ரஞ்சனுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு: விரைவில் கிடைக்கும் என்கிறார் திஸ்ஸ அத்தநாயக்க

🕔 April 29, 2021

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், விரைவில் மன்னிப்பு வழங்கப்படும் என்று நம்பப்படுகிறது என, ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

அங்குணகொலபெலஸ்ஸ சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவை புதன்கிழமை நேற்று சந்தித்து அவரது நலன் குறித்து திஸ்ஸ அத்தநாயக்க விசாரித்திருந்தார்.

பொது மன்னிப்பு தொடர்பான சட்ட நடவடிக்கைகள் மற்றும் ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், இது குறித்து ரஞ்சனுக்கு அறிவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ரஞ்சனும் தனக்கு மன்னிப்பு கிடைக்கும் என்று நம்புகின்றார் எனவும் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் ரஞ்சன் ராமநாயக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், உலகின் முன்மாதிரிகளை கருத்தில் கொண்டு மன்னிப்பு வழங்குவது நியாயமானது எனவும் திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்