வெலிகம பகுதியில் கைப்பற்றப்பட்ட பெருமளவு ஹெரோயின்; துபாயில் வசிக்கும் இலங்கையர் பின்னணியில்: விசாரணை ஆரம்பம்

🕔 June 14, 2021

வெலிகம கடற் பகுதியில் சனிக்கிழமை இரவு கைப்பற்றப்பட்ட பெருமளவிலான ஹெரோயின் போதைப் பொருளை அனுப்பியதன் பின்னணியில், துபாயில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் உள்ளார் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெலிகம கடற்கரையில் 219 கிலோகிராம் ஹெராயின் சனிக்கிழமை இரவு கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்திருந்ததது.

இந்த கடத்தல் தொடர்பாக 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். ஆறு சந்தேக நபர்கள் பிரதான படகில் இருந்ததாகவும், மூன்று பேர் சிறிய படகில் இருந்ததாகவும், இருவர் பொதியைப் பெறுவதற்காக நிலத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இலங்கை கடற்படை, கடலோர காவல்படை மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது, சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்னர்.

கைப்பற்றப்பட்ட ஹெராயின் ஈரான் மற்றும் பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையிலேயே துபாயில் இருந்து இலங்கைக்கு ஏராளமான போதைப் பொருள்களை அனுப்பும் சந்தேகநபர் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்பான செய்தி: 1758 மில்லியன் ரூபா பெறுமதியான 219 கிலோ ஹெரோயின் படகுகளில் சிக்கியது

Comments

புதிது பேஸ்புக் பக்கம்