவின் கட்சி உறுப்பினரும் ராஜாங்க அமைச்சருமான ஜயந்த சமரவீர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் சமல் ராஜபக்ஷவிடம் விமல் வீரவன்ச இதனை தெரிவித்துள்ளார் என்றும், விமல் வீரவன்சவின் எதிர்ப்பு காரணமாக இந்த சட்டமூலம் ஓகஸ்ட் மாதம் வரை பிற்போடப்பட்டுள்ளது என்றும் ராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

நாட்டில் தனியார் பல்கலைகழகங்களை அமைப்பதை தங்கள் கட்சி ஏற்றுக்கொள்ளாது என்றும், அச் சட்டமூத்திலுள்ள சில ஏற்பாடுகளை அகற்றாமல் அச் சட்டமூலத்தை மீண்டும் கொண்டுவந்தால் அதனை எதிர்ப்போம் எனவும் ராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்பான செய்தி: ‘கல்வியை ராணுவ மயமாக்கும்’ என அஞ்சப்படும், ‘கொத்தலாவல சட்டமூலம்’ பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்